காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடக்கும் இடம் திடீர் மாற்றம்.. பாஜக அலுவலகம் நோக்கி இல்லை.. வள்ளுவர் கோட்டம்!
சென்னை: ராகுல் காந்தி பற்றி போஸ்டர் வெளியிட்ட பாஜகவை கண்டித்து தமிழக பா.ஜ.க தலைமை அலுவலகத்தை நோக்கி கண்டன ஊர்வலம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் வள்ளுவர் கோட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியை பல தலைகள் கொண்ட ராவணனாக சித்தரித்து பாஜகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டது. அதில், "நவீன யுகத்தின் ராவணன் இங்கே. ராகுல் ஒரு தீயசக்தி, தர்மத்துக்கு எதிரானவர், இவரது நோக்கம் இந்தியாவை அழிப்பதுதான்" என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ராகுல் காந்தியை ராவணனான சித்தரித்து பாஜக பதிவிட்ட போஸ்டருக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ராகுல் காந்தியை இழிவுபடுத்தும் வகையில் போஸ்டர் வெளியிட்ட பாஜகவை கண்டித்து தமிழ்நாடு பாஜக அலுவலகத்தை நோக்கி கண்டன ஊர்வலம் இன்று நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்தார்.
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 9 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்ததை மூடி மறைத்து, திசை திருப்பும் நோக்கத்துடன் தலைவர் ராகுல் காந்தி அவர்களை மிக மிக கேவலமாக இழிவுபடுத்துகிற வகையில் கேலிச்சித்திரத்தை வெளியிட்ட பா.ஜ.க.வை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் இன்று (06.10.2023) வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் சென்னை, தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகில் இருந்து தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகத்தை நோக்கி கண்டன ஊர்வலம் நடைபெறவுள்ளது.
கடந்த 9 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்ததை மூடி மறைத்து, திசை திருப்பும் நோக்கத்துடன் தலைவர் ராகுல் காந்தி அவர்களை மிக மிக கேவலமாக இழிவுபடுத்துகிற வகையில் கேலிச்சித்திரத்தை வெளியிட்ட பா.ஜ.க.வை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு… pic.twitter.com/w8J7BKpocy
— K.S.ALAGIRI (@KS_Alagiri) October 6, 2023
சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஜே.எம்.எச். ஹசன் மௌலானா, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் எம்.ஏ.முத்தழகன், எம்.எஸ்.திரவியம், ஜெ.டில்லிபாபு, சிவ ராஜசேகரன், எம்.பி.ரஞ்சன் குமார், அடையார் த. துரை மற்றும் தளபதி எஸ்.பாஸ்கர், பி.வி.தமிழ்செல்வன், ஜெ.பாலமுருகன் ஆகியோர் ஆர்ப்பாட்ட ஊர்வலத்திற்கு முன்னிலை வகிப்பார்கள். இதில் தமிழக காங்கிரஸின் முன்னணி தலைவர்கள், நாடாளுமன்ற- சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில - மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் பங்கேற்பார்கள்" என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த 9 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்ததை மூடி மறைத்து, திசை திருப்பும் நோக்கத்துடன் தலைவர் ராகுல் காந்தி அவர்களை மிக மிக கேவலமாக இழிவுபடுத்துகிற வகையில் கேலிச்சித்திர போஸ்டர் வெளியிட்ட பா.ஜ.க.வை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு… pic.twitter.com/kKtJZwqieX
— K.S.ALAGIRI (@KS_Alagiri) October 6, 2023
இந்நிலையில், பாஜக தலைமை அலுவலகத்தை நோக்கி நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் வள்ளுவர் கோட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. பாஜகவைக் கண்டித்து நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியினரின் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்!












Click it and Unblock the Notifications