எனக்கு ரிப்போர்ட் வருது.. கவனமாக இருங்க.. ஸ்டாலின் அனுப்பிய "வார்னிங்".. தேர்தலுக்கு இடையே என்ன இது?
சென்னை: லோக்சபா தேர்தலுக்கு இடையில் அமைச்சர்களுக்கு, கட்சி நிர்வாகிகளுக்கு முக்கியமான மெசேஜ் ஒன்றை முதல்வர் ஸ்டாலின் அனுப்பி இருக்கிறாராம். கூட்டணி கட்சிகள் தொடர்பாக முக்கியமான உத்தரவு ஒன்றை முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ளாராம்.
லோக்சபா தேர்தலுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகிறது. தினமும் பிரச்சாரத்திற்கு இடையே நேரம் கிடைக்கும் போதே மா.செ.க்களுடன் காணொலி காட்சி வழியாக தேர்தல் தொடர்பாக விவாதிக்கவிருக்கிறார்.

ஸ்டாலினுக்கு செல்லும் தகவல்: தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இருக்கும் முதல்வர் ஸ்டாலின், ஒரு நாளைக்கு 2 தொகுதிகளில் வலம் வருகிறார். பிரச்சாரத்தில் தீவிரமாக இருக்கும் அதே சமயத்தில், கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகளையும் அரவணைத்து வேட்பாளர் அறிமுக கூட்டங்களை திமுக நடத்தி வருவதையும் உன்னிப்பாக கவனிக்கும் ஸ்டாலின், இத்தகைய கூட்டங்களில் சர்ச்சைகள், வருத்தங்கள், ஆதங்கங்கள், உள்ளடி வேலைகள் என எதுவாக இருப்பினும் ஸ்டாலினுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்படுகிறது.
தனது கவனத்துக்கு வந்ததுமே, அன்றைய தினம் இரவு சம்மந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டு பேசுகிறார். எச்சரிக்கை செய்ய வேண்டியவர்களுக்கு எச்சரிக்கையும், கண்டிக்க வேண்டியவர்களுக்கு கண்டிப்பும், கனிவாக பேசப்பட வேண்டியவர்களிடம் கனிவாகவும் என பல்வேறு நவரச முகங்களைக் காட்டுகிறார் ஸ்டாலின். .
செல்கிறது அப்டேட்: ஒவ்வொரு மணி நேரமும் கள நிலவரம் குறித்த அப்டேட்களை தீவிரமாக ஸ்டாலின் நிர்வாகிகளிடம் கேட்டு பெற்று வருகிறாராம். அப்போது, வேட்பாளர்கள் பிரச்சாரம் குறித்தும் தேர்தல் களநிலவரம் குறித்தும் மா.செ.க்களின் கருத்துக்களை கேட்டு வருகிறார் ஸ்டாலின்.
மேலும், நம் வேட்பாளர்களை மட்டுமல்லாமல் கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஜெயிக்க வைக்க வேண்டும் என்றும், ரிசல்ட் நெகட்டிவ்வாக வந்தால் ஏற்கனவே எச்சரித்தபடி பதவியிலிருந்து நீக்கப்படுவீர்கள் என்றும் மீண்டும் மா.செ க்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளார் தலைவர் ஸ்டாலின் என்கிறார்கள் அறிவாலயத்தினர்
முக்கிய தகவல்: லோக்சபா தேர்தலுக்கு இடையில் அமைச்சர்களுக்கு, கட்சி நிர்வாகிகளுக்கு முக்கியமான மெசேஜ் ஒன்றை முதல்வர் ஸ்டாலின் அனுப்பி இருக்கிறாராம். கூட்டணி கட்சிகள் தொடர்பாக முக்கியமான உத்தரவு ஒன்றை முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ளாராம்.
லோக்சபா தேர்தல் நெருங்குகிறது. கவனமாக இருங்கள். இன்னும் 20 நாள்தான் இருக்கிறது. அதற்குள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அதனால் உழையுங்கள்.
நம்முடைய கூட்டணி கட்சிகளுக்கு செலவு செய்ய பணம் இல்லை. காங்கிரஸ் கட்சியிலேயே 4 வேட்பாளர்களை தவிர மற்றவர்களுக்கு செலவு செய்ய பணம் இல்லை. அங்கே பொறுப்பு அமைச்சர்கள்தான் செலவு செய்ய வேண்டும்.
கூட்டணி கட்சிகள் இருக்கும் இடங்களில்தான் எதிர்கட்சிகள் வெற்றிபெற பார்க்கும். 40க்கு 40 என்ற இலக்கை அடைவதே நம் குறிக்கோள். நம்முடைய பொருளாதாரத்தை உடைக்க பார்ப்பார்கள். நமக்கு மடியில் கனமில்லை. அதனால் வழியில் பயம் இருக்க கூடாது.
இருந்தாலும் எதற்கும் கவனமாக இருங்கள். சில அமைச்சர்களை குறிப்பிட்டு பேசிய ஸ்டாலின்.. நீங்கள் வேலை பார்க்கும் தொகுதிகள்தான் கொஞ்சம் வீக். அதனால் பார்த்து இருந்து கொள்ளுங்கள். கட்சிக்கு நிதி கொடுக்க தயாராகி இருப்பவர்களை ஏற்கனவே ரெய்டு மூலம் தூக்கி வருகிறார்கள். அதை பற்றி கவலைப்படாமல் கூட்டணி கட்சிகளுக்கும் செலவு செய்யுங்கள்.
தேர்தலுக்கு பின்பாக நீங்கள் செலவு செய்த பணங்களை வாங்கிக்கொள்ளலாம். கவலையே படவேண்டாம். இப்போது 40க்கு 40 என்ற இலக்கே முக்கியம் என்று முதல்வர் ஸ்டாலின் மீட்டிங்கில் உத்தரவிட்டுள்ளாராம்.
-
அண்ணாமலையை நம்பி ஏமாறாதீங்க! ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வேண்டாம்! நயினார் அட்வைஸ் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications