"ஒட்டகம்" தலைய நீட்டுது.. குஜராத் மாடலா? 8ம் தேதி சாயங்காலம் தஞ்சைக்கு வந்துடுங்க.. கி. வீரமணி அதிரடி
சென்னை: நிலக்கரி சுரங்க விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளதையடுத்து, மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகம் போராட்டத்தை அறிவித்துள்ளது.. தஞ்சையில் ஏப்ரல் 8ம் தேதி இந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு மூத்த தலைவர் கி.வீரமணி அழைப்பு விடுத்துள்ளார்.
வருடத்துக்கு 1.15 கோடி டன் நிலக்கரி எடுக்கும் 3வது மிகப்பெரிய சுரங்கத்தை ரூ.3556 கோடி செலவில் அமைக்க என்எல்சி இந்தியா நிர்வாக குழுவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது..
இதற்காக 12,125 ஏக்கர் உட்பட மொத்தம் 25,000 ஏக்கர் நிலங்களை என்எல்சி கையகப்படுத்த போவதாக தெரிகிறது.. இந்த 3வது நிலக்கரி சுரங்கத்தின் பெரும்பாலான பகுதி, காவிரி படுகையை ஒட்டியே அமைய போவதாகவும் சொல்கிறார்கள்..

நிலக்கரி சுரங்கம்
இதைத்தவிர, 4வதாக, வீராணம் நிலக்கரித் திட்டம், 6வதாக, பாளையம்கோட்டை நிலக்கரித் திட்டம், 7வதாக, சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே நிலக்கரித் திட்டம், 8வதாக, தஞ்சாவூர் மாவட்டம் வடசேரி நிலக்கரித் திட்டம், 9வதாக அரியலூர் மாவட்டம் மைக்கேல்பட்டி நிலக்கரித் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படவுள்ளன.. இவைகளில், ஏற்கனவே செயல்பட்டு வரும் 3 நிலக்கரி திட்டங்கள் தவிர, மீதமுள்ள 6 திட்டங்களுக்காக, கிட்டத்தட்ட 1.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படக்கூடும்.. அதிலும், இவற்றில் வீராணம், பாளையம்கோட்டை, சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே, வடசேரி ஆகிய 4 திட்டங்களும் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் வருகின்றன.
அச்சம் கவலை
அதனால்தான், விவசாயிகள் கொந்தளித்து போயுள்ளனர்.. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க கூடாது என்றும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள்.. ஒரத்தநாடு சுற்றுவட்டார பகுதிகளில் நிலக்கரி எடுக்க விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் அகதிகளாக இடம்பெயரும் நிலை ஏற்படும், மத்திய அரசின் இந்த அறிவிப்பு எங்கள் தலையில் இடி விழுந்தது போல இருக்கிறது என்றும் விவசாயிகள் அச்சமும், வேதனையும், கவலையும் தெரிவித்து வருகிறார்கள்.. இந்த திட்டத்துக்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சி எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள்.

டெல்ட்டாக்காரன்
மத்திய அரசின் இந்த முயற்சிக்கு ஆதரவு தர போவதில்லை என்று தமிழக அரசும் தெளிவுபடுத்திவிட்டது.. நேற்று நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, "நானும் டெல்டாக்காரன்தான், உறுப்பினர்கள் உறுதியாக இருப்பதை போலவே, நானும் உறுதியாக இருப்பேன் என்றும், டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்க தமிழக அரசு நிச்சயம் அனுமதி வழங்காது" என்றார் திட்டவட்டமாக. மேலும், டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைப்பது தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பு குறித்து திமுக எம்எல்ஏ, டிஆர்பி ராஜா, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்ததையடுத்து, அதிமுக, காங்கிரஸ், பாமக உறுப்பினர்களும் நிலக்கரி சுரங்கம் விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர்.
தானடித்த மூப்பு
இந்நிலையில், திராவிடர் கழகமும் மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காவிரி டெல்டா விவசயிகளை இப்படிக் கொடுமைப்படுத்திடுவது எவ்வகையில் நியாயம்? இதுதான் குஜராத் மாடலா? வளர்ச்சி மாடலா? பயிர் விளைச்சல் நிலங்களை பாலைவனமாக்குவதா? என்றெல்லாம் அக்கட்சியின் தலைவரும், மூத்த அரசியல்வாதியுமான கி.வீரமணி கேள்வி எழுப்பி உள்ளார்.. இது தொடர்பாக அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.. அதில், பாஜக அரசு, மாநில அரசினைக்கூட கலந்து ஆலோசிக்காமல் 'தானடித்த மூப்பாகவே' நிலக்கரி அமைச்சரகம் கடந்த மார்ச் 29 ஆம் தேதி 101 வட்டாரங்களில் நிலக்கரி எடுப்பதற்கான ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது - வேதனையானது மட்டுமல்ல, வன்மையான கண்டனத்திற்கும் உரியதாகும் என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

ஒட்டகம்
டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டதற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் நெய்வேலியில் ஒன்றிய அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள பழுப்பு நிலக்கரி சுரங்கத்திற்கு அப்பகுதி விவசாய மக்கள் வரவேற்று, தங்களது நிலத்தை - உரிய நட்ட ஈடு இல்லை என்பதை அறிந்தும்கூட மனமுவந்து தர முன்வந்ததற்கு முக்கிய காரணங்கள் இரண்டு. நெய்வேலி நிலக்கரி சுரங்கத்துக்கு அப்பகுதி விவசாய மக்கள் மனமுவந்து ஆதரவு கொடுத்தது ஏன்? 1. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்; தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புப் பெருகும். 2. நிலம் கொடுத்த கிராம மக்களின் பிள்ளைகளின் வேலை வாய்ப்புக்கும் அப்போது உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
காலப் போக்கில், இந்த வாக்குறுதிகளும், இவர்கள் நாக்கில் தடவப்பட்ட தேனும், கற்பனைகளாயின! ''அசாமில் உள்ளவற்றிற்கு, உரிமத் தொகை அளிப்பதுபோல் நரிமணம் பெட்ரோலுக்கும், நெய்வேலியில் நிலக்கரி எடுப்பதற்குமான ''ராயல்டி'' தொகையை தமிழ்நாடு அரசுக்குக் கொடுக்கவேண்டுமென்ற திராவிடர் கழகத்தின் இடையறாத போராட்டம், தமிழ்நாடு முழுவதும் பேரணி, சுவரெழுத்துகள் - மக்களின் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்'' காரணமாக அதில் வெற்றி பெற்று, தமிழ்நாடு அரசு அதனை ஒன்றிய அரசிடமிருந்து, அந்த நிறுவனத்திடமிருந்து பெற்று வருகிறது. அது ஒன்றைத் தவிர, மீண்டும் வளர்ச்சி, இரண்டாம் சுரங்கம், மூன்றாம் சுரங்கம் என்று கூறி, பல்லாயிரக்கணக்கில் நமது ஏழை விவசாயிகளின் நிலங்களை நிறுவனம் பெறத் துடிக்கிறது!
தமிழ்நாட்டிற்குப் பதில் வடமாநிலங்கள்தான் பயன்பெறுகின்றன. பல யூனிட்டுகள் அங்கே எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், மீண்டும் புதுப்புது சுரங்கம் என்பது 'யார் தலையில் மிளகாய் அரைக்க' என்பதே தமிழ்நாட்டில் கட்சி வேறுபாடற்ற உரிமைக் கேள்விக் குரலாகும்! ''கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை'' என்ற கிராமியப் பழமொழிபோல், காவிரி டெல்டா பகுதியையும் ஆக்கிரமித்து, இப்பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்க, ஒன்றிய பா.ஜ.க. அரசு, மாநில அரசினைக்கூட கலந்து ஆலோசிக்காமல் 'தானடித்த மூப்பாகவே' நிலக்கரி அமைச்சரகம் கடந்த மார்ச் 29 ஆம் தேதி 101 வட்டாரங்களில் நிலக்கரி எடுப்பதற்கான ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது - வேதனையானது மட்டுமல்ல, வன்மையான கண்டனத்திற்கும் உரியதாகும்!
டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கங்களை அமைப்பதா? இந்த அறிவிப்பில் தமிழ்நாட்டைச் சார்ந்த 3 பகுதிகள் இடம்பெற்றுள்ளன!
1. அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தில் மைக்கேல்பட்டி.
2. கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டத்தில் சேத்தியாத்தோப்பு கிழக்குப் பகுதி.
3. தஞ்சை மாவட்டம் உரத்தநாடு பகுதியில் உள்ள வடசேரி - ஆகிய பகுதிகள்.
''ஒட்டகம்'' உள்ளே நுழைய தலைநீட்டுகிறது; இந்த நெய்வேலி நிறுவனத்தையே லாபம் ஈட்டும் பொதுத் துறை நிறுவனம் என்ற நிலையை மாற்றி, அதை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்க்கும் மறைமுகத் திட்டமும் இதில் பதுங்கியிருக்கும் நிலையில், இதன் விரிவாக்கம் எதை நோக்கிச் செல்லுகிறது? யாருக்குப் பயன்பட, இந்த விவசாயிகளின் வயிற்றில் அடித்து, வாரிசுதாரர்களின் பங்கீட்டில் ஒரு கொடுமை தீராத நிலையில், மேலும் காவிரி டெல்டா விவசயிகளை இப்படிக் கொடுமைப்படுத்திடுவது எவ்வகையில் நியாயம்? இதுதான் குஜராத் மாடலா? வளர்ச்சி மாடலா? பயிர் விளைச்சல் நிலங்களை பாலைவனமாக்குவதா? இது ஏற்கெனவே கொடுத்த வாக்குறுதி - அறிவிப்புகளுக்கு நேர் முரணானது என்பதைச் சுட்டிக்காட்டி,
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதி, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்துள்ளார்! தஞ்சையில் ஏப்ரல் 8 ஆம் தேதி மாலை 4 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம்! இத்திட்டம் 'அறவே கைவிடப்படல்' அவசரம், அவசியம்! இதனை வலியுறுத்தி வருகிற 8.4.2023 மாலை 4 மணியளவில் தஞ்சையில் எனது தலைமையில் திராவிடர் கழகம் ஏற்பாட்டில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது! இதில், திராவிடர் கழகம் மட்டுமல்லாமல், கட்சி வேறுபாடின்றி, அனைத்து டெல்டா பகுதி விவசாயிகளும், கட்சிகளும், பொது அமைப்பாளர்களும் கலந்துகொள்ளுமாறு கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications