இந்தாங்க சாப்பிடுங்க.. விஷம் கலந்த பிரசாதம்.. வீட்டுக்கு அழைத்து பேராசிரியரை கொன்ற பியூன்!
சாய்பாபா பிரசாதத்தில் விஷம் வைத்து பேராசிரியர் கொலை செய்யப்பட்டுள்ளார்
Recommended Video
சென்னை: வீட்டுக்கு வாங்க.. இந்தாங்க பிரசாதம் சாப்பிடுங்க.. என்று கூப்பிட்டு சீரடி சாய்பாபா பிரசாதத்தில் விஷத்தை கலந்து கொடுத்து பேராசிரியரை கொலை செய்துள்ளார் மத்திய அரசு ஊழியர் ஒருவர்!
சென்னை காசிமேடு சூரிய நாராயண தெருவை சேர்ந்தவர் பேராசிரியர் கார்த்திக். 35 வயதாகிறது. ஆனால் ஆட்குறைப்பு காரணமாக வேலையை விட்டு இவரை நிறுத்திவிட்டனர்.
காசிமேட்டில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார். இவருக்கு சரண்யா என்ற மனைவியும், 8 வயதில் சர்வேஷ் 6 வயதில் சர்வின் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

சரண்யா
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு முல்லை நகர் பஸ் ஸ்டேண்ட் அருகை பைக்கில் மனைவியுடன் கார்த்திக் சென்று கொண்டிருந்தார். அப்போது, கார்த்திக்குக்கு திடீரென மயக்கம் வரவும், பைக்குடன் சாய்ந்து விழுந்தார். இதில் சரண்யாவும் விழுந்து காயமடைந்தார்.

பரிதாப பலி
இதையடுத்து அங்கிருந்தோர் இவர்களை உடனடியாக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கார்த்திக் உயிரிழந்துவிட்டார். சரண்யாவுக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக் தகவல்கள் வெளியாகி உள்ளன.

வேலை
கார்த்திக் 4 வருஷத்துக்கு முன்பு, வேலாயுதம் என்பவரிடம் அரசு வேலைக்காக 4 லட்சம் ரூபாய் தந்ததாகவும், ஆனால் அந்த பணத்தையும் வேலையையும் வேலாயுதம் வாங்கி தராமல் ஏமாற்றி விட்டதாக சொல்லப்படுகிறது.

அப்பாயின்ட்மென்ட்
43 வயதான வேலாயுதம், கிண்டியில் உள்ள நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி மையமான கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டில், அலுவலக உதவியாளராக பணிபுரிகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று வேலாயுதம் "கவர்ன்மெட் வேலைக்கான அப்பாயின்ட்மென்ட் உங்களுக்கு வந்திருக்கு. நேரில வந்து வாங்கிட்டு போயிடுங்க" என்று கார்த்திக்கிடம் சொல்லி உள்ளார்.

பிரசாதம்
இதனால் சந்தோஷத்தில் குதித்த கார்த்திக், சரண்யாவை கூட்டிக் கொண்டு, வேலாயுதம் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வேலாயுதம் சீரடி சாய்பாபா பிரசாதம் என்று சொல்லி, பஞ்சாமிர்தத்தை தம்பதி இருவருக்கும் சாப்பிட சொல்லி உள்ளார். கார்த்திக் அதை வாங்கி உடனே சாப்பிட்டுள்ளார். லேசாக மயக்கம் வரவும் தண்ணீரை குடித்துவிட்டார். பக்கத்தில் பிரசாதத்தை சாப்பிட போன சரண்யாவை சாப்பிட வேண்டாம் என்று சொல்லி தடுத்துவிட்டு, பைக்கில் உட்கார வைத்து கொண்டு அழைத்து வந்துள்ளார்.

சல்ஃபூரிக் பவுடர்
அப்போதுதான் மயங்கி விழுந்துள்ளார் கார்த்திக். சரண்யா இவ்வாறு சொல்லி முடித்ததையடுத்து, எம்.கே.பி நகர் போலீசார் வழக்குபதிவு செய்து வேலாயுதத்தை கைது செய்தனர். 4 லட்சம் பணத்தை கேட்டு கார்த்திக் நச்சரித்து கொண்டே இருந்ததால்தான், லேப்-பில் இருந்த சல்ஃபூரிக் பவுடரை பிரசாதத்தில் கலந்து கொடுத்தாக வாக்குமூலம் தந்துள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications