அண்ணன் அப்படி பேசி இருக்க கூடாது! ஸ்டாலினுக்கு இரவே போன உளவுத்துறை ரிப்போர்ட்! சீனியர்களும் அப்செட்?
சென்னை: அமைச்சர் ஒருவரின் பேச்சு பொதுவெளியில் திமுகவுக்கு நெகட்டிவான விமர்சனங்களை உருவாக்கியிருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இன்று காலையில் உளவுத்துறை தரப்பிலிருந்து சொல்லப்பட்டிருக்கிறதாம். அவர் இப்படி கூறுவதை தவிர்த்திருக்கலாம் என்று ஆதங்கத்துடன் முதல்வரிடம் நேற்று இரவே தெரிவித்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி அடுத்த கோமுகி ஆற்றங்கரை நந்தவனம் பகுதியில் கள்ளச்சாராயம் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது. இந்த விவகாரம்தான் இத்தனை மரணங்களுக்கு காரணம். இதில் கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம், மாதவச்சேரி பகுதியில் விற்பனை செய்த பாக்கெட் சாராயத்தை சிலர் குடித்திருக்கின்றனர். இந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. உள்ளூர் போலீசாருக்கு தெரிந்தே கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66ஆக உயர்ந்து உள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுவங்கூரை சேர்ந்த 34 வயது இளைஞர் மரணம் அடைந்துள்ளார். விஷச் சாராய விவகாரத்தில் இதுவரை 25 பேரை கைது செய்துள்ளனர் சி.பி.சி.ஐ.டி. போலீசார்.
தொடரும் கைதுகள்: சமீபத்தில் இந்த வழக்கில் தொடர்புடைய அய்யாசாமி, தெய்வாரா ஆகியோரை கைது செய்தது சிபிசிஐடி போலீஸ். சிவக்குமார்(40), கதிரவன்(30) ஆகிய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி 59 உயர்ந்த நிலையில், இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது போக கல்வராயன்மலையில் சிறப்பு அதிரடிப்படையினர் மூலம் 2வது வாரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
அமைச்சர் பேச்சு: இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழக சட்டமன்றத்தில் மது விலக்கு ஆயத்தீர்வை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய மூத்த அமைச்சர் துரைமுருகன், "டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை என்பதால்தான் கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடிக்கிறார்கள்" என்று பேசிய விசயம் பொதுவெளியில் திமுகவுக்கு நெகட்டிவான விமர்சனங்களை உருவாக்கியிருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இன்று காலையில் உளவுத்துறை தரப்பிலிருந்து சொல்லப்பட்டிருக்கிறதாம். துரைமுருகன் பேச்சை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
சீனியர்கள் அப்செட்: அதேபோல , சீனியர் அமைச்சர்கள் சிலரும், அண்ணன் துரைமுருகன் இப்படி கூறுவதை தவிர்த்திருக்கலாம் என்று ஆதங்கத்துடன் முதல்வரிடம் நேற்று இரவே தெரிவித்திருக்கிறார்கள். அதில் ஒரு சீனியர் அமைச்சர், "டாஸ்மாக்கில் கிக் இல்லைன்னா கிக் ஏத்தற மாதிரி டாஸ்மாக் சரக்கை தயாரிக்கச் சொல்கிறாரா? இல்லை, கள்ளச் சாராயத்தை நியாயப்படுத்துகிறாரா? " என்று பெண்களிடம் கோபம் வரும் தலைவரே" என்று தெரிவித்திருக்கிறார்.
அப்போது ஸ்டாலினும், "பூரண மதுவிலக்கு சாத்தியமா ? இல்லையா? என்பதோடு அவர் (துரைமுருகன்) நிறுத்தியிருக்கலாம். கிக் , கிக் இல்லை என்றெல்லாம் பேசியிருக்கத் தேவையில்லை" என்று வருத்தப்பட்டுள்ளார்.
ஸ்டாலின் ரிப்போர்ட்: இப்படி கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் திமுக எதிர்பார்க்காத பிரச்சனையாக, அழுத்தமாக பல விஷயங்கள் தமிழ்நாடு அரசியலில் உருவெடுத்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் உளவுத்துறை ரிப்போர்ட் ஒன்றை கேட்கும் திட்டத்தில் இருக்கிறாராம்.
அதன்படி கள்ளக்குறிச்சி விவகாரம் மக்கள் இடையே எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது, கள்ளச்சாராய விவகாரத்தில் இன்னும் சிக்காதவர்கள் யார் யார்? அரசுக்கு எதிரான மனநிலை உள்ளதா? எடப்பாடி பழனிசாமியை மக்கள் எப்படி பார்க்கின்றனர்? விஜயின் அரசியலுக்கு ஆதரவு எப்படி உள்ளது களத்தில் என்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சில ரிப்போர்ட்டுகளை கேட்டு உள்ளாராம்.
கள்ளச்சாராய மரணத்தின் எண்ணிக்கைக் கூடுவது திமுக அரசுக்குத் தீரா விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது முதன் முறையாக கடும் கோபத்தில் இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இதன் காரணமாகவே அவர் உளவுத்துறை ரிப்போர்ட்டுகளை கேட்டு உள்ளாராம்.












Click it and Unblock the Notifications