இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் ரெய்டு.. விலை உயர்த்தியதில் முறைகேடு? சென்னையில் போலீஸ் குவிப்பு!
சென்னை: சென்னையில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் இந்திய வணிக போட்டி ஆணைய அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தாய் நிறுவனமான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் இன்று காலை முதலே இந்திய வணிக போட்டி ஆணையத்தின் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிமெண்ட் விலை நிர்ணயிப்பதிலும் கார்ட்டல் அமைத்து செயல்பட்டதாக இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் மீது புகார் எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் முறையற்ற வணிக போட்டியில் ஈடுபட்டது தொடர்பான புகாரில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் ரெய்டு நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சக நிறுவனங்களுடன் இணைந்து தன் விருப்பதற்கு சிமெண்ட் விலையை உயர்த்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த ரெய்டில் சிமெண்ட் விலை உயர்த்தியதற்கும், குறைத்ததற்கும் முறையான ஆவணங்கள் இருக்கிறதா என்று சிசிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பிற சிமெண்ட் நிறுவனங்களிலும் ரெய்டு செய்யப்பட்டு வருகிறது.
அண்மையில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75வது ஆண்டு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications