முதல்நாள் 19 மறுநாளே 36.. பகீர் கிளப்பும் தேனாம்பேட்டை.. கொத்து கொத்தாக புதிய கொரோனா கேஸ்.. பின்னணி!
சென்னையில் ராயபுரத்தை தொடர்ந்து தற்போது தேனாம்பேட்டையிலும் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைய தொடங்கி உள்ளது.
சென்னை: சென்னையில் ராயபுரத்தை தொடர்ந்து தற்போது தேனாம்பேட்டையிலும் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைய தொடங்கி உள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து சென்னையில் நேற்றுதான் மிக மோசமான நாள் ஆகும். ஏனென்றால் சென்னையில் நேற்று மட்டும் 50 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. அதில் 4 மருத்துவர்கள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் சென்னையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 285 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல் சென்னையில் நேற்று ராயபுரத்தில் மட்டும் 18 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. அங்கு கொரோனா காரணமாக இதுவரை 98 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தேனாம்பேட்டை நிலை
இந்த நிலையில் தற்போது தேனாம்பேட்டையில் புதிதாக 17 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது. தேனாம்பேட்டையில் நேற்று முதல் நாள் 19 பேருக்கு கொரோனா இருந்தது. நேற்று ஏற்பட்ட புதிய கேஸ்கள் மூலம் அங்கு 36 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தேனாம்பேட்டையில் ஒரே நாளில் கேஸ்களில் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளது. ராயபுரத்திற்கு இணையாக தேனாம்பேட்டையில் கொரோனா தீவிரம் அடைய தொடங்கி உள்ளது.

ராபிட் டெஸ்ட் பாசிட்டிவ்
நேற்று சென்னையில் பல இடங்களை சேர்ந்த கொரோனா அறிகுறி உள்ள நபர்களுக்கு ராபிட் டெஸ்ட் மூலம் கொரோனா சோதனை செய்யப்பட்டது. அதேபோல் தேனாம்பேட்டையில் கொரோனா அறிகுறி இருந்தவர்களுக்கு ராபிட் கிட் மூலம் சோதனை செய்யப்பட்டது. ஆனால் இதில் யாருக்கும் கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.நேற்று தேனாம்பேட்டையில் வந்த கேஸ்கள் எல்லாம் பிசிஆர் சோதனை மூலம் வந்த பாசிட்டிவ் கேஸ்கள் ஆகும்.

ஸ்டேஜ் 2 அதிகம்
அதேபோல் தேனாம்பேட்டையில் நேற்று வந்த கேஸ்களில் சில கேஸ்கள் மட்டும்தான் ஸ்டேஜ் 1. அதாவது இரண்டு பேர் மட்டுமே வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். மீதம் உள்ள 15 பேர் அவர்களுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக கொரோனா ஏற்பட்டவர்கள். அதாவது 2 பேருக்கு ஸ்டேஜ் 1 பரவல் மற்றும் 15 பேருக்கு ஸ்டேஜ் 2 பரவல் நேற்று சென்னையில் மட்டும் ஏற்பட்டுள்ளது. இதில் சிலருக்கு கொரோனா அறிகுறியே இல்லை.

குழப்பம்
தேனாம்பேட்டையை மொத்தமாக மூடி கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அங்கு மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனாலும் கூட தேனாம்பேட்டையில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. எப்படி பலருக்கு கொரோனா ஏற்படுகிறது, எப்படி ஸ்டேஜ் பரவல் வேகம் எடுக்கிறது என்பதே தேனாம்பேட்டையில் பெரிய புதிராக உள்ளது. அப்பகுதி மக்களை இந்த பரவல் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மண்டல வாரிய விவரம்
அதேபோல் கொரோனா பாதிப்பு குறித்து சென்னையில் மண்டல வாரியான விவரங்கள் வெளியாகி உள்ளது. சென்னையில் திருவொற்றியூர் பகுதியில் பேருக்கு 5 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வளசரவாக்கம் பகுதியில் 5 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அடையாறு 7 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தேனாம்பேட்டையில் 36 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தண்டையார்ப்பேட்டையில் 30 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

வேறு எங்கெல்லாம் கொரோனா
திருவிக நகரில் 38 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பெருங்குடியில் 7 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கோடம்பாக்கத்தில் 29 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அண்ணாநகரில் 26 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாதவரத்தில் 3 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.சோழிங்கநல்லூரில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆலந்தூரில் 5 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications