ஸ்டாலினை அழைக்க.. தனது மொத்த கான்வாயையும் அனுப்பி வைத்த.. ஜெர்மனி மாகாண முதல்வர்.. நடந்தது என்ன?
சென்னை: ஜெர்மனியில் வட ரைன் வெஸ்ட்பாலியா மாகாண தலைமை அமைச்சர் ஹென்ரிக் வெஸ்டை சந்தித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தினார். தனது கான்வாயை அனுப்பி முதல்வர் ஸ்டாலினை ஹென்றிக் வரவேற்ற நிகழ்வு கவனம் பெற்றுள்ளது.
ஹென்ரிக் வெஸ்ட் வட ரைன் வெஸ்ட்ஃபாலியா மாகாணத்தின் தலைமை அமைச்சராக வெஸ்ட் உள்ளார். இரு தலைவர்களும் பல்வேறு முதலீடுகள், எதிர்கால புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

முதலமைச்சரை வரவேற்கும் ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தன. ஹென்ரிக் வெஸ்ட் தனது வாகன அணிவகுப்பை அனுப்பி வைத்தார். இது ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு மரியாதையாகும். அந்த நாட்டின் மரபுகளின்படி இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேச்சுவார்த்தைக்கு முன்னர் இந்த வரவேற்பு நிகழ்ந்தது.
முதலமைச்சர் ஸ்டாலின் ஹென்ரிக் வெஸ்ட் பேச்சு
முதலமைச்சர்களுக்கிடையேயான இந்த சந்திப்பு மாநில உறவுகளை வலுப்படுத்தும். இரு தரப்புக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கு இது வழிவகுக்கும். ஜெர்மனி மற்றும் தமிழ்நாட்டின் நலன்களுக்கு இது உதவும். இத்தகைய உயர்மட்ட சந்திப்புகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய விவகாரங்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் செய்த போஸ்டில், ஜெர்மனியின் டஸ்செல்டார்ஃப் நகரில் வட ரைன்-வெஸ்ட்பாலியா மாகாண முதல்வர் ஹென்ட்ரிக் வூஸ்ட்டை சந்தித்தேன். இளம் வயதிலேயே இத்தகைய உயர்ந்த பதவியை அவர் எட்டியது பாராட்டுக்குரியது. வரவிருக்கும் ஆண்டுகளில் அவர் மேலும் சாதனைகள் படைக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்.
ஸ்டாலின் ஜெர்மனி
இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றும் தமிழ்நாடு, மற்றும் ஜெர்மனியின் பொருளாதார வளர்ச்சிக்கு வலு சேர்க்கும். தமிழ்நாடு மற்றும் வட ரைன்-வெஸ்ட்பாலியா ஆகிய இரு பவர் ஹவுஸ்களும் நம்பிக்கை மற்றும் நல்லெண்ணத்துடன் இணைந்து செயல்பட முன்வந்தன.
தமிழ்நாட்டில் திராவிட மாடலின் கீழ் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வளர்ச்சி குறித்து நான் விளக்கினேன். வட ரைன்-வெஸ்ட்பாலியாவில் உள்ள முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ள வாய்ப்புகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்ற எனது விருப்பத்தைப் பகிர்ந்து கொண்டேன். மேலும், தமிழகத்திற்கு வருகை தருமாறு அவருக்கு அன்பான அழைப்பையும் விடுத்தேன்., என்று குறிப்பிட்டு உள்ளார்.
தமிழ்நாட்டில் ஜெர்மனி முதலீடு
முதல்வர் ஸ்டாலினின் இந்த பயணத்தில் பிரேக்கிங் சிஸ்டம்களின் உலகளாவிய முன்னணி நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த க்னோர்-பிரெம்ஸ் (Knorr-Bremse), காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரயில்வே கதவுகள் மற்றும் பிரேக்கிங் சிஸ்டம்ஸ் தயாரிக்கும் ஆலையை அமைக்க ₹2,000 கோடி முதலீடு செய்ய உறுதியளித்துள்ளது. இந்த புதிய திட்டம் மூலம் 3,500 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
இந்நிறுவனம் சென்னையிலும் ஒரு தொழில்நுட்ப மையத்தை நிறுவ உள்ளது. ஜெர்மனியின் டஸெல்டோர்ஃப் நகரில் நடைபெற்ற இந்த ஒப்பந்தத்தில் க்னோர்-பிரெம்ஸ் தலைமைச் செயல் அதிகாரி மார்க் லிஸ்டோசெல்லா மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் கையெழுத்திட்டனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 10 நாள் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி பயணத்தின்போது இது நிகழ்ந்தது.
Two powerhouses, one vision for the future
— M.K.Stalin (@mkstalin) September 2, 2025
In Düsseldorf, I met NRW Minister-President Thiru. @HendrikWuest — a leader who has assumed high office at such a young age, and whom I warmly wish to see reach even greater heights in the years ahead.
Tamil Nadu, India’s industrial… pic.twitter.com/q138cWakql
அதிகாரிகள் வெளியிட்ட தகவல்களின்படி, க்னோர்-பிரெம்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் மேற்கொள்ளும் முதல் பெரிய அளவிலான உற்பத்தி முதலீடு இதுவாகும். இதன் மூலம் தமிழ்நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் ரயில்வே உதிரிபாகங்கள் மற்றும் மேம்பட்ட பொறியியல் சூழலியல் மேலும் வலுவடையும்.
இந்த அறிவிப்பு, க்னோர்-பிரெம்ஸ் நிறுவனம் தனது முதல் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு மையத்தை தமிழ்நாட்டில் நிறுவிய சில நாட்களிலேயே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், நோர்டெக்ஸ் குழுமம் (Nordex Group) மற்றும் ஈபிஎம்-பாப்ஸ்ட் (ebm-papst) நிறுவனங்களும் தமிழ்நாட்டில் தங்கள் செயல்பாடுகளை விரிவாக்க ₹1,201 கோடிகளை முதலீடு செய்து, 2,750 வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் தமிழக அரசுடன் கையெழுத்தாகின.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications