Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எழும்பூரை தாண்டினால் 12 கிமீக்கு எந்த ஆப்ஷனும் இல்லை.. கடற்கரை- செங்கல்பட்டு ரூட்டில் கவனித்தீர்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை எழும்பூரில் பணிகள் நடைபெறுவதால், மின்சார ரயில்கள் எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன. இதனால் ரயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன. இந்த சூழலுக்கு முக்கியமான காரணம் கிண்டி, சைதாப்பேட்டை, மாம்பலம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் சேத்துப்பட்டு வரை கிராஸ் ஓவர் வசதி இல்லை.. ஒருவேளை பரங்கிமலைக்கும் எழும்பூருக்கும் இடையே உள்ள இந்த 12 கி.மீ இடைவெளியில் ஒரு 'அவசர கால கிராஸ் ஓவர்' வசதி இருந்திருந்தால், இன்று எழும்பூரில் நடக்கும் பணிகளால் ஒட்டுமொத்த சென்னை புறநகர் ரயில்களும் ஸ்தம்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. இது ரயில்வேயின் நெடுங்காலத் திட்டமிடலில் உள்ள ஒரு பலவீனம் என்கிறார்கள்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் 720 கோடியில் பிரம்மாண்ட வசதிகளுடன் விமான நிலையம் போல் மேம்படுத்தப்பட்டு வருகிறது. மார்ச் 2027-க்குள் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தினசரி 1.5 லட்சம் பயணிகள் மற்றும் 46 விரைவு ரயில்களை கையாளும் வகையில் ரயில் நிலையம் மாற்றப்பட உள்ளது.

cross over Missing from Guindy to Chetpet

இதற்காக எழும்பூர் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் நடைமேடையில் மறுசீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, கடந்த 20-ந்தேதி முதல் நடைமேடை 10, 11-ல் இயக்கப்பட்ட மின்சார ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில் நடைமேடை 5, 6-ல் இயக்கப்பட்டு வருகிறது. எனவே, கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் வழக்கமாக இயக்கப்படும் 204 ரயில் சேவைகள் குறைக்கப்பட்டு, 164 ரயில் சேவைகளாக இயக்கப்பட்டு வந்தது.

மின்சார ரயில் சேவை குறைப்பு

மின்சார ரயில் சேவைகள் குறைக்கப்பட்டாலும் பல்வேறு காரணங்களால் ஆங்காங்கே மின்சார ரயில்களை நிறுத்தி இயக்க வேண்டிய சூழ்நிலை ரயில்வேக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பயணிகள் பெரிதும் அவதி அடைந்து வருகிறாக்ள். ரயில்வேயின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த 164 ரயில் சேவையில் இருந்து 49 ரயில் சேவைகள் ரத்து செய்து, 115 ரயில் சேவைகளாக குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த ரயில் சேவை குறைப்பு காரணமாக அலுவலகம், பள்ளிகள் மற்றும் கல்லூரிக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மொத்த சென்னையும் ஸ்தம்பித்து போனது.

பராமரிப்பு பணி

எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடக்கிறது என்றால் மற்ற ரயில் நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் ஒரே நேரத்தில் எழும்பூர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், பல்லாவரம் ஆகிய இடங்களில் ரயில்கள் நிற்காமல் செல்வது தான் இப்போதைய சிக்கலுக்கு காரணமாக உள்ளது.

ஸ்தம்பிக்க என்ன காரணம்

ஆனால் பரங்கிமலைக்கும் எழும்பூருக்கும் இடையே உள்ள இந்த 12 கி.மீ இடைவெளியில் ஒரு 'அவசரகால கிராஸ்ஓவர்' வசதி இருந்திருந்தால், இன்று எழும்பூரில் நடக்கும் பணிகளால் ஒட்டுமொத்த சென்னை புறநகர் ரயில்களும் ஸ்தம்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. இது ரயில்வேயின் நெடுங்காலத் திட்டமிடலில் உள்ள ஒரு பலவீனம் என்கிறார்கள் பொதுமக்கள்.

