லீகல் டீமை வர சொல்லுங்க! ஸ்டாலின் கையில் அதிமுகவின் "குடுமி".. "இது" மட்டும் நடந்தால்! ஆட்டம் க்ளோஸ்
சென்னை: முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் முக்கியமான ஆலோசனைகளை நடத்தி உள்ளதாக கோட்டை தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டு அரசியலை ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை உலுக்கி போட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக இந்த குழு அமைக்கப்பட்டது.
கடந்த 3 வருடமாக இந்த குழு தீவிர விசாரணைகளை நடத்தி வந்தது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த அறிக்கை தமிழ்நாடு அரசிடம் வழங்கப்பட்டது.

அறிக்கை
இதையடுத்து தமிழ்நாடு அமைச்சரவையில் கடந்த மாதம் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தற்போது சட்டசபையிலும் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு பொதுவில் வெளியாகி உள்ளது. இந்த அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சி அளிக்கும் விஷயங்கள், தகவல்கள் இடம்பெற்றுள்ளன. சசிகலா. கேஎஸ் சிவக்குமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர்,விஜயபாஸ்கர். அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேரை குற்றம் செய்தவர்களாக கருதி விசாரிக்க வேண்டும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

என்ன இருக்கிறது?
இந்த அறிக்கையில், 2012-க்குப் பிறகு ஜெ- சசிகலா இடையே சுமூகமான உறவு இல்லை. ஜெயலலிதா மயக்கத்துக்குப் பிந்தைய நிகழ்வுகள் ரகசியமாக்கப்பட்டுவிட்டன. ஜெ. டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என பொய்யான அறிக்கையை வெளியிட்டனர். ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருந்த போது, அவருக்கு செய்ய வேண்டிய சிகிச்சைகள் பற்றி எதுவும் அவரிடம் தெரிவிக்கப்படவில்லை என்று ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது.

சசிகலா
ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்துள்ளார். அவர் மீட்டிங்கில் எல்லாம் கலந்து கொண்டு இருக்கிறார். ஆனால் இதை எதையும் ஜெயலலிதா தெரிவிக்கவில்லை. அவர் சுயநினைவில் இருந்த போதும் அவரின் உடல்நல பிரச்சனைகள் பற்றி அவரிடம் யாருமே பேசவில்லை. ஜெயலலிதாவிற்கு சரியாக ஆஞ்சியோ சிகிச்சைஅளிக்கப்படாததும், அவருக்கான வெஜிடேஷன் தொற்று அகற்றப்படாததும் அவரின் மரணத்திற்கு முக்கிய காரணம் என்று அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

விசாரணை
ஜெயலலிதாவுடன் சசிகலா மீண்டும் இணைந்த பிறகு இருவருக்கும் சுமூக உறவு இல்லை பிரிவிற்கு பின் இவர்கள் சேர்ந்த போது அவர்களிடம் சுமுகமான உறவு இல்லை. ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சையே அளிக்கவில்லை. குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்த தவறி உள்ளனர். ஜெயலலிதா இறந்த நேரத்திலும் முரண்பாடு என ஆறுமுகசாமி ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது, என்றும் இந்த அறிக்கையில் சரமாரியாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு உள்ளன.

லீகல்
இந்த அறிக்கை நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் முன்பே அதை பற்றி முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சட்ட நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின் முக்கியமான ஆலோசனைகளை நடத்தி உள்ளார். அதன்படி.. இந்த அறிக்கையை தொடர்ந்து என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கலாம். போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டால், வழக்கு தொடுத்து விசாரணை நடத்தலாமா. அல்லது வெறுமனே அறிக்கையை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்தலாமா என்று ஆலோசனை செய்துள்ளார்.

அதிமுகவிற்கே சிக்கல்
முக்கியமாக எய்ம்ஸ் அறிக்கை பற்றியும் கேட்டுள்ளார். எய்ம்ஸ் அறிக்கையை மொத்தமாக ஆறுமுகசாமி ஆணையம் புறக்கணித்துள்ளது. ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை என்பது ஒரு லீகல் ரிப்போர்ட்டபி அறிக்கை. ஆனால் எய்ம்ஸ் அறிக்கை என்பது மருத்துவ அறிக்கை. அப்படி இருக்கும் போது கோர்ட்டில் சிக்கல் வராதா. எய்ம்ஸ் அறிக்கையே நிராகரித்து உள்ளதால் சிக்கல் வராதா என்றும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்துள்ளார் என்கிறார்கள்.

முதன்மை செயலாளர்
தற்போது சுகாதாரத்துறை முதன்மை செயலாளரிடம் ஆதாரங்களை திரட்ட உத்தரவிடப்பட்டு உள்ளது. சட்ட நுணுக்கங்களை பார்த்து பெரும்பாலும் முழுமையான போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்கிறார்கள். ஏற்கனவே தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் குற்றவாளிகள் எல்லாம் கூண்டில் ஏற்றப்படுவார்கள் என்று முதல்வர் கூறியுள்ளார். இதனால் கிட்டத்தட்ட அதிமுகவின் குடுமியை ஸ்டாலின் கையில்தான் உள்ளது. தற்போது இந்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையிலும் சசிகலா, விஜயபாஸ்கர் என்று பலரின் பெயர்கள் சிக்கி உள்ளன. ஒருவேளை இது போலீஸ் விசாரணையாக மாற்றப்பட்டால் பல்வேறு கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
-
ரஜினிகாந்த் சொன்ன ஒற்றை வார்த்தை.. அதிமுகவை பாதாளத்துக்கு தள்ளிய ரிசல்ட்! 173 இடங்களில் திமுக வெற்றி -
தமிழக தேர்தல் வரலாறு: ‘ஜெ’ அணியா? ‘ஜா’ அணியா? - செங்குத்தாக உடைந்த அதிமுக.. அன்று நடந்தது என்ன? -
ஒரு கை பார்த்துற வேண்டிதான்.. பலத்தை காட்ட தயாராகும் சீனியர்கள்! சசிகலாவுடன் கைகோர்க்கும் ராமதாஸ்? -
அரசியல் முட்டு சந்தில் சின்னம்மா? திக்கு தெரியாமல் தவிக்கும் தைலாபுரம் அய்யா? 2026ல் போடும் கணக்கு! -
சசிகலா ஆவடி ஆட்டம் ஆரம்பம்.. சின்னம்மா மெகா ஸ்கெட்ச்! தென்மாவட்டம் இருக்க, சென்னை ஏன்? யாருக்கு செக் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!












Click it and Unblock the Notifications