அடிச்சு தூக்கும் காங்கிரஸ்.. ஆட்டம் காணும் பிஆர்எஸ்.. கடைசி இடத்தில் பாஜக.. தெலுங்கானா எக்ஸிட் போல்
சென்னை: எதிர்பார்த்தது போலவே, ஆளும் பிஆர்எஸ்ஸை நொறுக்கி தள்ளிவிட்டு, மேலே வந்துள்ளது காங்கிரஸ். தேர்தலுக்கு பிந்தைய கணிப்பில், காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளதாக கணிப்புகள் வெளியாகி உள்ளது.
சந்திரசேகர ராவ் தலைமையில் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) ஆட்சி நடைபெறும் தெலுங்கானாவில் 119 தொகுதிகள் உள்ளன. 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.
எதிர்க்கட்சி: ஆளும் பி.ஆா்.எஸ், முக்கிய எதிா்க்கட்சிகளான காங்கிரஸ், பாஜக என்ற மும்முனைப் போட்டி கடுமையாக நிலவுகிறது.. பிஆா்எஸ் கட்சி தலைவரும், முதல்வருமான சந்திரசேகர ராவ் மற்றும் அவரது மகனும் அமைச்சருமான கே.டி.ராம ராவ் போட்டியிடுகிறார்கள்.

இதில் சந்திரசேகர ராவ் கட்சி மொத்த தொகுதிகளிலுமே களமிறங்குகிறது.. அதிலும், கஜ்வெல் மற்றும் காமரெட்டி என்ற 2 தொகுதிகளில் போட்டியிடுகிறாா் கேசிஆர். அதேபோல, தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவா் ரேவந்த் ரெட்டி, பாஜக எம்பிக்களான பண்டி சஞ்சய் குமாா், டி.அரவிந்த், சோயம்பாபு ராவ் உள்பட மொத்தம் 2,290 வேட்பாளா்கள் போட்டியிட்டுள்ளனர்.
பாஜக போட்டி: மொத்தம் 111 தொகுதிகளில் பாஜக போட்டியிட்டுள்ளது. அதன் கூட்டணி கட்சியான ஜனசேனா, 8 இடங்களில் போட்டியிட்டுள்ளது. மாநில காங்கிரஸ் தலைவா் ரேவந்த் ரெட்டி, கோடங்கல் மற்றும் காமரெட்டி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சியோ, சிபிஎம் கட்சிக்கு ஒரு தொகுதியை ஒதுக்கியுள்ளது.. அதேபோல, அசாதுதீன் ஒவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ் கட்சி, ஹைதராபாத்தில் 9 தொகுதிகளில் களமிறங்கி உள்ளது.
இன்று காலையிலிருந்து ஓட்டுப்பதிவு துவங்கியது.. அந்தவகையில் தெலுங்கானாவில் முதல்முறையாக, மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதைக் கடந்த முதியவா்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய, தேர்தல் முடிவுகளை, தனியார் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.
கணிப்புகள்: அந்தவகையில், (ஜன் கி பாத்) JANKI BAAT என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் கணிப்பில், காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.. அதாவது காங்கிரஸ் கட்சிக்கு 56 இடங்களும், ஆளும் பிஆர்எஸ் கட்சிக்கு 48 இடங்களும், பாஜகவுக்கு 10 இடங்களும் கிடைத்துள்ளது.
தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளிலேயே, காங்கிரஸ்தான் ஆட்சியை பிடிக்கும் என்று கணிப்புகள் வெளியாகி இருந்தன. இதை பார்த்து கேசிஆர் தரப்பு மிரண்டு போயிருந்தது. அந்தவகையில், இப்போது வந்துள்ள கணிப்புலும் காங்கிரஸ் கட்சியே ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆளும் மாநில கட்சியை அதிர வைத்து வருகிறது.
பாத யாத்திரை: இந்த முறையாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸின் முனைப்பு, அதிகமாகவே தென்பட்டது.. ராகுல் காந்தியின் பாத யாத்திரை, இந்த யாத்திரையையொட்டி, கர்நாடகாவில் ஆட்சியை பிடித்தது, போன்றவைகளின் தாக்கம் தெலுங்கானாவில் ஏற்பட்டதையும் உணர முடிந்தது..
இதனால், காங்கிரஸின் செல்வாக்கும் தெலுங்கானாவில் சற்று அதிகரித்திருப்பதை மறுக்க முடியாது.. அதனால்தான், பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த மாஜிக்கள் முதல் எம்எல்ஏக்கள்வரை காங்கிரஸை தேடி வந்து இணைந்தார்கள். இதற்கெல்லாம் ஒரு பலன் தற்போது கிடைத்துவிட்டது போலவே இருக்கிறது.
படுகுஷி: தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவா் ரேவந்த் ரெட்டி, படுகுஷியில் இப்போது இருக்கிறார். ,இதெல்லாம் ஒரு கணிப்புகள் என்றாலும், வாக்கு எண்ணிக்கையின்போதுதான், உண்மை நிலவரம் தெரியவரும்.. பார்ப்போம்..!!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications