அய்யா வைகுண்டர் குறித்து அவதூறு..சர்ச்சையில் நரசிம்ம ஐயங்கார்! கொதித்த அய்யா பக்தர்கள்..பறந்த புகார்
சென்னை: பிரபல யூடியூப் சேனலில் அய்யா வைகுண்டர் குறித்து நரசிம்ம ஐயங்கார் என்ற நபர் பேசியது பலரையும் புண்படுத்தியுள்ளது எனவும், அய்யா வைகுண்டர் குறித்து தவறாக பேசிய நரசிம்மன் ஐயங்கார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பு பகுதியில் பிறந்தவர் முத்துக்குட்டி. இவருக்கு 22 வயதானபோது கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், திருச்செந்தூர் மாசி திருவிழாவுக்கு அழைத்து வந்தால் நோய் குணமாகும் என மகாவிஷ்ணு அவரது பெற்றோரின் கனவில் வந்து கூறியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து 1833 ஆம் ஆண்டு மாசி மாதம் முத்துக்குட்டியை அவரது பெற்றோர்கள் உறவினர்கள் திருச்செந்தூருக்கு சுமந்து சென்றனர். உடல் சோர்வு காரணமாக அனைவரும் ஓய்வெடுத்த நிலையில் முத்துக்குட்டி தொட்டிலிலிருந்து நடக்க ஆரம்பித்து பின்னர் ஓடி திருச்செந்தூர் கடலுக்குள் மறைந்ததாக கூறப்படுகிறது.
முத்துக்குட்டி இறந்து விட்டார் என அனைவரும் கூறிய நிலையில் அடுத்த நாள் கடலில் இருந்து அய்யா வைகுண்டராக, மகாவிஷ்ணுவின் பத்தாவது அவதாரமாக முத்துக் குட்டி வந்ததாகவும் அவரே அய்யா வைகுண்டராக தற்போது வரை வணங்கப்படுகிறார் என்றும் கூறப்படுகிறது. கன்னியாகுமரி திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் கடுமையான சாதி கொடுமைகளுக்கு எதிராக போராடியவர். மக்கள் நன்மைக்காக ஆறு ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தவர்.
திருவிதாங்கூர் ஆட்சியாளர்களுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியதால் சிறையில் சித்திரவதை செய்யப்பட்ட அவர் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். 1851 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவர் வைகுண்டம் சென்றதாக கூறப்படுகிறது. கலியுக கடவுள் என மக்கள் அவரை வணங்கி வருகின்றனர். உருவ வழிபாடு இல்லாத அவரது வழிபாட்டு முறை ஐயா வழி என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் அய்யா வைகுண்டர் குறித்து தவறாக பேசிய நரசிம்மன் ஐயங்கார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கே.சுதன், அளித்த புகார் மனுவில், "சுதந்திர போராட்டத்திற்காகவும், சமூக சீர்திருத்தம், சமத்துவத்தை வலியுறுத்திய அய்யா வைக்குண்டர் வழியை பலரும் குடும்பத்துடன் பின்பற்றி வருகின்றனர். பெண் உரிமைகளுக்காகவும், பெண்கள் மேம்பாட்டிற்காகவும் பாடுப்பட்ட அய்யாவின் மார்க்கத்தை நாடு முழுவதும் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் கடவுளாகவும் அடையாளமாகவும் பலர் பின்தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இடம் வலம் என்ற யூடியூப் சேனலில், அய்யா வைகுண்டர் குறித்து நரசிம்ம ஐயங்கார் என்ற நபர், பேசியது பலரையும் புண்படுத்தியுள்ளது. அந்த நேர்காணலில் அய்யா வைக்குண்டர் குறித்து தரம் தாழ்ந்த வகையில் கொச்சையாக நரசிம்ம ஐயங்கார் பேசியுள்ளது அவரை பின்பற்றுபவர்களை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மன நம்பிக்கைகளுக்கு எதிராகவும், அய்யா வைக்குண்டர் மீதான நம்பிக்கையையும் குலைக்கும் வகையில் பேசிய நரசிம்ம ஐயங்கார் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், இதுதொடர்பாக நரசிம்ம ஐயங்கார் மற்றும் யூட்யூப் சேனலுக்கு சம்மன் அனுப்பவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications