விடவே மாட்டேன்.. எல்லா லாயர்களையும் வரச்சொல்லுங்க! திமுகவிற்கு எதிராக சாட்டையை சுழற்றிய விஜய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவுக்கு எதிராக கட்சி நிதி வசூல் குறித்து சட்டமன்றத்தில் தாக்கி யிருந்தார் முதல்வர் விஜய். திமுகவின் பெயரை குறிப்பிடாமல், பார்ட்டி ஃபண்ட் எனும் பெயரில் டாஸ்மாக் நிறுவனத்திற்கு மது சப்ளை செய்யும் மது உற்பத்தி ஆலைகளிடமிருந்து வசூலிக்கப்பட்ட வில்லங்கத்தை அம்பலப்படுத் தினார். இது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் அரசியல் ரீதியாக ஏற்படுத்தியது.

அது மட்டுமல்லாமல், கரூர் கூட்டத்தில் பேசும் போதும், பார்ட்டி ஃபண்ட் என சொன்னதும், ' எடுத்தார்கள் பார்... ஓட்டம்...' என்று திமுகவை ஏகத்துக்கு நக்கல் செய்தார் முதல்வர் விஜய். இதற்கு கடுமையாக எதிர்வினையாற்றி வருகிறது திமுக. இப்போதும் இது பற்றிய நக்கல்கள், சோசியல் மீடியாக்களில் பிரபலமாக பரவி வருகின்றன.

CM Vijay

இந்த நிலையில், இந்த விவகாரத்தை அவ்வளவு எளிதாக விட்டுவிட தயாராக இல்லாத முதல்வர் விஜய், டாஸ்மாக்கிற்கு எதிரான வழக்குகள் பற்றிய விபரங்களை அதிகாரிகளிடம் கேட்டுள்ளார்.

அதாவது, டாஸ்மாக் முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையில் பல வழக்குகள் பதியப்பட்டன. அதனடிப்படையில், சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை கடந்த திமுக ஆட்சியின் போது டாஸ்மாக் நிறுவனத்தில் நுழைந்து அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனை அப்போது அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டாஸ்மாக் அதிகாரிகளின் பெர்சனல் ஃபோன்கள் எல்லாம் பறிக்கப்பட்டு சோதனை நடத்தினர். அதிலுள்ள வாட்ஸ் ஆப் தகவல்களை, பரிமாறிக் கொண்ட விபரங்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துக்கொண்டது அமலாக் கத்துறை. பல்வேறு ஆவணங்கள் மற்றும் கோப்புகள் ஆராயப்பட்டு அதிலிருந்தும் தங்களுக்குத் தேவையான விபரங்களை சேகரித்துக் கொண்டனர். டாஸ்மாக் அதிகாரிகளிடம் விசாரணையும் மேற்கொள்ளப் பட்டது.

இதனையடுத்து, அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை கோரியது திமுக அரசு. உயர்நீதிமன்றத்தில் தடை கிடைக்கவில்லை. உச்சநீதி மன்றத்தில் முறையிட்டனர். சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறையின் விசார ணைக்கு எதிராக இடைக்கால தடையாணையை பெற்றது முந்தைய திமுக அரசு.

இந்த சூழலில்தான், இந்த இடைக்கால தடையாணை பற்றி சமீபத்தில் கோட்டை அதிகாரிகள் மத்தியில் விவாதிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த ரெய்டு பற்றி முதல்வர் விஜய், அதிகாரிகளிடம் விசாரித்ததையடுத்து இந்த விவாதம் நடந்திருக்கிறது.

திமுகவில் பார்டி ஃபண்ட் வசூலிக்கப்பட்டதை நாம் கிளறிவிட்டு விட்டதால், அதனை அப்படியே விட்டு விடமுடியாது. பட்ஜெட் கூட்டத்தில் இதனை திமுக நமக்கு எதிராக திசை திருப்பும் என யோசித்துத்தான், திமுக ஆட்சியின் போது டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த ரெய்டின் தற்போதைய நிலை என்ன? என்று அதிகாரிகளிடம் விசாரித்திருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து அதன் விபரங்களை அண்மையில் முதல்வரிடம் தெரிவித்திருக்கிறார்கள். திமுக ஆட்சியின் போதே அமலாக்கத்துறையின் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டில் இண்ட்ரீம் ஸ்டே ஆர்டர் பெறப்பட்டிருக் கிறது என்பதை விவரித்திருக்கிறார்கள். அதனை திரும்பப்பெற சட்டத்தில் இடமிருக்கிறதா? என அதிகாரிகளிடம் கேட்டுள்ளார் விஜய். இந்த இடைக்கால தடை விலக்கிக் கொள்ளப்பட்டால், டாஸ்மாக்கிற்கு எதிராக அமலாக்கத் துறையின் நடவடிக்கை மீண்டும் பாயலாம் என சொல்லியுள்ள அதிகாரிகள், இடைக்கால தடையை திரும்ப பெற சட்டம் அனுமதிக்குமா? என்பதை அரசு தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை கேட்களாம் என்றும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அரசு தலைமை வழக்கறிஞரிடம் விவாதிக்கவிருக்கி றாராம் முதல்வர் விஜய். இடைக்கால தடையாணை திரும்பபெற முடியும் எனில், அதற்கான மனு தாக்கல் செய்யவும் தவெக அரசு திட்டமிட்டுள்ளது. அப்படி ஒரு மனு தாக்கல் செய்யப்படும் பட்சத்தில், இடைக்கால தடையை சுப்ரீம் கோர்ட் விலக்கி கொண்டால், அமலாக்கத்துறை மீண்டும் டாஸ்மாக் மீது பாயும். அப்போது, பார்டி ஃபண்ட் விவகாரத்தில், திமுக குடும்பத்தினர் மற்றும் மாஜிகள் பலரும் சிக்குவார்கள் என்கிற தகவல்கள் மது விலக்கு ஆயத்தீர்வை துறை வட்டாரங்களில் பேசப்படுகின்றன.

- சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+