தி.மு.க எம்பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி!
சென்னை: தி.மு.க எம்.பி. கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க. எம்.பி.யும், மகளிரணி செயலாருமான கனிமொழி தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் தி.மு.க. எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தான் வீட்டில் தனிமை படுத்திக் கொண்டுளளதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.

பம்பரமாக சுழன்று வரும் கொரோனா
தமிழகம் முழுவதும் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் மனதில் இடம் பிடித்து விட வேண்டும் என்று பம்பரமாக சுழன்று வருகின்றனர். இது புறமிருக்க கடந்த ஒரு ஆண்டுகளாக நம்மை அச்சறுத்தி வரும் கொரோனா தொற்றும் தமிழகம் முழுவதும் மீண்டும் பம்பரமாக சுழன்று வருகிறது.

சென்னையில் அதிக பாதிப்பு
தமிழகத்தில் சுமார் 5 மாதங்களுக்கு பிறகு தினமும் 3000-க்கு மேல் கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. சென்னையில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டு கொரோனா விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதனால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ என்கிற அச்சத்தில் மக்கள் உள்ளனர். தேர்தலுக்கு பிறகு கசப்பான அனுபவங்களை எதிர்கொள்ள தயாராகுங்கள் என்று சென்னை ஆணையரும் உறுதிபடுத்தி விட்டார்.

கனிமொழிக்கு கொரோனா
தேர்தல் பிரசாரங்களில் வேட்பாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டு வருவதால் அவர்களையும் கொரோனா தொற்று தாக்கி வருகிறது. தே.மு.தி.க.வின் எல்.கே.சுதீஷ், மக்கள் நீதி மையம், தி.மு.க, அ.தி.மு.க வேட்பாளர்கள் சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தி.மு.க. எம்.பி.யும், மகளிரணி செயலாளருமான கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனிமைபடுத்திக் கொண்டுள்ளார்
தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கனிமொழி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில்தான் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தான் வீட்டில் தனிமை படுத்திக் கொண்டுள்ளதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications