தண்ணீர் இருந்தால் தாமரை மலர்ந்துவிடுமா?.. பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
நீர் நிலைகளில் மலரும் பூ தான் தாமரை, அதற்காக எல்லா இடங்களிலும் மலர்ந்து விடாது- முதல்வர் ஸ்டாலின்
சென்னை: நீர் நிலைகளில் மலரும் பூ தான் தாமரை, ஆனால் அதற்காக எல்லா இடத்திலேயும் மலர்ந்துவிடாது என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உங்களில் ஒருவன் பதில்கள் என்ற தலைப்பில் கேள்விகளுக்கு பதில் அளித்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.
முக்கியமான கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்து இன்று வீடியோ வெளியிட்டுள்ளார். அதன் தொகுப்பை பார்ப்போம்.

நெகிழ வைத்த மனிதர்
கேள்வி: உங்களை நெகிழ வைத்த மனிதர் அல்லது சம்பவம் ஏதாவது இருக்கிறதா?
பதில்: சிறைக் கைதிகள் படிக்கின்ற வகையில் சிறைச்சாலைகளில் நூலகம் அமைக்கும் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இதற்காகச் சிறைத்துறைக்குப் பலரும் ஆர்வத்தோடு புத்தகங்களை வழங்கி வருகிறார்கள். இராமநாதபுரத்தைச் சேர்ந்த பெரியவர் - 92 வயதான பாலகிருஷ்ணன் அவர்கள், தனது சேகரிப்பில் இருந்த 300 புத்தகங்களையும் சிறைத்துறைக்கு வழங்கி இருக்கிறார். தன் வாழ்நாளெல்லாம் சேகரித்த புத்தகங்களில் ஒரு பகுதியை சிறைக்கைதிகள் பயன்பெற வேண்டும் என்று கொடுத்திருக்கும் அவரது முடிவு மிகவும் பாராட்டத்தக்கது. உண்மையிலேயே இந்தச் செய்தியைப் பார்த்து நெகிழ்ந்து போனேன்.

இரட்டை இலை சின்னம்
கேள்வி: இரட்டை இலைச் சின்னம் அதிமுகவிற்கு கிடைத்துவிட்டதால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அந்த கட்சிக்கு சாதகம் என்கிற கருத்து பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: கடந்த நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற, ஊரக உள்ளாட்சித் தேர்தல் - இவ்வாறு இதற்கு முன்னர் நடந்த எல்லாத் தேர்தல்களிலும் தோற்கடிக்கப்பட்ட சின்னம்தான் இரட்டை இலை என்பதை மறந்துடக் கூடாது.

பிரதமர் நரேந்திர மோடி பதிலுரை
கேள்வி: நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திரமோடி ஆற்றிய பதிலுரை பற்றி உங்கள் பார்வை என்ன?
பதில்: யார் கேட்ட கேள்விக்கும் பதில் சொல்லாமல், மணிக்கணக்கில் எவ்வாறு பேசுவது என்பதை நான் தெரிந்து கொண்டேன். பா.ஜ.க ஆட்சி மீதும், பிரதமர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. அதற்கு பிரதமர் பதில் சொல்லவில்லை. ஆனால் எல்லாவற்றுக்குமே 'நாட்டு மக்கள் எனக்குக் கவசமாக இருக்கிறார்கள்' என்பதை மக்கள் சொல்லவில்லை, அவராகச் சொல்லிக் கொள்கிறார்.

சேறு வீசுங்கள் தாமரை மலரும்
சேறு வீசுங்கள் தாமரை மலரும்' என்று சொல்லி இருக்கிறார் பிரதமர். நீர்நிலைகளில் மலரும் பூதான் தாமரை, அதற்காகத் தண்ணீர் உள்ள எல்லா இடத்திலேயும் மலர்ந்துவிடாது. சேறு இருக்கிற இடமெல்லாம் மலர்ந்துவிடாது. இவ்வாறு வார்த்தை ஜாலங்கள்தான் அவரது உரையில் இருந்ததே தவிர, பிபிசி ஆவணப்படம் பற்றியோ, அதானி விவகாரம் குறித்தோ அவர் விளக்கம் அளிக்கவில்லை.

சேது சமுத்திர திட்டம்
நாட்டுக்கு கொடுத்த வாக்குறுதியில் எதை நிறைவேற்றி இருக்கிறோம் என்று பிரதமர் வரிசைப்படுத்தவில்லை, சேது சமுத்திரத் திட்டம், நீட், மாநில உரிமைகள், ஆளுநரின் தலையீடுகள். ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காதது என எத்தனையோ கேள்விகளைத் தி.மு.க உறுப்பினர்கள் கேட்டார்கள் அதற்கும் பிரதமர் உரையில் பதில் இல்லை.குறிப்பாக தமிழ்நாட்டுக்குச் சொல்ல பிரதமரிடம் பதில் இல்லை.

