சுதந்திர போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் தர மறுக்கும் ஆளுநர் ரவி.. கே.பாலகிருஷ்ணன் பரபர
சென்னை: மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த உறுப்பினர் என். சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஆர் என் ரவி மறுப்பதாக சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினராக உள்ளவர் என். சங்கரய்யா.. 101 வயதான இவர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே கடந்த 2021இல் தமிழ்நாடு அரசு தகைசார் தமிழர் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

சுதந்திரப் போராட்ட வீரரான இவர், கல்லூரி படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு விடுதலை போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியவர். இவருக்கு டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்ற தமிழ்நாடு அரசு, அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்தது.
டாக்டர் பட்டம்: நாட்டின் விடுதலை போராட்டத்தில் பங்கேற்றது மற்றும் மக்கள் பணிகளுக்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் டாக்டர் பட்டம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 101 வயதான என். சங்கரய்யாவுக்கு வரும் நவ. 3ஆம் தேதி, மதுரை துணை வேந்தர் நேரடியாக வந்து டாக்டர் பட்டம் வழங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கிடையே என். சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ரவி மறுப்பு தெரிவதுள்ளதாக சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தலைநகர் சென்னையில் உள்ள விஜயா மகாலில் நடந்த மோடி கருத்தரங்கில் சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், "சுதந்திரப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா, அவரது படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு நாட்டின் விடுதலைக்காகப் போராடக் களத்திற்கு வந்த போராளி.. இதனால் அவர் பெற முடியாத பட்டத்தை இப்போது வழங்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்
பரபர புகார்: அதன்படி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வரும் நவம்பர் 3 அன்று நேரில் சென்று அவருக்கு டாக்டர் பட்டத்தை வழங்க உள்ளதாக அறிவித்தது. ஆனால் இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி அதில் கையெழுத்திட மறுத்துள்ளார். இந்த டாக்டர் பட்டத்தால் என்.சங்கரய்யாவிற்கு ஒன்றும் பெருமை கிடைத்துவிடாது. அவரால்தான் இந்த பட்டத்திற்குப் பெருமை. இதைக் கூட உணராத கூட்டம் சுதந்திரப் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த கூட்டம் இதன் மூலம் அம்பலப்பட்டுள்ளது" என்றார். இந்த செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், இது தொடர்பாகத் தனியாகச் செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேசிய கே.பாலகிருஷ்ணன், "எதற்காக இதை மறுக்கிறார் என எந்தவொரு காரணத்தையும் ஆளுநர் சொல்லவில்லை. கையெழுத்துப் போடவில்லை என்று மட்டும் மறுத்துள்ளார். காரணம் சொல்லியிருந்தால் அதற்கு உரிய விளக்கத்தைக் கொடுத்திருப்போம். அவர் சுதந்திரப் போராட்ட வீரரைக் கவுரவிக்க விரும்பவில்லை போலவே தெரிகிறது. ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் கொண்டவர்கள் சுதந்திரப் போராட்டத்தை அங்கீகரித்தது இல்லை" என்று அவர் தெரிவித்தார்.
அதேநேரம் ஆளுநர் மாளிகை தரப்போ அல்லது காமராஜர் பல்கலைக்கழகம் தரப்பிலோ இது தொடர்பாக எந்தவொரு விளக்கமும் தரப்படவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications