Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்ன நடக்குது தமிழ்நாட்டில்? அண்ணாமலை vs தமிழிசை மோதல்.. களமிறங்கிய டெல்லி தலைமை.. போச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு பாஜகவில் உட்கட்சி மோதல் தொடர்பாக பாஜக தேசிய மேலிடம் அறிக்கை கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு பாஜகவில் அண்ணாமலை மற்றும் தமிழிசை இடையே ஏற்பட்டுள்ள மோதல் குறித்து பாஜக நிலைக்குழு உறுப்பினரான பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோரிடம் கட்சி மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் அறிக்கை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

tamilisai soundararajan south chennai lok sabha election 2024 bjp admk annamalai 2024 politics

அண்ணாமலை - தமிழிசை ஆதரவாளர்கள் இடையே மோதல் நீடிப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவிய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மோதல் : பாஜக தலைவர் அண்ணாமலை - முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை கட்டுப்படுத்த முடியாமல் டெல்லி தலைமை திணறி வருகிறது. 2024 லோக்சபா தேர்தலில் பாஜக மிக மோசமாக செயல்பட்ட நிலையில் அந்த கட்சிக்கு எதிராக கடுமையான சில பிரஷர் வைக்கப்பட்டு வருகிறதாம். முக்கியமாக பாஜக தேசிய தலைவர் நட்டா, அமித் ஷா ஆகியோருக்கும் கடுமையான பிரஷர் கொடுக்கப்படுகிறதாம்.

அதன்படி பஞ்சாப்பில் பாஜக ஜீரோ எடுத்துள்ளது. மேற்கு வங்கத்தில் சரியாக செயல்படவில்லை. தமிழ்நாட்டில் ஜீரோ எடுத்துள்ளது. இதனால் இந்த 3 மாநிலங்களில் பாஜக தோல்வி காரணமாக மாநில தலைவர்களை மாற்றும் எண்ணம் டெல்லி பாஜகவிற்கு உள்ளதாம். அண்ணாமலை உட்பட பலருக்கு ராஜினாமா நெருக்கடி கொடுக்கப்படலாம் என்கிறார்கள். இதை மடைமாற்றவே அண்ணாமலை 2026 முதல்வர் என்று பேச தொடங்கிவிட்டார் என்கிறார்கள். இந்த நிலையில்தான் அண்ணாமலை உட்பட பலரின் பதவி காலி ஆகலாம் என்கிறார்கள்.

மடைமாற்றம் மோதல்: அதோடு இல்லாமல் ஜேபி நட்டாவின் பதவிக்கு சிக்கல் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. பல மாநில தலைவர்கள், தேசிய தலைவர் ஜே பி நட்டா மாற்றப்படலாம். அமித் ஷாவிற்கும் பிரஷர் வரும். அமைச்சர் பொறுப்போடு நிறுத்த வேண்டும், தேர்தல் வியூகங்களை வகுக்க கூடாது என்று பிரஷர் வர உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

மோதல் வெடித்தது: இப்படிப்பட்ட நிலையில்தான் அண்ணாமலை - தமிழிசை இடையே மோதல் வெடித்தது . தமிழ்நாட்டின் பாஜக செயல்பாடு குறித்து மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார். அதில்., நான் கட்சிக்காக கடுமையாக உழைக்க கூடியவர்கள். நான் உட்கட்சி ஐடி நிர்வாகிகளை எதிர்க்கிறேன். எச்சரிக்கிறேன். தலைவர்கள் யாராவது கருத்து சொன்னால் அவர்களை மோசமாக பேச வேண்டாம். கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் மாநில தலைவராக எச்சரிக்கிறேன். நான் இங்கேதான் இருப்பேன்.

ஆளுநர் பணியை விட்டு நான் ஏன் இங்கே பணிகளை செய்கிறேன் என்றும் சிலர் அப்படி இப்படி பேசுகிறார்கள். கட்சியினருக்கே கேட்கிறேன். ஆளுநர் பணியை விட்டு விட்டு வந்ததற்கு நானே கவலைப்படவில்லை. உங்களுக்கு என்ன கவலை?.

இன்னொன்று நாங்கள் எல்லாம் 2 இடம் வரக்கூடியவர்கள் இல்லை.. வியூகம் அமைத்து கூட்டணி அமைத்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம்.. தேர்தலில் வியூகம் அமைத்தால்தான் வெற்றி பெறலாம். தேர்தல் கூட்டணி என்பது வியூகம். நாங்கள் வெற்றிபெற கூடிய நபர்கள். ஆனால் இரண்டாம் இடம் வந்துவிட்டோம்.

அதிமுக - பாஜக வாக்கை சேர்த்து இருந்தால் வென்று இருப்போம். கூட்டணி என்றால் கட்சி மோசம் போய்விட மாட்டோம். கூட்டணி வைக்கலாம் என்று நாங்கள் வியூகத்தை அமைத்தோம்.. சகோதரர் அண்ணாமலைக்கு அதில் விருப்பம் இல்லை. அதனால் செய்யவில்லை. அண்ணாமலையிடம் அதை நீங்கள் கேட்கலாம். எனக்கு கருத்து இருந்தால் நான் சொல்வேன்.

நான் மாநில தலைவரை எதிர்க்கிறேன் என்று சொல்ல மாட்டேன். கூட்டணி அமைத்தால் வென்று இருப்போம் என்று கூறுகிறேன். அவ்வளவுதான், என்றுள்ளார்.

பதிலடி: இந்த நிலையில் பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யா சூசகமாக பதில் அளித்துள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலை - முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யா, பாஜககாரர்களாகிய நாங்கள் ஏற்கனவே தமிழகத்தில் சீட் கிடைக்காததால் சோகமாக உள்ளோம். பாஜக அரசியலமைப்புச் சட்டத்தின்படி மாநிலத் தலைவர்தான் மாநிலப் பிரிவின் உச்ச முடிவெடுப்பவர். அவர்தான் முடிவுகளை எடுக்க கூடியவர்.

மூத்தவர்கள் முதல் ஜூனியர்கள் வரை மாறுப்பட்ட கருத்துக்களை கொண்ட எவரும் மீடியா மற்றும் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்வது டிவி ஸ்டுடியோக்களிலும் பிற இடங்களிலும் மிகவும் சங்கடமாக உள்ளது. அவர்கள் இதை தவிர்த்து கட்சிக்கு உள்ளே நடக்கும் மீட்டிங்குகளில் இதை பேச வேண்டும்.

அண்ணாமலை கடந்த 3 வருடங்களில் எங்களுக்கு மரியாதையும் கண்ணியமும் அளித்து, நல்ல அரசியல் தலைவர்களாக எங்களை வளர்த்தெடுத்தார் . அதில் எதையும் இழக்க விரும்பவில்லை. தமிழகம் முழுவதும் 19 இடங்களில் 11% வாக்குகளும். போட்டியிட்ட இடங்களில் மொத்தமாக 20% வாக்குகளும் பெற்றுள்ளோம்..

இங்கு ஆட்சிக்கு வருவதற்காக எங்கள் கட்சியை பன்மடங்கு வலுவாக வேண்டும். அதற்காக பணிகளை கட்டமைக்க விரும்புகிறோம்., என்று எஸ்ஜி சூர்யா கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+