சூப்பர்.. அப்படியே ஸ்டன் ஆகி நின்ற பெண்.. மீண்டும் மீண்டும் உட்கார சொன்ன ஸ்டாலின்.. தரமான சம்பவம்!
சென்னை: கலைஞர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் 1000 ரூபாய் கொடுக்கும் திட்டத்தின் முகாமை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதற்கான தொடக்க விழாவில் இன்று சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்தது.
குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் கொடுக்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் தொடங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதற்கான பல்வேறு விதிகள், கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகள் சமீபத்தில் வெளியானது.

இதற்கான விண்ணப்பங்கள் இரண்டு நாட்களாக வீடு வீடாக வழங்கப்படுகின்றன. அதேபோல் இதற்கான டோக்கனும் இரண்டு நாட்களாக வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் இன்று இதற்கான முகாம்கள் தொடங்கி உள்ளன.
இந்த டோக்கனில் நீங்கள் ரேஷன் கடைக்கு அல்லது முகாமிற்கு எந்த நாளில், எந்த நேரம் செல்ல வேண்டும் என்று நேரம் கொடுக்கப்பட்டு இருக்கும். எந்த முகாமிற்கு செல்ல வேண்டும் என்றும் விவரங்கள் இருக்கும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அந்த முகாமிற்கு குறிப்பிட்ட தேதியில் டோக்கனுடன் செல்ல வேண்டும்.உடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை எடுத்து செல்ல வேண்டும்.
இன்று தொடக்கம்: இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்களை பெறக்கூடிய முகாம்கள் இன்று தொடங்க உள்ளன. தர்மபுரியில் முதல்வர் ஸ்டாலின் முதல் முகாமை தொடங்கி வைத்தார். முதல்வர் கருணாநிதி சுயஉதவிக்குழு தொடங்கிய அதே தர்மபுரியில் முதல்வர் ஸ்டாலின் இந்த முகாமை தொடங்கி வைத்தார்.
இதற்கான தொடக்க விழாவில் இன்று சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்தது. அதன்படி முதல்வர் ஸ்டாலின் நிகழ்வை தொடங்கி வைக்க முகாமிற்கு சென்றதும் அங்கே முழுக்க முழுக்க பெண் அதிகாரிகள் மட்டுமே இருந்தனர். ஒரு ஆண் அதிகாரி கூட இல்லை.
பெண் அதிகாரிகள் எல்லோரும் முதல்வரை பார்த்ததும் எழுந்தனர். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் அவர்களை அமர சொன்னார். அவர்கள் அமராமல் நின்றனர். அவர் தொடர்ந்து நடக்க நடக்க எல்லோரையும் அமர சொன்னார். ஆனால் யாரும் அமரவில்லை. இந்த நிலையில் கடைசியாக இருக்கைக்கு சென்ற பின்பும் தன் அருகே இருந்த ஊழியரை அமர சொன்னார்.
அவர் சொன்ன பின்பும் முதல்வர் அருகில் இருப்பதால் ஸ்டன் ஆகி அப்படியே அந்த பெண் நின்றார். அதன்பின் மீண்டும் கையை காட்டி அவரை அமரும்படி சொன்னார். இதையடுத்தே அந்த பெண் அமர்ந்தார். இந்த நிகழ்வு பெரிய அளவில் கவனம் பெற்றது.
இந்த திட்டம் பற்றி நேற்று போஸ்ட் செய்திருந்த முதல்வர் ஸ்டாலின், மகளிர் முன்னேற்றத்தில் பெரும் பாய்ச்சலாக அமையவுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைச் சுற்றியே என் எண்ணங்கள் உள்ளன. தகுதி வாய்ந்த மகளிர் ஒருவர்கூட விடுபடாமல் இந்தத் திட்டம் போய்ச் சேர வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது.

தமிழ்நாட்டு மகளிரின் முன்னேற்றத்தில் பெரும் பங்காற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் திட்டம் 1989-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட அதே தருமபுரி மண்ணில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான முகாமை வரும் திங்கட்கிழமை (24-07-2023) தொடங்கி வைக்கிறேன்.
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் இந்த முகாம்களை மாண்புமிகு அமைச்சர்கள் அனைவரும் சென்று பார்வையிட வேண்டும் என இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளேன்.
#கலைஞர்100-இல் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், ஒரு தலைமுறையையே மாற்றக் கூடிய திட்டம் மட்டுமல்ல; பல தலைமுறைகளைத் தாண்டியும் பயனளிக்கக் கூடிய திட்டமாக விளங்கும் என எண்ணித் துணிகிறேன், என்று கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications