2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு! விஜய் அறிவிப்பால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி 58 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக 01.01.2026 முன்தேதியிட்டு வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

இதனால் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். அகவிலைப்படி உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ 1230 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

CM Vijay Announces DA Hike

இதுகுறித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: எனது தலைமையிலான அரசு, மக்கள் நலனை முன்னிறுத்தி மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை வகுத்து செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள உறுதிமொழி அளித்துள்ளது. இந்தத் திட்டங்களை வடிவமைப்பதிலும், அவற்றை முழுவீச்சில் நடைமுறைப்படுத்துவதிலும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் முக்கியப் பங்கு வகித்து வருகின்றனர்.

அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசுப் பணியாளர்களுக்கு 01.01.2026 முதல் 58 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களும் அதனால் பயன்பெறும் வகையில் 01.01.2026 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளேன்.

இதனால் 58 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 2 சதவீதம் உயர்ந்து 01.01.2026 முதல் 60 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டுக்கு அரசுக்கு ரூ 1230 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும். இவ்வாறு விஜய் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, மாநில அரசு ஊழியர்களும் இந்த உயர்வை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தைச் சமாளிக்க அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் இந்தச் சலுகை, ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு வழங்கி உள்ளதை போல மாநில அரசும் 58 சதவீதத்திலிருந்து 60% உயர்த்து வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் விஜய்க்கு என்ஜிஓ சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.

இது குறித்து தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் அமிர்தகுமார் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு, மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 58 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

தேர்தல் அறிக்கையின் பொழுது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனவும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் தொடர்ந்து பாதுகாக்கப்படும் எனவும் முதல்வராக பதவி ஏற்றபோது அறிவித்திருந்தீர்கள்.

தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள், சிறப்பு காலமுறை ஊதிய பணியாளர்கள் தொகுப்பூதியம் மற்றும் மதிப்பூதிய ஊழியர்கள் ஆகியோருக்கு ஜனவரி 1 முதல் அகவிலைப்படியை 58 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயர்த்தி வழங்குமாறு கேட்டு்கொள்கிறோம். உடனடியாக அகவிலைப்படி உயர்வு அறிவித்தால் உத்வேகத்துடன் பணியாற்றுவார்கள் எனவும் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தபால் வாக்குகளிலும் தவெகவுக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாக்களித்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தற்போது அகவிலைப்படியை முதல்வர் விஜய் உயர்த்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+