கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாத பாஜக.. ஒரே நாடு ஒரே தேர்தலை சுட்டிக்காட்டி கிண்டல் செய்த ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ‛ஒரே நாடு, ஒரே தேர்தல்' முறையை கொண்டு வர முயலும் மத்திய பாஜகவுக்கு நாடாளுமன்ற தேர்தலை ஒரே கட்டமாக நடத்த முடிந்ததா? 90 சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை 3 கட்டமாக நடத்துகிறது. இது ‛கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவர்கள் வானத்தில் ஏறி வைகுண்டத்தை காட்ட சொல்வார்களாம்' அதுபோல் இருக்கிறது'' என முதல்வர் ஸ்டாலின் கிண்டல் செய்தார்.

திமுக உருவாகி 75 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக இன்று காஞ்சிபுரத்தில் பவளவிழா நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரத்தில் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி திடலில் இன்று மாலை 5 மணிக்கு விழா தொடங்கியது.

dmk mk stalin kanchipuram

இந்த விழாவில் முதலமைச்சரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் உடன் திமுக கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் மத்திய பாஜக அரசு ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' நடைமுறையை கொண்டு வர முயற்சிப்பதை முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்தார். அதோடு ‛‛கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவர் வானத்தில் ஏறி வைகுண்டத்தை காட்ட சொல்வார்கள்'' என்று பாஜகவை கிண்டலும் செய்தார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: திமுகவின் அடிப்படை கொள்கைகள் சமூதாயத்தின் அடிப்படை கெள்கைளாக உள்ளது.

இது சமுதாயத்தை சீர்த்திருத்தும். பொருளாதாரம் தத்துவம், சமத்துவம், ஜனநாயகத்தை உருவாக்க தான் கழகம் தோன்றியது. இது நிறைவேற்ற தான் கட்சியும், ஆட்சியும் தான் இருக்கிறது. இந்த 3 கொள்கைகளை நிறைவேற்ற அதிகாரம் கொண்ட மாநிலம் தேவை. இதனால் தான் அண்ணா மாநில சுயாட்சி கொள்கைகைள குரல் கொடுத்தார். கோட்டையில் முதல்வர்கள் கொடியேற்றும் உரிமையை கருணாநிதி பெற்று கொடுத்தார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மாநில சுயாட்சிக்காக பேசி வருகிறோம்.

ஆனால் இப்போதைய மத்திய அரசு மாநிலங்களை, யூனியன் பிரதேசமாக மாற்ற முயற்சிக்கிறது. மாநிலங்களை ஒடுக்கி ஒற்றை ஆட்சி தன்மையை கொண்டு வர ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' முறையை கொண்டு வர பாஜக முயற்சிக்கிறது. ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' சாத்தியமானதா? என்று கேட்டால் 1967 ம் ஆண்டு வரை நாடாளுமன்றம், சட்டமன்றத்துக்கு ஒன்றாக தானே தேர்தல் நடந்தது என்று கூறுகிறார்கள். ஆனால் ஒன்றை நினைத்து பார்க்க வேண்டும்.

அப்போதைய இந்தியாவும், இன்றைய இந்தியாவும் ஒன்றா? அன்றைய வாக்காளர்கள் எவ்வளவு? இன்றயை வாக்காளர்கள் எவ்வளவு?. ஆதாரத்துடன் நான் பேசுகிறேன். நம் நாட்டில் 28 மாநிலம், 8 யூனியன் பிரதேசங்கள் உள்ளது. மொத்தம் 4 ஆயிரத்துக்கும் அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும். அதேபோல் 1951 மக்களவை தேர்தலில் மொத்த வேட்பாளர் 1874, 2024 நாடாளுமன்ற தேர்தலில் 8,360 பேர் போட்டியிட்னர். அன்றைய தேர்தலும் இன்றைய தேர்தலும் ஒன்றா? நாம் எழுப்பும் பல்வேறு கேள்விகளில் முக்கியமானது இதுதான். நாடாளுமன்றத்துக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடிந்ததா? 7 கட்டங்களாக தான் தேர்தலை நடத்த முடிந்தது.

இது எப்படி இருக்கிறது என்றால் ‛கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவர்கள் வானத்தில் ஏறி வைகுண்டத்தை காட்ட சொல்வார்களாம்' அதுபோல் இருக்கிறது. இப்போது காஷ்மீரில் தேர்தல் நடக்கிறது. 90 சட்டமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்ய 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இப்படியான சூழலில் நாடாளுமன்றம், சட்டமன்றத்துக்கு ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' என சொல்வதில் வெட்கமில்லையா? ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கலாசாரம் என ஒரே பாட்டை பாடி கொண்டிருக்கிறார்கள். இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு விரோதமானது. இதனால் என்ன நடக்கும். மாநில அரசுகளின் பதவிக்காலம் குறையும். மாநிலங்களில் குழப்பம் ஏற்படும். முன்கூட்டியே ஆட்சிகள் கலைக்கப்படும்'' என்று விமர்சனம் செய்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+