ரிசல்டிற்க்கு மறுநாளே.. களமிறங்கிய முதல்வர்! திடீரென காரில் செங்கல்பட்டு போனது ஏன்? காரணமே வேறயாம்!
சென்னை: நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ரிசல்ட் வந்த நிலையில், இன்று முதல்வர் ஸ்டாலின் செங்கல்பட்டிற்கு சென்றார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று வெளி வந்தன. திமுக கூட்டணி இதில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணிதான் கைப்பற்றி உள்ளது.
மொத்தமாக 952 மாநகராட்சி வார்டுகள், 2360 நகராட்சி வார்டுகள், 4388 பேரூராட்சி வார்டுகளை திமுக இந்த தேர்தலில் கைப்பற்றி உள்ளது.

ரிசல்ட் மறுநாள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ரிசல்ட் வந்த மறுநாளே இன்று முதல்வர் ஸ்டாலின் செங்கல்பட்டு சென்றார். சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனுடன் முதல்வர் ஸ்டாலின் செங்கல்பட்டிற்கு காரில் சென்றார். அவருடன் தலைமை செயலக நிர்வாகிகள் சிலர் இருந்தனர். அதேபோல் சுகாதாரத்துறை அமைச்சகத்தை சேர்ந்த நிர்வாகிகள் சிலரும் இருந்தனர். ஆனால் இந்த பயணத்திற்கு காரணமே வேறு என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களை தேடி மருத்துவம்
தமிழ்நாட்டில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நீரிழிவு நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கு நேரடியாக வீட்டிற்கே சென்று இந்த திட்டம் மூலம் மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

வரவேற்பு
அத்தியாவசிய மருந்துகள் அனைத்தும் இதில் வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள நர்சுகள் மூலம் இந்த மருந்துகள் கிராமங்கள் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு துரிதமாக எடுத்து செல்லப்படுகின்றன. சுய டயாலிஸ் செய்யும் முறைகளுக்கான உபகரணங்கள் கூட இந்த திட்டம் மூலம் வழங்கப்பட்டது. இந்த திட்டத்தில் வெகு வேகமாக 49 லட்சத்து 99 ஆயிரத்து 999 பேர்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டு உள்ளது.

செங்கல்பட்டு
இந்த திட்டம் பெரிய அளவில் பலன் அடைந்துள்ள நிலையில் இன்று 50 லட்சமாவது நபர்களுக்கு இந்த திட்டம் மூலம் மருந்து வழங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் சித்தலாப்பாக்கத்தில் உள்ள மூதாட்டி பாஞ்சாலி என்பவற்றின் வீட்டிற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று சென்றார். அவருக்கு இந்த திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது. இவருக்கு உடலில் பல்வேறு பாதிப்புகள் உள்ளன. நீரிழிவு நோய் 10 வருடமாக உள்ளது. இதனால் அவர் கடுமையாக அவதிப்பட்டு வந்துள்ளார்.
Recommended Video

மறக்க மாட்டேன்
அவர் பெரிய உதவி செய்து இருக்கிறார். நான் அவரை மறக்க மாட்டேன் என்று கூறினார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின், இனி அடிக்கடி உங்களுக்கு நர்ஸ்கள் மூலம் மருந்து வரும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார். இதையடுத்து மேலும் சில நோயாளிகளின் வீடுகளுக்கு இன்று முதல்வர் ஸ்டாலின் சென்று மருந்து வழங்க உள்ளார்.அதேபோல் இன்று புதிய 108 ஆம்புலன்ஸ்களை முதல்வர் ஸ்டாலின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications