எல்லாமே பிரைவேட்தான்.. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மெகா மாற்றம்.. இனி கவலையே இல்லையே.. அருமை
சென்னை: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக முக்கியமான ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டு உள்ளது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் ஆசியாவிலேயே உள்ள பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்று. இப்படிப்பட்ட பேருந்து நிலையம் இருந்தும் கூட அதை சரியாக அரசு பராமரிக்கவில்லை. அதிலும் கடந்த 10 வருடங்களில் கோயம்பேடு பேருந்து நிலையம் மிக மோசமான நிலையை அடைந்துவிட்டது.

அரசு நேரடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதே இதற்கு காரணம். அதே சமயம் இது போன்ற பராமரிப்பு பணிகளை தனியாரிடம் கொடுத்துவிட்டு, அவர்களிடம் கேள்வி கேட்கும் பட்சத்தில், தனியார் அமைப்புகள் இதை சிறப்பாக செய்யும்.
சில வெளிநாடுகளில் இது போல தனியார் அமைப்புகளே ஒப்பந்தம் எடுத்து சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்கின்றனர். இப்படிப்பட்ட நிலையில்தான் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக முக்கியமான ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டு உள்ளது.
பேருந்து நிலையம்: கடந்த சில வாரங்களாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. கிளாம்பாக்கம் பேருந்து நிலைய கட்டுமானம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. முன்பே திறக்கப்பட வேண்டிய கிளாம்பாக்கம் பஸ் நிலையம் இன்னும் திறக்கப்படவில்லை. இந்த பேருந்து நிலையம் ரூ 400 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இது 2018-ம் ஆண்டே திறக்கப்படும் என முதலில் கூறப்பட்டது.
ஆனால், கட்டுமானப் பணிகள் முடிவடையாததால் இதன் திறப்பு விழா தள்ளிக்கொண்டே போகிறது. இந்த வருடம் இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த பேருந்து நிலையம் சுத்தமாக எந்த திட்டமிடலும் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது.
இதனால் அங்கே மழைநீர் தேங்கும் அபாயம் இருந்தது. அதை எல்லாம் சரி செய்து இப்போது கட்டுமான பணிகள் முடிந்துள்ளன. முந்தைய ஆட்சியில் செய்த தவறுகளால் 25 சதவிகிதம் கூடுதலாக செலவு செய்து இந்த முறை பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மூலம் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த பேருந்து நிலையம் முறையாக திட்டமிட்டு கட்டப்படவில்லை.
பராமரிப்பு: இந்த நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பராமரிப்பு பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதற்காக டெண்டர் விடப்பட்டு உள்ளது.
15 வருட பராமரிப்பு என்ற ரீதியில் டெண்டர் விடப்பட்டு உள்ளது. அதோடு மேலும் 15 வருடங்கள் இதை நீட்டிக்கவும் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது. பேருந்து நிலையத்தின் மொத்த பராமரிப்பை தனியார் நிறுவனங்களே மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் இருந்து 30 கிமீ தூரத்தில் பேருந்து நிலையம் இருக்கிறது. இங்கே மெட்ரோ இல்லை. புறநகர் ரயில் இல்லை. இதனால் மக்கள் இங்கிருந்து சென்னைக்கு உள்ளே வருவது கடினமான வேலையாக இருக்கிறது. இங்கே பேருந்து நிலையம் அமைக்க திட்டமிட்ட போதே அதை முறையாக திட்டமிடாமல் விட்டுவிட்டனர். அதன் காரணமாகவே தற்போது இங்கே மாற்றங்களை செய்து வருகின்றனர்.
இங்கே கடந்த ஆட்சியில் செய்யப்பட்ட தவறுகளை சரி செய்து மக்கள் பயன்படுத்தும் வகையில் எளிமையாக விஷயங்களை மாற்றி வருவதாக ஆளும் திமுக அரசும் தெரிவித்து உள்ளது. உள்ளே இரண்டு மாடி.. மக்கள் செல்ல நவீன நகரும் தரைத்தளம், அதுபோக எக்ஸ்லேட்டர் என்று பல சேவைகளை வழங்க முடிவு செய்துள்ளனர்.
வெள்ளம்: இந்த நிலையில் நேற்று சென்னையில் பெய்த மழையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மூழ்கி உள்ளது. சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு முழுக்க மழை பெய்தது.
அதேபோல் எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான மழை பெய்தது. இந்த கனமழை காரணமாக கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வந்த பேருந்து நிலையம் மூழ்கி உள்ளது. இந்த பேருந்து நிலையத்தி நுழைவு பகுதி மற்றும் உட்பகுதி நீரில் மூழ்கி உள்ளது. இதை சரி செய்யும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications