Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛‛மாணவர் சங்கம் டூ லோக்சபா வேட்பாளர்’’.. நாகையில் சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜ் போட்டி.. யார் இவர்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.

வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான கட்சியின் நிர்வாகக்குழு கூட்டம், சென்னை தியாகராய நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அகில இந்திய செயலாளர் நாராயணா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்ல கண்ணு மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Details of Communist Party of India Nagapattinam Lok Sabha Constituency Candidate Selvaraj

இந்த கூட்டத்தில் நாகப்பட்டினம் லோக்சபா தொகுதி வேட்பாளராக வை.செல்வராஜ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் சவளக்காரன் ஊராட்சி கீழநாலாநல்லூர் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் வை.செல்வாஜ் (வயது 62). மன்னார்குடி அரசுக்கலைக் கல்லூரியில் பி.ஏ, பூண்டி புஷ்பம் கல்லூரியில் (எம்.ஏ, எம்.பில் ) முதுகலை கல்வி ஆராய்ச்சி பட்டம் வரை பெற்ற இவர், கல்லூரியில் படிக்கும் பொழுதே அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின், மாணவர் இயக்க தலைவராக பணியாற்றியிருக்கிறார்.

1980ம் ஆண்டு கட்சி உறுப்பினராக சேர்ந்து, தன்னை முழுநேர அரசியல் பணியில் ஈடுபடுத்தி கொண்ட அவர், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் செயலாளராக அதனை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மன்னார்குடி ஒன்றிய செயலாளராக 12ஆண்டு காலம் செயல்பட்டிருக்கிறார்.

மேலும் திருவாரூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினராக, பின்னர் திருவாரூர் மாவட்ட ஊராட்சி தலைவராக பொறுப்பேற்று எந்த குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகாமல் பணியாற்றியிருக்கிறார். இந்த காலத்தில் மூணாறு தலைப்பு வெண்ணாறு பிரிவிலிருந்து பொன்னீரை வரை சுமார் 50 கீ.மீட்டர் அனைத்து அரசியல் கட்சியினர், வெகுமக்கள் என 25 ஆயிரம் பேரை ஒரே நாளில் திரட்டி சிரமதான பணியில் ஈடுபடுத்தி தூர்வாரும் பணியை மேற்கொண்டார். இதற்கு முன்னர் வேறு எந்த அரசியல் கட்சிகளும், இந்த பகுதியில் இப்படியான இயக்கத்தை நடத்தியது கிடையாது.

டெல்லியில் நடைபெற்ற பஞ்யத்து ராஜ் மாநாட்டில் குடியரசு தலைவர், இந்திய பிரதமர் முன்னிலையில் உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரபகிர்வு சம்மந்தமாக இவர் ஆற்றிய உரை குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. இன்று வரை அரசியலில் புதியதாக இணையும் இளைஞர்களுக்கு இந்த உரை புதிய உத்வேகத்தையும், அரசியல் கோணத்தையும் கொடுப்பதாக இடதுசாரி தலைவர்கள் கூறுகின்றனர்.

தற்போது இரண்டாவது முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளராக செயல்பட்டு வருகிறார். இவரது மனைவி ஜீவரேகா நீதித்துறையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் இதில் மகள் வெண்பா வழக்கறிஞராகவும், மகன் நண்பா பட்டப்படிப்பும் படித்து வருகிறார்.

"எளிய குடும்பத்தில் பிறந்த இவர் செயலாற்றல் மிக்க வலிமை மிக்க அடையாளம் கொண்டவர் என்பதால் தற்போது நாகை நாடாளுமன்ற வேட்பாளராக கட்சி இவரை தேர்வு செய்துள்ளது" என்று சிபிஐ தலைவர்கள் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+