2026 தேர்தலுக்கு முன்பாக முதல்வர் ஸ்டாலினே ‘ஜெய்ஸ்ரீராம்' சொல்வார்.. நடப்பதை பாருங்க: அண்ணாமலை
சென்னை: 2026 தேர்தலுக்கு முன் முதல்வர் ஸ்டாலினே, ஜெய் ஸ்ரீ ராம், முருகனுக்கு அரோகரா என சொல்வார். அமைச்சர் சேகர்பாபு அதற்கு அடித்தளம் போட்டுள்ளார். ஒரு அமைச்சர் திமுகவின் ஆட்சி ராமர் ஆட்சியை போல் நடக்கிறது எனக் கூறியுள்ளார் எனத் தெரிவித்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அண்ணாமலை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழக காவல்துறையை பாராட்டுகிறேன். காங்கிரஸ் கட்சியில் முதன்மையான ஒருவரை சிறைப்பிடித்துள்ளார்கள். யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுத்துள்ள நடவடிக்கை நம்பிக்கை அளிக்கிறது. கட்சி பேதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை முனைப்பு காட்டுகிறது." எனத் தெரிவித்தார்.

திமுகவுக்கு தெரிஞ்சுபோச்சு: மேலும் பேசிய அண்ணாமலை, "தமிழ்நாட்டில் கடவுள் மறுப்புக் கொள்கை வேலைக்கு ஆகாது என திமுகவுக்கு தெரிந்துவிட்டது. எதைச் சொல்லி ஆட்சிக்கு வந்தார்களோ அதையெல்லாம் மாற்ற வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. பாஜகவின் நடவடிக்கை திமுகவுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் தான், பழனி முருகன் மாநாட்டை நடத்துகிறார்கள். அதனை நல்லபடியாக நடத்த வேண்டும்.
ஸ்டாலினே ஜெய்ஸ்ரீராம் சொல்வார்: முருகன் மாநாடு நடத்தும் திமுக அரசு இதே வேகத்தில் சென்றால் 2026 தேர்தலுக்கு முன் முதல்வரே ஜெய் ஸ்ரீ ராம், முருகனுக்கு அரோகரா என சொல்வார். சேகர்பாபு அதற்கு அடித்தளம் போட்டுள்ளார். ஒரு அமைச்சர் திமுகவின் ஆட்சி ராமர் ஆட்சியை போல் நடக்கிறது எனக் கூறியுள்ளார். இதே வேகத்தில் சென்றால் அமைச்சர்களும் ஜெய் ஸ்ரீராம் சொல்லிவிடுவார்கள்." எனக் கூறினார்.
மத்திய அமைச்சருடன் சந்திப்பு: மேலும், தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, மீனவ சங்க பிரதிநிதிகளுடன் சந்தித்து பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தினோம். இந்திய வெளியுறவுத்துறை, மீன்வளத்துறை அதிகாரிகள், இலங்கை வெளியுறவுத்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் சந்திப்பு விரைவில் நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்துள்ளார். மேலும், தமிழக மீனவ சங்கங்கள், இலங்கை மீனவ சங்கங்கள் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்." என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
-
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications