கோவை & மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல்? “பட்ஜெட்”.. 6 விஷயங்களை நினைவூட்டிய ஸ்டாலின்!
சென்னை: நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டில், 3 ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி விடுவிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் 2024-25 ஆம் நிதியாண்டிற்கான விரிவான பட்ஜெட், வரும் 23 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. பிரதமராக மோடி மூன்றாவது முறையாக பதவியேற்ற பின், முதல்முறையாக நாளை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. அதைதொடர்ந்து, பட்ஜெட்டை, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் 23 ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார்.

மோடி 3.0 அரசின் முதல் பட்ஜெட் என்பதால், இதன் மீது பல்வேறு எதிர்பார்ப்புகள் நிலவுகிறது. குறிப்பாக நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையிலும், வரிச்சுமையை குறைக்கும் வகையிலும் பல்வேறு அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவு செய்யப்படும் என நம்புகிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், 3 ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் உள்ள சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை விடுவிக்கப்படும், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதள பதிவில், "நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை விடுவிக்க வேண்டும்.
தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல் வழங்க வேண்டும்.
பத்தாண்டுகளாக வருமான வரிச் சுமை குறைக்கப்படும் என்ற நடுத்தரக் குடும்பங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும்.
கோவை மற்றும் மதுரை மெட்ரோ இரயில் திட்டங்களுக்கான ஒப்புதல் அளிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திடப் போதிய நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும்.
கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்த வேண்டும்.
என்பது உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ஒன்றிய அரசு நிறைவு செய்யும் என்று நம்புகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
-
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications