இதைவிட கேவலப்படுத்த முடியுமா? அமைச்சர் பேச்சை கடுமையாக விமர்சித்த சிடிஆர் நிர்மல் குமார்!
சென்னை : கல்லூரி மாணவிகள் அரசு வழங்கும் ரூ.1000 உதவித்தொகையை எப்படி செலவிட வேண்டும் என்பது பற்றி அமைச்சர் துரைமுருகன் பேசியதாக ஒரு வீடியோவை பகிர்ந்து அதிமுகவின் சிடிஆர் நிர்மல் குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மூத்த அமைச்சர் துரைமுருகன் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், செப்டம்பர் 15ஆம் தேதி முதல் பெண்களுக்கு ரூ.1000 கொடுக்கப் போகிறோம். நீங்களே உங்கள் செலவுக்கு வாங்கிக்கொள்ளலாம். கணவர் சம்பாதிப்பதை அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு வந்துவிடலாம். எனவே குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், உங்கள் பெண் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கும் ஒரு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம். பஸ்ஸுக்கு அம்மாவிடம் போய் கேட்காதே. நீ பசங்களோட சினிமாவுக்கு போனா அங்க பணம் கேட்காதே. ஒரு செல்போன் வாங்கி வச்சுக்கோ. அதுல நைசாக பேசு, என்ன வேணும்னாலும் பண்ணு என்று அதுக்கும் ஒரு ஆயிரம் கொடுக்கிறோம்" என்று பேசியுள்ளார்.
மூத்த அமைச்சர் துரைமுருகன் இவ்வாறு பேசும் வீடியோ பாஜகவினரால் பரப்பப்பட்டு வருகிறது. அமைச்சர் துரைமுருகனின் இந்தப் பேச்சுக்கு பாஜக, அதிமுகவினர் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த சிடிஆர் நிர்மல் குமார் துரைமுருகனின் பேச்சை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக சிடிஆர் நிர்மல் குமார் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஆயிரம் ரூபாய் கொடுத்து பசங்களோட ஊர் சுத்துங்கனு சொல்றதுக்கு பெயர் என்ன தொழில் தெரியுமா? ஏழை மாணவிகள் படிப்பிற்கு கொடுக்கும் ஆயிரம் ரூபாயை இதற்கு மேலும் கேவலப்படுத்த முடியுமா?" என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications