தாராபுரம் இடைத்தேர்தல் சூழலிலும் சத்தியபாமா உண்மையை பேசி இருக்காங்க.. வீடியோ பற்றி வீரபாண்டியன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாராபுரம் இடைத்தேர்தல் நடக்கும் சூழலிலும் கூட சத்தியபாமா உண்மையை உள்ளத்தில் இருந்து பேசி இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். தேர்தலில் பணம் இருப்பவர்கள் தான் வெல்கிறார்கள் என்று கூறிய வீரபாண்டியன், மக்கள் கொள்கை, திட்டங்கள், வாக்குறுதிகளை பார்த்து வாக்களிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இதனிடையே தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளர் சத்தியபாமா வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வீடியோவில் சத்தியபாமா, கடந்த முறை ரூ.31 கோடி செலவு செய்திருக்கிறேன். ஆனால் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை.

Sathyabama

அந்த மாதிரி இருந்துவிட்டு இந்த நாய்கள் கூட சேர்வது என்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அமைச்சர்கள் தங்குவதற்கு அறைகள் பதிவு செய்ததற்கு மட்டும் ரூ.14 லட்சம் செலவு செய்திருக்கிறோம். நாமும் ஒரு கட்சியில் இருந்து வேறு கட்சிக்கு வந்திருக்கிறோம். அதனால் முடியாது என்று சொல்ல முடியாது. கூட்டணி கட்சியினரும் விமானத்தில் வருவதற்காக டிக்கெட் செலவுகளும் உள்ளன என்று கூறியுள்ளார்.

சத்தியபாமாவின் வீடியோ தவெகவின் மாவட்ட வாட்ஸ் அப் குழுவில் இருந்து வெளியாகியதாக கூறப்படுகிறது. அதேபோல் சத்தியபாமாவின் பேச்சு தவெகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது. இந்த வீடியோ விவகாரம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், செவிலியர்கள் கைது செய்யப்பட்டது ஏற்கத்தக்கது அல்ல.

கடந்த ஆட்சியின் போது செவிலியர்கள் போராட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டு, நாங்கள் ஆட்சி அமைத்த உடன் செவிலியர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுவோம் என்று வாக்குறுதி அளித்தார். இன்று அவர்களின் அரசே செவிலியர்களை கைது செய்துள்ளது. அவர்களின் கோரிக்கை தவெக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து சத்தியபாமா வீடியோ தொடர்பான கேள்விக்கு, உண்மையை பேசி இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையிலும் அவர் உண்மையை உள்ளத்தில் இருந்து பேசி இருக்கிறார். தேர்தலில் இதுதான் நடக்கிறது. பணம் இருப்பவர்கள் தான் வெல்கிறார்கள். சாதி, மத, இன உணர்வுகளை தூண்டுபவர்கள் தான் வெற்றி பெறும் சூழல் உருவாகி இருக்கிறது. ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. கொள்கை, திட்டங்கள், வாக்குறுதிகள் என்று பார்த்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+