• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜெயராஜ், பென்னிக்ஸ் கிறிஸ்தவர்கள்.. மாணவி இந்து! ஸ்டாலினை மத அடிப்படையில் விமர்சித்த எச்.ராஜா

Google Oneindia Tamil News

lede: விருதுநகர்: ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த சுஜித், சாத்தான்குளத்தில் லாக் அப் மரணமடைந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கிறிஸ்தவர்கள் என்பதாலேயே முதலமைச்சர் ஸ்டாலினும் அவரது குடும்பத்தினரும் அங்கு சென்றார்கள் எனவும் ஸ்டாலின் குடும்பம் இந்துக்களுக்கு விரோதமானது என்றும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சாமி தரிசனம் செய்தார்.

 தமிழ்நாடு என்பது வெறும் வார்த்தையல்ல.. ரத்தமும் சதையும் கொண்ட போராட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்! தமிழ்நாடு என்பது வெறும் வார்த்தையல்ல.. ரத்தமும் சதையும் கொண்ட போராட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் தனியார் பள்ளி மாணவி இறந்து ஆறாவது நாளாக உடலை பெற மறுத்து இருக்கிறார்கள்.

அரசு செயல்படவில்லை

அரசு செயல்படவில்லை

ஒரு பிரச்சனையை தீர்க்க மாநில அரசு நிர்வாகம் இத்தனை நாள்கள் எடுத்துக் கொண்டுள்ளது. ஸ்டாலின் அரசாங்கம் கையாலாகாத அரசாங்கம். இந்த அரசாங்கத்தின் எந்த செயல்பாடும் இல்லை என்பதற்கு இந்த ஒரு சம்பவமே உதாரணம். மணப்பாறையில் தந்தை தோண்டிய ஆழ்துளை கிணற்றில் மகன் விழுந்து உயிரிழந்தான். ரூ.20 லட்சம் எடுத்துக் கொண்டு ஸ்டாலின் அவரது மகன் உதயநிதி, கனிமொழி அங்கு சென்றார்கள்.

இந்துக்களுக்கு எதிரான அரசு

இந்துக்களுக்கு எதிரான அரசு

சாத்தான்குளம் லாக்கப் டெத் சம்பவத்திற்கும் சென்றார்கள். இருவரும் கிறிஸ்தவர்கள் என்பதால்தான் சென்றார்கள். பள்ளி மாணவி இந்து என்பதால் இவர்கள் செல்ல வில்லை. ஸ்டாலின் குடும்பம் இந்துக்களுக்கு விரோதமான குடும்பம். திமுக அரசாங்கம் இந்துக்களுக்கு எதிரானது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உடனடியாக 25 லட்சம் தமிழக அரசு இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.

டிஜிபியை செயல்படவிடாமல் தடுக்கின்றனர்

டிஜிபியை செயல்படவிடாமல் தடுக்கின்றனர்

இந்துக்கள் என்றால் தமிழ்நாட்டில் சாகப் பிறந்தவர்களா? ஸ்டாலின் அரசாங்கம் அரசியல் ரீதியாக மிகப்பெரிய தவறு செய்திருக்கிறது. நான்கு நாட்கள் கழித்து ஐந்தாவது நாளில் பள்ளி வாகனங்கள் சூறையாடப்பட்டு இருக்கின்றன. காவல்துறை ஏன் கலவரத்தை தடுக்கவில்லை? டிஜிபிக்கு சைக்கிளில் செல்வதற்கும் செல்பி எடுத்து போடுவதற்கும் மட்டும்தான் அதிகாரம் இருக்கிறது. டிஜிபியை செயல்படவிடாமல் முதலமைச்சரின் செயலாளர் அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.

Recommended Video

  Nilai Maranthavan திரைப்படத்திற்கு Intelligent Police மிரட்டலா? - H Raja கேள்வி *TamilNadu
  யார் காரணம்?

  யார் காரணம்?

  தமிழ்நாடு நிர்வாகம் இறந்து போய்விட்டது. இதுகுறித்து முதலமைச்சர் விசாரணை நடத்தி தெளிவுபடுத்த வேண்டும். பள்ளிக்கூடத்தில் வாகனங்கள் நொறுக்கப்படும்போது நீங்கள் ஏன் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். கலவரத்தை செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு பார்த்துக் கொண்டிருந்தீர்களா? சிசிடிவி காட்சிகளை வைத்து ஏன் கைது செய்யவில்லை? என்ன நடவடிக்கை எடுத்துள்ளது காவல்துறை? இது காரணம் மாணவர்கள் இயக்கமா, ஜாதி அமைப்பினரா, அல்லது ரவுடிகளின் கூட்டமா என்று சொல்ல வேண்டும்." என்றார்.

  English summary
  CM Stalin, His family and DMK government are against Hindus - BJP H.Raja on Kallakurichi school girl death
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X