மீண்டும் மீண்டுமா? ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் காவி உடையுடன் திருவள்ளுவர் படம்.. கடும் சர்ச்சை!
சென்னை: ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் மீண்டும் காவி உடையுடன் திருவள்ளுவர் படம் அச்சிடப்பட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது. ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் காவி உடையுடன் வள்ளுவர் படம் அச்சிப்பட்டுள்ளதற்கு தமிழ் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
திருவள்ளுவர், கவிஞர்கள் கபீர் தாஸ், யோகி வேமனா குறித்த சர்வதேச கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ளது. இந்த சர்வதேச கருத்தரங்கம் தொடர்பான ஆளுநர் ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் காவி உடையுடன் திருவள்ளுவர் படம் அச்சடிக்கப்பட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதற்கு பல்வேறு தமிழ் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, ஆளுநர் மாளிகையின் அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் மீண்டும் காவி உடையுடன் வள்ளுவர் படம் அச்சிடப்பட்டுள்ளதால் தமிழ் ஆர்வலர்கள் கொந்தளித்துள்ளனர்.
தமிழ்ச் சமூகத்தை ஆளுநர் புண்படுத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். வள்ளுவருக்கு காவி உடை அணிவித்து மத அடையாளமாக முன்னிறுத்தும் வேலையை ஆளுநர் தொடர்ந்து செய்து வருவதாகவும், இந்துத்வா அரசியலை பிரச்சாரப்படுத்தும் பணியில் ஆளுநர் மாளிகை பிரதான இடமாக இருக்கிறது என்றும் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
திருவள்ளுவரை அவர்கள் சார்ந்த அரசியலுக்கு பயன்படுத்த துடிக்கின்றனர். மதம் சாதி சார்ந்த வெறுப்பு அரசியலுக்கு திருவள்ளுவர் படத்தை பயன்படுத்துவதை ஏற்க முடியாது என்று எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்ட 'திருவள்ளுவர் திருநாள் விழா' அழைப்பிதழில் வள்ளுவர் காவி உடையில், பூணூல் அணிந்திருந்தது போன்ற படம் இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இதற்கு பல்வேறு தலைவர்களும், தமிழ் அமைப்புகளும் கண்டனத்தைப் பதிவு செய்து இருந்தனர்.
அதற்கு முன்பும் திருவள்ளுவர் தினத்தன்று தமிழக ஆளுநர் ரவி, "ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையைச் செலுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டார். அவரது பதிவில் காவி நிறம் கொண்ட திருவள்ளுவர் பட்டத்தையும் பதிவிட்டிருந்தார். அப்போதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடும் எதிர்ப்பை அடுத்து, காவி உடையுடன் பதிவிட்ட வள்ளுவர் படத்தை ஆளுநர் மாளிகை நீக்கியது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications