கோவை, மதுரை, திருச்சிக்கு.. ஒரே நேரத்தில் வந்து விழுந்த குட் நியூஸ்.. தங்கம் சொன்ன கலக்கல் அறிவிப்பு
சென்னை: மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஒரே நேரத்தில் முக்கியமான நல்ல செய்தி ஒன்றை அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டில் வெளியிட்டு உள்ளார்.
தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில், தமிழ்நாட்டில் கிராமப் புறங்களில் அரசு உதவி பெறும் பள்ளிகளும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும். இதற்காக ₹600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கும், புதுமைப்பெண் திட்டம் இந்த ஆண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

மகளிர் இலவச பேருந்து பயண 'விடியல் பயணம்' திட்டத்திற்கு இந்த ஆண்டில் ₹3050 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ₹13,720 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
கோவை, மதுரை; மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு ஆகிய நகரங்களில் நதிகளை மீட்டெடுக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ₹5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வைகை, காவிரி, தாமிரபரணி, நொய்யல் ஆறுகளை ஒட்டிய பகுதிகளை மேம்படுத்த புதிய திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது என்று மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஒரே நேரத்தில் முக்கியமான நல்ல செய்தியை அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டில் வெளியிட்டு உள்ளார்.
மேலும், உயர்கல்வி பெற விரும்பும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும். பள்ளிகளில் 15,000 ஸ்மார்ட் வகுப்பறைகள் ₹300 கோடியில் உருவாக்கப்படும். இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ₹100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
பள்ளிக் கட்டமைப்பை மேம்படுத்த ₹1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். க.அன்பழகன் நூற்றாண்டினை முன்னிட்டு, பள்ளிக்கல்வி வளர்ச்சிக்கு ரூ.1,000 கோடி பள்ளி கட்டமைப்பு வசதிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
நாட்டிலேயே 2வது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை காப்பியங்களை 25 இந்திய மற்றும் உலக மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 100 ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கைகள் தமிழர்களை தலைநிமிரச் செய்துள்ளன. 1990-ல் இலவச மின்சார திட்டத்திற்கு ரூ.550 கோடி ஒதுக்கப்பட்டது; காலை உணவு திட்டத்திற்கு கடந்த நிதி ஆண்டில் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டது; மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு கடந்த நிதி ஆண்டில் ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சமூகநீதி, ஒடுக்கப்பட்டோர் முன்னேற்றம், தமிழ்நாட்டு இளைஞர்களை சர்வதேச சாதனையாளர்களாக மாற்றுவது, அறிவுசார் பொருளாதார வளர்ச்சி, சமநிலையுடன் கூடிய பெண் முன்னேற்றம், நிலையான எதிர்காலம், தமிழ்மொழி மற்றும் பண்பாடு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இந்த பட்ஜெட் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அடுத்த மூன்று ஆண்டுகளில் 600 புதிய நூல்கள் தமிழில் வெளியிடப்படும். தமிழ் மொழியை நவீனப்படுத்த கிமி உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க ₹5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். முசிறி, தொண்டி ஆகிய இடங்களிலும் அகழாய்வு நடத்தப்படும். ₹65 லட்சம் செலவில் அழகன் குளத்தில் ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும். கீழடியில் ₹17 கோடி செலவில் திறந்தவெளி அரங்கம் அமைக்கப்படும். அடுத்த மூன்று ஆண்டுகளில் 600 புதிய நூல்கள் தமிழில் வெளியிடப்படும்.












Click it and Unblock the Notifications