சட்டசபையில் விஜய்க்கு அடுத்து ஆனந்துக்கு இருக்கை! யாருக்கு எந்த சீட்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபையின் 17ஆவது கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் முதல்வர் விஜய் கோட் சூட்டில் வந்து தனது இருக்கையில் அமர்ந்துள்ளார். அவருக்கு அடுத்த இடம் அமைச்சர் புஸ்ஸி ஆனந்துக்கு அளிக்கப்பட்டது.

அதாவது திமுக ஆட்சியில் துரைமுருகன் அமர்ந்திருந்த இடம் என்.ஆனந்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு அடுத்து ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கட்ரமணன், நிர்மல் குமார் ஆகியோருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, விஜய்க்கு எதிரே அமர்ந்திருக்கிறார்.

Vijay tvk

இந்த கூட்டம் தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் கூடியது. தற்போது ஒவ்வொரு எம்எல்ஏக்களாக பதவியேற்க இருக்கிறார்கள். முதலில் பெரம்பூர் தொகுதியின் எம்எல்ஏவாக விஜய் பதவியேற்றார்.

அதன் பிறகு அமைச்சர்கள் ஒவ்வொருவராக பதவியேற்கிறார்கள். தற்போது அமைச்சர்களுக்கு மட்டும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், மற்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டதும் அவர் ஒதுக்கீடு செய்வார் என தற்காலிக சபாநாயகர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+