பறக்கும்படை முதல் ஆதார் டோக்கன் வரை.. டாஸ்மாக்களில் புதிய விதிமுறைகள் அமல்.. இதை படிங்க முதல்ல!
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் வயதுக்கு ஏற்றபடி நேர ஒதுக்கீடு மற்றும் டோக்கன் சிஸ்டம் என்ற நிறைய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் வயதுக்கு ஏற்றபடி நேர ஒதுக்கீடு மற்றும் டோக்கன் சிஸ்டம் என்ற நிறைய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
Recommended Video
தமிழகத்தில் 40 நாட்களுக்கு பிறகு இன்று மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளது. டாஸ்மாக் இன்று திறக்கப்பட உள்ளதால் குடிமகன்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். இதனால் தமிழகம் முழுக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்னை மற்றும் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்படாது.

டோக்கன் சிஸ்டம்
இந்த நிலையில் இந்த மது விற்பனைக்காக டோக்கன் சிஸ்டத்தை டாஸ்மாக் கடைகள் கையில் எடுத்துள்ளது. அதன்படி மதுவாங்க செல்லும் நபர்கள் தங்கள் ஆதார் கார்டுகளை காட்ட வேண்டும். அதில் இருக்கும் எண்ணை பதிவு செய்துவிட்டு டோக்கன்களை தருவார்கள். ஒரே நபர்கள் ஒரே நாளில் மீண்டும் மீண்டும் மது வாங்குவதை தவிர்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டம் குறைவாக இருந்தால் டோக்கன் இல்லாமலே மதுபானம் வழங்கப்படும்.

உள்ளூர் நபர்கள்
அதேபோல் இந்த டோக்கன் முறைக்கு பின் இன்னொரு காரணமும் இருக்கிறது. அதன்படி ஆதார் கார்டு உள்ள நபர்கள் அந்த ஏரியாவில் மட்டுமே மது வாங்க முடியும். பக்கத்து ஊருக்கு சென்றால் மது வாங்க முடியாது. இதனால் சென்னையில் இருப்பவர்கள் செங்கல்பட்டு சென்று மதுவாங்க முடியாது. அதேபோல் இவர்களை தடுக்கும் வகையிலும் கடுமையான போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

வயது என்ன
அதேபோல் தமிழகத்தில் மதுபானங்களை வாங்க வயது கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை 50 வயதுக்கு மேலானவர்கள் மதுவாங்கலாம். இவர்கள் மற்ற நேரங்களில் சென்றால் மது வாங்க முடியாது, பகல் 1 மணி முதல் 3 மணி வரை 40 முதல் 50 வயதானவர்களுக்கும், 3 மணி முதல் 5 மணி வரை 40 வயதுக்கு கீழானவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பறக்கும்படை எப்படி
அதேபோல் தமிழகம் முழுக்க இதற்காக பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் கடைகள் முன்பாக பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக சென்னை அருகே இருக்கும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் பறக்கும்படை ரோந்து பணியில் இருக்கும். அதோடு முக்கியமாக மப்தியிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.












Click it and Unblock the Notifications