ஆன்லைன் ரம்மி
கேள்வி: ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்கிறது. ஆனால் அதற்கான தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் கொடுக்காமல் ஆளுநரின் பிடிவாதமும் தொடர்கிறதே?
பதில்: ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சிக்கி மீள முடியாமல் தற்கொலை செய்துகொள்பவர்களைப் பற்றிய செய்திகள் தினந்தோறும் நாளிதழ்களில் வருகிறது. தன்னுடைய மகன் ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்காக வேலை பார்த்த கம்பெனியில் பணத்தைக் கையாடல் செய்திருக்கிறான் என்று தெரிந்து அவனது அம்மா தற்கொலையே செய்து கொண்டார். சென்னை வியாசர்பாடியில்தான் இது நடந்திருக்கிறது. மகன் தலைமறைவாகிட்டான். இது ஒரு சம்பவம். நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த ரியாஸ் கான் என்பவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்திருக்கிறார். காவிரி ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். இது இரண்டாவது சம்பவம்.

சட்டமன்றத்தை அவமதிக்கும் ஆளுநர்
சேலம் மாவட்டம் ஆத்தூர் உடையார்பாளையத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிரபு, தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது மூன்றாவது சம்பவம். மதுரையில் குணசீலன் என்கிற கல்லூரி மாணவன் தற்கொலை செய்து கொண்டார். இவை அனைத்தும் கடந்த ஒரு வாரத்திற்குள் நடந்தவை. இவை எல்லாம் தமிழ்நாடு ஆளுநருக்குத் தெரியவில்லையா? இன்னும் எத்தனை உயிர்கள் பலியானால் அவர் கையெழுத்து போடுவார்? இவ்வாறு ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம், அதன்படி உரிய சட்டத்தை ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய சட்டமன்றத்தை அவமதிக்கிறார் ஆளுநர்.

அவசர சட்டம்
அமைச்சரவை அனுப்பிய அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர், அதே சட்டத்தைச் சட்டமன்றம் மூலமாக நிறைவேற்றி அனுப்பினால் 3 மாதமாக ஒப்புதல் வழங்காமல் இருப்பதுதான் மர்மமாக இருக்கிறது.இதில் என்ன கொடுமை என்றால் ஆன்லைன் விளையாட்டுகளில் வெல்லக் கூடிய தொகைக்கு வரி போடுவதுதான். ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் இது இருக்கிறது. ஆன்லைன் விளையாட்டுகளைத் தடை செய்யாமல் அதை அங்கீகரிக்கிற வகையில் வரி போடுகிற இவர்களை என்ன சொல்வது? என முதலமைச்சர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.
-
ரஞ்சனா நாச்சியார் ஒயிட் பேப்பர் காட்டி விஜய்யை அலற விட்டாரே? ராமநாதபுரம் திமுகவுக்கு அதிர்ஷ்டம்தான் -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள்.. ஒன்றில் மட்டுமே தனி சின்னம்! தொகுதி பங்கீடு கையெழுத்து -
18-ஆ? 25-ஆ காங்கிரஸுக்கு? அப்ப அதிமுக 210, திமுக 200 சீட்? சென்னை டூ கன்னியாகுமரி வரை திடீர் சேஞ்ச்? -
Velmurugan's TVK: எதே! 10 சீட்டா? வேல்முருகனின் "பிளானால்" அதிர்ந்த திமுக! கடைசியில் சொன்னது என்ன? -
பெரம்பூர் தொகுதியில் விஜய் களமிறங்கினால்.. சேகர்பாபுவை களமிறக்க திமுக திட்டம்? ஆலோசனையில் அறிவாலயம்! -
முடிவுக்கு வராத காங்கிரஸ் - திமுக சீட் ஷேரிங் பிரச்னை.. காங். தேர்வு செய்யும் 28 தொகுதிகளால் சிக்கல் -
வருகிறார் மாஸ்டர்மைண்ட்.. டெல்லி களமிறக்கும் ஐபிஎஸ்.. சரியாக தமிழக தேர்தல் நேரத்தில் பயங்கர பிளான்! -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
அதிமுக கூட்டணியில் தவெக விஜய்? மத்திய அமைச்சர் எல்.முருகன் சொன்ன பதிலால் பரபரப்பு! -
NDA கூட்ட பேனரில் எடப்பாடி பழனிசாமி படம் புறக்கணிப்பு.. அதிர்ச்சியில் அதிமுகவினர்! என்னங்க நடக்குது? -
Anbumani: இந்த 108 நாட்களில்! சவுமியா உடலில் ஆவி புகுந்துவிட்டது! அன்புமணி கலகல!












Click it and Unblock the Notifications