ராகுலுக்கு செக்.. செங்கோட்டையை நோக்கி ‘சூரியன்’.. ஸ்டாலினின் 3வது அணி ரெடி.. உடையும் இந்தியா கூட்டணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் ஜூரம் இப்போதே உச்சக்கட்டத்தை எட்டிவிட்டது. வழக்கமாக தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி என்றாலே 'சீட்' பேரத்தில் இழுபறி நீடிக்கும். ஆனால், இந்த முறை நடப்பதோ வெறும் இழுபறி அல்ல... அது ஒரு 'பனிப்போர்'!

tamil nadu assembly elections 2026 congress

கறார் காட்டும் அறிவாலயம்!

அறிவாலய வட்டாரத்தில் விசாரித்தால், "கடந்த முறை கொடுத்தது போல 25 இடங்களெல்லாம் இந்த முறை சாத்தியமே இல்லை" என கையை விரிக்கிறார்கள். "நாங்கள் ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள மாட்டோம் என்பதில் முதல்வர் ஸ்டாலின் தெளிவாக இருக்கிறார். ஆனால், காங்கிரஸ் தரப்போ 'ஆட்சியில் பங்கு, அதிக இடங்களில் போட்டி' என அடம் பிடிக்கிறது. இது எங்களுக்கே எரிச்சலைத் தருகிறது" என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

இதற்குப் பின்னால் ஒரு பலமான கணக்கு இருக்கிறது. தே.மு.தி.க இப்போது தி.மு.க கூட்டணியில் ஐக்கியமாகிவிட்டது. கூடவே வி.சி.க, இடதுசாரிகள் என ஒரு பெரிய பட்டாளமே இருப்பதால், காங்கிரஸை கழட்டிவிட்டாலும் தங்களுக்குப் பாதிப்பில்லை என தி.மு.க தலைமை கணக்குப் போடுகிறது. கூடுதல் ஓ பன்னீர்செல்வம் இருக்கிறார். கிட்டத்தட்ட 21 கட்சிகள் திமுக உடன் உறுதியாக கூட்டணியில் உள்ளன.

தேமுதிக என்ட்ரி: சுமார் 19 ஆண்டுகளுக்குப் பிறகு தேமுதிக திமுக கூட்டணிக்கு வந்திருப்பது பெரிய பிளஸ். பிரேமலதா விஜயகாந்த் திமுகவோடு கைகோர்த்திருப்பது, வட மாவட்டங்களில் ஒரு புதிய பலத்தைக் கொடுத்துள்ளது. தேமுதிக ஒரு பலம் வாய்ந்த.. கட்டுப்பாடில்லாத குதிரை. அதை சரியாக பயன்படுத்தினால் நல்ல பலன் தரும்.

ஓ.பி.எஸ் வருகை: ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் திமுக பக்கம் சாய்ந்திருப்பது, தென் மாவட்டங்களில் ஜாதி ரீதியான வாக்குகளைத் திரட்ட ஸ்டாலினுக்குப் பேருதவியாக இருக்கும்.

டெல்லி டூ சென்னை: உடைகிறதா 'இந்தியா'?

தேசிய அளவில் 'இந்தியா' கூட்டணியின் அச்சாணியாக இருந்தவர் முதல்வர் ஸ்டாலின். ஆனால், இப்போது நிலைமை தலைகீழ்! காங்கிரஸின் பிடிவாதத்தால் அதிருப்தியில் இருக்கும் ஸ்டாலின், மம்தா பானர்ஜி (TMC), அகிலேஷ் யாதவ் (SP), அரவிந்த் கெஜ்ரிவால் (AAP) ஆகியோருடன் தொடர்ந்து நல்ல தொடர்பில் இருப்பதாகத் தகவல் கசிகிறது.

அரசியல் அரங்கில் ஓடும் லேட்டஸ்ட் கிசுகிசு இதுதான்:

மூன்றாவது அணி: காங்கிரஸையும், பா.ஜ.க-வையும் ஒதுக்கிவிட்டு ஒரு பிரம்மாண்ட 'தேசிய முன்னணி'யை உருவாக்குவது.

தலைமைப் பொறுப்பு: இந்த அணிக்கு முதல்வர் ஸ்டாலினே தலைமையேற்க வேண்டும் என இதர மாநிலக் கட்சிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஏற்கனவே இதற்கான கோரிக்கைகளை கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும், மகாராஷ்டிராவிலும் வைக்க தொடங்கிவிட்டனர். மாநில அரசியலில் காங்கிரஸ் போடும் ஆட்டம் பல மாநிலங்களில் கட்சிகள் தோல்வி அடைய காரணமாக இருந்தது. அது தமிழ்நாட்டிலும் நடக்க கூடாது என்று ஸ்டாலின் நினைக்கிறாராம். தேஜஸ்வி யாதாவிற்கு நடந்தது தனக்கு நடக்க கூடாது என்று ஸ்டாலின் நினைக்கிறாராம்.

பின்னணி: 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற முழக்கத்தோடு, மாநில சுயாட்சியை முன்னிறுத்தி ஒரு மெகா கூட்டணியை ஸ்டாலின் முன்னெடுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் இல்லையென்றால்.. 3வது இன்னும் வலுவாக இருக்கும் என்பது ஸ்டாலினின் அவதானம்!

அடுத்து என்ன?

"காங்கிரஸ் இறங்கி வராவிட்டால், தனித்து நின்றே 200 இடங்களை வெல்வோம்" என அறிவாலயத்தில் கோஷங்கள் எழுகின்றன. இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தல் என்பதால், அடுத்த சில வாரங்களில் தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய 'நிலநடுக்கம்' ஏற்படப்போவது உறுதி!

சத்தியமூர்த்தி பவன் கதவுகள் சாத்தப்படுமா? அல்லது அறிவாலயம் மனமிறங்குமா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+