சென்னையில் நாய் கடித்து தம்பதி காயம்.. தொடர்ந்து வரும் நாய்க்கடி சம்பவங்களால் மக்கள் பீதி!
சென்னை: சென்னை சூளைமேடு பகுதியில் நாய் கடித்து தம்பதியர் காயமடைந்துள்ளனர். சென்னையில் நாய் கடித்து காயமடையும் சம்பவங்கள் தொடர்ந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூளைமேடு சர்புதீன் தெருவில் கடைக்குச் சென்றுவிட்டு திரும்பி வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்த நீலா, அவரது கணவர் பெயிண்டர் சுரேஷ் ஆகியோரை நாய் கடித்ததில் இருவரும் காயமடைந்தனர். மல்லிகா என்பவர் வளர்த்து வரும் நாய் தெருவில் சென்றபோது கடித்ததாக சூளைமேடு காவல் நிலையத்தில் நீலா புகார் அளித்துள்ளார்.

நாய் குரைத்ததைப் பார்த்ததும் நீலா, அந்த நாயின் உரிமையாளர்களிடம் சொன்னபோது, அவர்கள் கடிக்காது என்று கூறியுள்ளனர். ஆனால், நாய் விரட்டி வந்து நீலாவை கடித்துள்ளது. நீலா அலறும் சத்தம் கேட்டு அவரை காப்பாற்ற வந்த அவரது கணவர் சுரேஷையும் கடித்துள்ளது. நாய் கடித்து காயம் அடைந்த நீலா மற்றும் கணவர் சுரேஷ் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை கடந்த 5ஆம் தேதி இரண்டு நாய்கள் கடித்து குதறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலத்த காயமடைந்த அச்சிறுமி ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்பில் சிறுவன் ஒருவரை நாய் கடித்தது. விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை, அப்பகுதியில் உள்ளவர் வளர்க்கும் வெளிநாட்டு வகை நாய் விரட்டி கடித்தது. இதேபோல, நாவலூர் பகுதியில் 10 மாத குழந்தையை பொமேரியன் நாய் ஒன்று கடித்தது.
சென்னையில் நாய் கடி சம்பவங்கள் தொடர்ந்து வருவது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வளர்ப்பு நாய்களால் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மக்கள் நாய் இருக்கும் பகுதிகளுக்குச் செல்லவும், குழந்தைகளை அனுப்பவும் அஞ்சி பீதி அடைந்துள்ளனர்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications