கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா.. தமிழகத்தில் 3ஆவது நாளாக 1000க்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,289 பேருக்கு வைரஸ் பாதிப்பு, ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகக் குறைந்திருந்த கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தலைநகர் சென்னை மட்டுமின்றி மாநிலம் முழுவதுமே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
தேர்தல் காலம் என்பதால் பிரசாரத்தில் அதிகளவிலான மக்கள் முறையான பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றாமல் ஒரே இடத்தில் ஒன்று கூடுகின்றனர். இதன் காரணமாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

3ஆவது நாளாக 1000 கடந்த வைரஸ் பாதிப்பு
தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வெளிமாநிலங்களிலிருந்து திரும்பிய ஒன்பது பேர் உட்பட 1,289 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,66,982 ஆக அதிகரித்துள்ளது.

அதிகரிக்கும் உயிரிழப்பு
அதேபோல நேற்று ஒரே நாளில் மட்டும் சிகிச்சை பலனிற்றி ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா காரணமாக இதுவரை 12,599 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் தற்போது 7,903 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 75,258 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

668 பேர் டிஸ்சார்ஜ்
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 668 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக கொரோனா தொற்றில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,46,480ஆக உயர்ந்துள்ளது. ஒரு புறம் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் அதேநேரம், கொரோனாவில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தலைநகர் சென்னை
அதிகபட்சமாகத் தலைநகர் சென்னையில் 466 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 257 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். அதைத்தொடர்ந்து செங்கல்பட்டில் 138 பேருக்கும் கோவையில் 109 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல தஞ்சையில் 73 பேருக்கும் திருவள்ளூரில் 72 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
-
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
தமிழ்நாட்டில் ஹையோசங் டிஎன்எஸ் புதிய தொழிற்சாலை.. ஏடிஎம் உற்பத்திக்கு திட்டம்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம்












Click it and Unblock the Notifications