பணமழைதான்.. அரசு ஊழியர்களுக்கு அடிக்க போகும் ஜாக்பாட்.. அடித்து சொல்லும் ஸ்டாலின்.. நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்தியில் இந்தியா கூட்டணியின் ஆட்சி அமைந்தால் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

லோக்சபா தேர்தல் பிரச்சாரம் நாடு முழுக்க சூடு பிடித்துள்ளது. இதையடுத்து கடந்த நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது லோக்சபா தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை. காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப சிதம்பரம் தேர்தல் ஆகியோர் அறிக்கையை வெளியிட்டனர்.

CM Stalin gives a big promise to government employees of India


பாஜக செய்த முறைகேடுகள் எல்லாம் விசாரிக்கப்படும். பணமதிப்பிழப்பு, ரபேல் ஒப்பந்தம், பெகாசஸ் உளவு, தேர்தல் பத்திர திட்டம் ஆகியவை குறித்து விசாரணை நடத்தப்படும். இதனால் விசாரணை ஆணையம் அமைத்து நேர்மையான விசாரணை நடக்கும். பொதுப்பட்டியலில் உள்ள பலதுறைகளை மாநில பட்டியலுக்கு மாற்றுவது குறித்து ஆய்வு செய்யப்படும். மாநிலங்களிடம் இதற்காக ஆலோசனை நடத்தப்படும்.

நாடு முழுவதும் சமூக, பொருளாதார, சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படும். இடஒதுக்கீடு உச்ச வரம்பு 50% என்பதை உயர்த்த சட்டத்திருத்தம் செய்யப்படும். ST, ST, OBC பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும். ST, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும். என்று பல அசத்தல் அறிவிப்புகள் இதில் இருந்தன.

இப்படிப்பட்ட நிலையில்தான் மத்தியில் இந்தியா கூட்டணியின் ஆட்சி அமைந்தால் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

> 53,000 தொகுப்பூதிய ஆசிரியர்களுக்குக் காலமுறை ஊதியம், ஊதியக்குழு பலமுறை மாற்றம்.
> அதிமுக ஆட்சி முடக்கிவிட்டுப் போன அகவிலைப்படி உயர்வையும் சேர்த்து 2021-இல் தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதும் ஒரே நேரத்தில் 14% வழங்கப்பட்டது.
> ஒன்றிய அரசுக்கு இணையான அகவிலைப்படி உயர்வு; அரசு ஊழியர்கள் இறந்து போனால் வழங்கப்படும் குடும்ப நல நிதி ரூ. 5 லட்சமாக உயர்வு.
> அ.தி.மு.க. ஆட்சியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள், துறை ரீதியான நடவடிக்கைகள் ரத்து.
பள்ளிக்கல்வித்துறை ஆணையர் பணியிடத்தை மாற்றி இயக்குநர் பணியிடத்தை மீண்டும் கொண்டு வந்தது.
> ஆசிரியர்களின் குழந்தைகளின் உயர்கல்விக்கு வழங்கப்படும் நிதி ரூ. 50 ஆயிரமாக உயர்வு; 2,800 முதுகலை ஆசிரியர்கள் நியமனம், பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு ரூ. 2,500 ஊதிய உயர்வு.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காகப் பணிபுரியும் சிறப்பு பயிற்றுநர்களுக்கு தொகுப்பூதியம் ரூ. 5,000 ஆக உயர்வு.
>அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதியம் பற்றியெல்லாம் முழுப்பக்க விளம்பரம் கொடுத்து - அசிங்கப்படுத்தி் - எள்ளி நகையாடியவர் பழனிசாமி.
தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஊதியத்தை முதலமைச்சராக இருந்துகொண்டே மோசமாகக் கிண்டலடித்து மேடையில் பேசியவர் பழனிசாமி!
எஸ்மா - டெஸ்மா கொண்டு வந்து நள்ளிரவில் அரசு ஊழியர்களைக் கைது செய்தது அலங்கோல அ.தி.மு.க. ஆட்சி!
> எஸ்மா, டெஸ்மா வழக்குகளை ரத்து செய்து, அரசு ஊழியர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றியது திமுக ஆட்சி!
> இந்தியாவிலேயே முதன்முதலாகப் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியது அ.தி.மு.க. ஆட்சி.
>அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வினை முடக்கி வைத்து, ஆசிரியர்கள் பெற்று வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதிய முறையை ரத்து செய்துவிட்டுப் போனவர் பழனிசாமி.
இன்று அவர் வடிக்கும் நீலிக்கண்ணீருக்குப் பின்னால் அதிகாரப் பசியும் - துரோகத்தின் ருசியும்தான் இருக்கிறது.
>சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தாமதம்தானே தவிர, அவை நிராகரிக்கப்படவில்லை.
>அந்தத் தாமதம் கூட பழனிசாமி உருவாக்கி விட்டுச் சென்ற நிதி நெருக்கடியால் ஏற்பட்டுள்ளதுதான்.
>கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற இயலாத நிலைமை பற்றி அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களிடம் ஒளிவு மறைவின்றி விளக்கிச் சொல்லும் ஒரே அரசு திமுக அரசுதான்!, என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+