12 கிமீயில் உள்ள சிக்கல்

ஏனெனில் பரங்கிமலை நிலையத்தைத் தாண்டியவுடன், ரயில்கள் கிண்டி, சைதாப்பேட்டை, மாம்பலம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் மற்றும் சேத்துப்பட்டு ஆகிய நிலையங்களைக் கடந்துதான் எழும்பூர் அடைய வேண்டும். இந்த இடைப்பட்ட சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில், ரயில்கள் ஒரு பாதையிலிருந்து மற்றொரு பாதைக்கு மாறுவதற்கான ' பாயிண்ட் அண்டு கிராஸிங் அமைப்புகள் எங்குமே கிடையாது.

குடியிருப்புகளுக்கு இடையே உள்ளது

அதேபோல் அந்த வழித்தடம் முழுவதும் சென்னையின் மிக நெருக்கமான குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளுக்கு இடையே செல்கிறது. ஒரு 'கிராஸ்ஓவர்' அமைக்க வேண்டும் என்றால், தண்டவாளங்களுக்கு இடையே கூடுதல் இடைவெளி மற்றும் சிக்னலிங் கேபின்கள் தேவை. அதற்குப் போதிய இடம் இந்தப் பகுதிகளில் இல்லை. மேலும் கிண்டி, மாம்பலம் போன்ற அனைத்துமே வெறும் 'ஹால்ட்' நிலையங்கள் மட்டுமே. அதாவது, ரயில்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல மட்டுமே அங்கு நிற்க முடியும். ரயில்களைக் கையாளும் வசதி அங்கு கிடையாது.

சிக்னலிங் இன்டர்லாக்கிங் வசதி

எழும்பூருக்கு அடுத்து பரங்கிமலை வரை ரயில்கள் ஒரு தண்டவாளத்தில் இருந்து மற்றொரு தண்டவாளத்திற்குத் தாவி, மீண்டும் செங்கல்பட்டு அல்லது தாம்பரம் நோக்கித் திரும்புவதற்கான தண்டவாள இணைப்புகள் கிடையாது. ரயில்களைத் திருப்பி விட வேண்டுமென்றால், அங்கு 'சிக்னலிங் இன்டர்லாக்கிங்' வசதி இருக்க வேண்டும். சேத்துப்பட்டில் ரயில்கள் நேராகச் செல்வதற்கான சிக்னல்கள் மட்டுமே உள்ளன. ரயிலைத் திருப்பி விடுவதற்குத் தேவையான 'ஷண்டிங் சிக்னல்கள்' அங்கு இல்லை. அதேபோல் எழும்பூர் அல்லது தாம்பரம் போன்ற பெரிய நிலையங்களில் 'லூப் லைன்கள்' இருக்கும். அதாவது, மெயின் லைனில் இருந்து பிரிந்து ஒரு ரயில் நிலைய மேடையில் நின்று, பிறகு மீண்டும் மெயின் லைனுக்குச் செல்ல முடியும். எனவே சேத்துப்பட்டு அல்லது மாம்பலுத்தில் இருப்பது இரண்டு நேரடிப் பாதைகள் மட்டுமே. ஒரு ரயிலை

ஓட்டுர் மாற முடியாது

அதேபோல் ஒரு மின்சார ரயில் ஒரு திசையில் இருந்து மற்றொரு திசைக்குத் திரும்ப வேண்டுமென்றால், ஓட்டுநர் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்குச் செல்ல வேண்டும். சேத்துப்பட்டு போன்ற குறுகிய நடைமேடை கொண்ட இடத்தில், ரயிலை நடுவழியில் நிறுத்தி ஓட்டுநர் மாறுவது பாதுகாப்பற்றது மற்றும் காலதாமதத்தை ஏற்படுத்திவிடும்.

யார்டு வரை செல்ல வேண்டியுள்ளது

எனவே எழும்பூரில் பிளாட்பாரத்தில் வேலை நடப்பதால், ரயில்களை மாம்பலத்திலோ அல்லது கிண்டியிலோ திருப்பி விட முடியாது. இதனால்தான், ஒவ்வொரு ரயிலும் எழும்பூர் வரை சென்று, அங்குள்ள 'யார்டு' பகுதிக்குச் சென்றுதான் திசை மாற வேண்டியுள்ளது. இதுதான் கடும் காலதாமதத்திற்கு மூலக் காரணம் ஆகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+