தவெக வேட்பாளர் மீது பாலியல் புகார்.. இதுதான் பெண்களுக்கு பாதுகாப்பா விஜய்? சரமாரி கேள்வி!
சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் மீது சரமாரியான புகார்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. இப்படி இருக்கையில், தற்போது பூந்தமல்லி தவெக வேட்பாளர் பாலியல் புகாரில் சிக்கியிருக்கிறார்.
பெண்கள் பாதுகாப்பு குறித்து பக்கம் பக்கமாக பேசும் விஜய், இதை பற்றியெல்லாம் கண்டுக்கொள்ள மாட்டாரா? என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன.

தவெகவும் வேட்பாளர்களும்
அதிமுகவும் இல்லை திமுகவும் இல்லை.. எங்கள் கட்சி மாற்றத்திற்குரிய கட்சி என்று சொல்லிதான் விஜய் அரசியல் களத்திற்கு வந்தார். ஆனால், அவரது கட்சியின் சார்பில் வேட்பாளர்களாக நிற்கவைக்கப்பட்டவர்களில் கணிசமானோர் அதிமுக, திமுகவிலிருந்து வந்தவர்கள்தான் என்பது.. அவரது பேச்சுக்கும், செயல்பாடுகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை காட்டுகிறது. தவெக சார்பில் அறிவிக்கப்பட்ட 234 வேட்பாளர்களில், சுமார் 106 பேர் மாற்றுக்கட்சியிலிருந்து திமுகவில் இணைந்தவர்கள்.
இவர்கள் எப்படி மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். இது போதாது என, தவெக வேட்பாளர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் குவிந்திருக்கின்றன.
ஜோசியமும் கேன்சரும்
கவுண்டம்பாளையம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த, அக்கட்சியின் நிர்வாகி ஆர்.டி.கனிமொழி சந்தோஷ் பேசியிருந்த விஷயங்கள் எல்லாம் அபத்தத்தின் உச்சம் என்றே சொல்லலாம். கேன்சர் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை எப்போது தேவை என்பதை ஜோதிடம் மூலம் தெரிந்துக்கொள்ளலாம் என்று அவர் பேசியிருந்தார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கேன்சர் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. முறையான சிகிச்சைதான் இதை காப்பாற்றும். ஆனால், ஜோதிடம் மூலம் இதற்கு தீர்வு காணலாம் என்று அவர் பேசியிருந்தது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
சாதி வெறியன்
அப்படியே தேனி மாவட்டம் வந்தால்.. கம்பம் தொகுதி தவெக வேட்பாளர் ஜெகநாத் மிஸ்ரா, பேசியதை கேட்டால்.. சாமானிய மக்கள் அனைவருக்கும் கோபம் வரும். தன்னை சாதி வெறியன் என்று ஜெகநாத் மிஸ்ரா வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறார். சாதிய கட்டமைப்பை உடைக்க சீர்திருத்த தலைவர்கள் எவ்வளவு முயன்றிருப்பார்கள்? தற்போதைய அரசியல் தலைவர்கள் இந்த விஷயத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டிய இடத்தில் இருக்கிறார்கள்.
ஆனால், மீண்டும் அதே சாதிய கட்டமைப்பை கொண்டுவரப்போகிறேன் என்று ஒருவர் பேசுகிறார்.. அவருக்கு எம்எல்ஏ சீட்டை விஜய் கொடுக்கிறார் எனில், இதை எப்படி ஏற்பது? என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
பூந்தமல்லி தவெக வேட்பாளர்
இந்த வரிசையில் தற்போது புதியதாக பூந்தமல்லி தவெக வேட்பாளர் டாக்டர் பிரகாசம் எனும் குட்டி இணைந்திருக்கிறார். பூந்தமல்லி தொகுதியின் தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரகாசம் குட்டி மீது, கட்சியின் மகளிரணியைச் சேர்ந்த பெண், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் பாலியல் சீண்டல் புகார் அளித்திருக்கிறார்.
மாற்றத்திற்கான கட்சியா தவெக?
பாலியல் சீண்டல் குறித்து கட்சித் தலைமையிடம் 6 மாதங்களுக்கு முன்பே புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அப்பெண் கூறியிருக்கிறார்.
மாற்றத்திற்கான கட்சி, பெண்களின் பாதுகாப்புக்கான கட்சி என்று குறிப்பிடும் விஜய், 6 மாதங்களுக்கு முன்னர் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவருக்கு எதற்கு சீட் கொடுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications