Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எப்ஐஆரில் வேற இருக்கே.. திருப்புவனம் கொண்டு சென்றபோது அஜித்குமார் இறந்தாரா? வெளியான இறப்பு சான்றிதழ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருப்புவனம் அஜித்குமார் இறந்து 18 நாட்கள் ஆகியும் ஏன் இறப்புச்சான்றிதழ், இறப்பு அறிக்கை வழங்கப்படவில்லை என்ற சர்ச்சை எழுந்தவண்ணம் இருந்தது.. இதையடுத்து, திருப்புவனம் அரசு மருத்துவமனை வழங்கிய அஜித் குமாரின் இறப்பு சான்றிதழ், திருப்புவனம் காவல் நிலையத்தில் தயார் செய்யப்பட்ட இறப்பு அறிக்கையை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது..இது மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. என்ன காரணம்?

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவில் காவலாளியாக தனியார் ஒப்பந்த நிறுவனம் சார்பில் அஜித்குமார் (வயது 29) பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இந்த கோவிலுக்கு காரில் நிகிதா என்ற பேராசிரியையும், அவருடைய அம்மாவும் சென்றுள்ளனர்..

Death Certificate ajith kumar Tiruppuvanam

அப்போது தன்னுடைய காரிலிருந்த சுமார் 10 பவுன் நகை மாயமானதாக கூறி திருப்புவனம் போலீசில் நிகிதா புகார் தந்தார்.. இதையடுத்து, அஜித்குமாரை போலீசார் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

விறுவிறு சிபிஐ விசாரணை

விசாரணையின்போது, அஜித்குமாரை கொடூரமாக தாக்கியதில் அவர் பரிதாபமாக இறந்தார்.. இதையடுத்து, சம்பந்தப்பட்ட 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு மதுரை ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

அஜித்குமார் கொலை குறித்து மதுரை மாவட்ட 4-வது கோர்ட்டு நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், திருப்புவனத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி, தனது அறிக்கையை மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். மேலும், அஜித்குமார் வழக்கை சிபிஐயிடம் தமிழக அரசு ஒப்படைத்தது. இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் தங்களது விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்..

நிகிதா இருந்த அறை

அந்தவகையில், முதல்விசாரணையை, பத்திரகாளி அம்மன் கோவில் பின்புறம் கோசாலை பகுதியிலிருந்து துவங்கினார்கள்.. அஜித்குமார் தாக்கப்பட்டு, அது வீடியோவாக பரவிய காட்சிகளையும் அடுத்தபடியாக பார்வையிட்டனர்.

பிறகு கோவிலுக்கான வாகன நிறுத்தும் இடம், அப்பகுதியில் உள்ள தங்கும் விடுதி, மதுரை-ராமேசுவரம் சாலையில் தவளையாபுரம் கண்மாய் போன்ற இடங்களையும் பார்வையிட்டனர். காரணம், மேற்கண்ட இடங்களுக்கெல்லாம் அஜித்குமாரை, தனிப்படை போலீசார் அழைத்துச்சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. அதனால்தான், அந்த இடங்களில் சிபிஐ அதிகாரிகள் தங்களது செல்போன்களில் வீடியோவாக எடுத்துக்கொண்டனர்.

பிறகு அஜித்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன், நகைத் திருட்டு புகார் அளித்த நிகிதா இருந்த அறை உள்ளிட்ட இடங்களிலும் ஆய்வு செய்தனர்..

இறப்பு அறிக்கை எங்கே

இவ்வாறாக சிபிஐ விசாரணை நடந்து வரும்நிலையில், அஜித்குமார் இறந்து 18 நாட்கள் ஆகியும் ஏன் இறப்புச்சான்றிதழ், இறப்பு அறிக்கை வழங்கப்படவில்லை என்ற சர்ச்சை எழுந்தது..

அஜித்தின் இறப்பு சான்றிதழ் ஆவணங்களை பெறுவதில் சிரமம் ஏற்பட்டதாக நேற்றைய தினம் புகாரும் அளிக்கப்பட்டது.. இறப்பு சான்று ஆவணங்களை திருப்புவனம் போலீசார் வழங்கவில்லை என்று அவரது சகோதரர் நவீன், மதுரை மாவட்ட கலெக்டரிடம் இந்த புகார் மனுவை அளித்திருந்தார். ..

ஆனால், இறப்பு அறிக்கை குறித்து ஆவணங்களை நேற்றே சுகாதாரத்துறையிடம் வழங்கிவிட்டதாக போலீஸ் தரப்பில் விளக்கம் தரப்பட்டது.

இறப்புச் சான்றிதழ் தாக்கல்

இதையடுத்து, திருப்புவனம் அரசு மருத்துவமனை வழங்கிய அஜித் குமாரின் இறப்பு சான்றிதழ், திருப்புவனம் காவல் நிலையத்தில் தயார் செய்யப்பட்ட இறப்பு அறிக்கையை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது..

திருப்புவனம் அரசு மருத்துவமனை வழங்கிய இறப்புச் சான்றிதழில், தனிப்படை போலீசாரால் தாக்கப்பட்ட அஜித்குமார், திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே உயிரிழந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முரண்பட்ட அறிக்கைகள்

ஆனால், இந்த இறப்புச் சான்றிதழுக்கும், போலீசாரின் எஃப்ஐருக்கும் இடையே ஏகப்பட்ட முரண்கள் இருப்பதாக கூறப்படுகிறது.. அதாவது, திருப்புவனம் அரசு மருத்துவமனையில் அஜித்குமார் இறந்தார் என்று இறப்பு சான்றிதழில் உள்ளது.. ஆனால், காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் பதிவு செய்திருந்த எஃப்ஐஆரில், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் இரவு 11.15 மணிக்கு அஜித்குமார் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்குமார் இறந்தது திருப்புவனம் மருத்துவமனையிலா? ராஜாஜி மருத்துவமனையிலா? அப்படியானால் எஃப்ஐஆரில் பதிவு செய்யப்பட்டது உண்மைக்கு மாறானதா? என்ற சலசலப்பு தற்போது கிளம்பியிருக்கிறது..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+