இவ்வளவுதான் இவர்களின் புத்தி.. கேப்டனுக்காக பொங்கிய புளுசட்டை மாறன்.. நெட்டிசன்கள் உடனடி ரியாக்சன்
சென்னை: வெளிநாட்டில் ஷூட்டிங். அதனால் கேப்டனுக்கு இறுதி அஞ்சலி செலுத்த முடியவில்லை என ஹூரோக்கள் பலர் சொல்லி இருக்கிறார்கள். இதில் பெரும்பாலும் பொய்களே அதிகமாம். புத்தாண்டை வெளிநாட்டில் கொண்டாடி முடித்த பிறகே இந்தியா வர திட்டமிட்டு இருக்கிறார்களாம். இவ்வளவுதான் இவர்களின் புத்தி என புளுசட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளார்.
புத்தாண்டை வெளிநாட்டில் கொண்டாட போனதால், விஜயகாந்த் மறைவுக்கு நடிகர்கள் பலர் வராமல் போனதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. சமூக வலைதளங்களில் விஜயகாந்த் மறைவு குறித்துதான் கடந்த இரண்டு நாட்களாக பேசப்படுகிறது.

பொதுவாக பிரபல நடிகர்கள், மக்களின் மனம் கவர்ந்த திரை நட்சத்திரங்கள் மரணம் அடையும் போது, அவரது இறப்புக்கு வராமல் போகிறார்கள். சிலர் வெளிநாடுகளுக்கு வந்திருப்பார்கள். சிலர் வெளிநாடுகளில் ஷூட்டிங்கிற்காக வந்திருப்பார்கள். அப்படியான சந்தர்ப்பங்களில் அவர்கள் திடீரென கிளம்பி வர முடியாமல், சில நாட்கள் கழித்தே வந்து அஞ்சலி செலுத்துகிறார்கள். இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு சில திரைப்பிரபலங்கள் நேரில் வந்து கலந்து கொள்ளவில்லை...
குறிப்பாக, அஜித், சூர்யா, தனுஷ், கார்த்தி, அஜித், சிம்பு, ஜெயம் ரவி, விஷால், ஆர்யா உள்ளிட்ட சில நட்சத்திரங்கள் வரவில்லை என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கிறார்கள். அதேநேரம் சமூக ஊடகங்கள் வாயிலாக அனைவருமே விஜயகாந்த்திற்கு இரங்கல் தெரிவித்தார்கள். அஜித் போனில் அழைத்து சுதீஷிடம் பேசி தனது இரங்கல் தெரிவித்தார். சூர்யா, விஷால் ஆகியோர் வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்தார்கள்.
இந்நிலையில் சமூக ஊடகங்களில் இவர்களை டார்கெட் செய்து விமர்சித்து வருகிறார்கள். பிரபல சினிமா விமர்சகரான புளு சட்டை மாறன் வெளியிட்ட பதிவில், "வெளிநாட்டில் ஷூட்டிங். அதனால் கேப்டனுக்கு இறுதி அஞ்சலி செலுத்த முடியவில்லை என ஹூரோக்கள் பலர் சொல்லி இருக்கிறார்கள். இதில் பெரும்பாலும் பொய்களே அதிகமாம். புத்தாண்டை வெளிநாட்டில் கொண்டாடி முடித்த பிறகே இந்தியா வர திட்டமிட்டு இருக்கிறார்களாம். இவ்வளவுதான் இவர்களின் புத்தி." என்று கூறியுள்ளார்.
வெளிநாட்டில் ஷூட்டிங். அதனால் கேப்டனுக்கு இறுதி அஞ்சலி செலுத்த முடியவில்லை என ஹூரோக்கள் பலர் சொல்லி இருக்கிறார்கள். இதில் பெரும்பாலும் பொய்களே அதிகமாம்.
— Blue Sattai Maran (@tamiltalkies) December 29, 2023
புத்தாண்டை வெளிநாட்டில் கொண்டாடி முடித்த பிறகே இந்தியா வர திட்டமிட்டு இருக்கிறார்களாம்.
இவ்வளவுதான் இவர்களின் புத்தி.
இவருக்கு பதில் அளித்துள்ள நெட்டிசன் ஒருவர், ஏதாவது ஒரு நிகழ்வுக்கு..விஜய் வந்துடாருனா அஜித் வரலனு திட்டுவாங்க..அஜித் வந்துட்டா விஜய் வரலனு திட்டுவாங்க ஏன்டா யாராவது வரலனா அதுக்கு சரியான காரணத்த தெரிஞ்சிக்கிட்டு பேசுங்க என்று கூறியுள்ளார். ஒருத்தர் சாவுக்கு நேரில் வந்து தான் இரங்கல் தெரிவிக்கணுமா....என்ன?. மனசுல அவர பத்தி நல்லெண்ணம் இருந்து நாலு வார்த்தை சொன்னால் போதும் .... மத்தவங்கள குறை சொல்லிட்டு அலைய வேண்டாம் என்று இன்னொரு நெட்டிசன் கூறியுள்ளார்.
இன்னொரு நெட்டிசன் கூறுகையில், நேரில் வராதது ஒன்றும் தவறில்லை, அவரவர் வாழ்க்கை அவரவர் இஷ்டம் போல் வாழ்வதற்கே,
மற்றவர்களை விமர்சித்து புகழ் சேர்ப்பதே அசிங்கம் என்று கூறியுள்ளார். இந்த மாதிரியான நிகழ்வுகளில் அவரவருக்கு நியாய காரணம் உண்டு.அது சம்மந்தப்பட்டவர்களின் புரிதல் சார்ந்தது. நடுவில் நின்று சுட்டிக்காட்டுவது அறத்தவறு என்றும் விமர்சித்துள்ளனர்.
நெட்டிசன் ஒருவர் இப்படி கூறுகிறார்.. "கேப்டனுக்கு தமிழக மக்கள் மிகுந்த மரியாதை அளித்துள்ளனர். கேப்டனின் இறுதிச் சடங்கிற்கு யார் வந்தாலும் வராவிட்டாலும் எங்களுக்கு கவலையில்லை.. ஒரு மனிதன் நல்லமனதுடன் மக்களுக்கு மரியாதை கொடுத்தால் அதை எப்படித் திரும்பப் பெறுகிறான் என்பதைப் பார்க்கும் வாய்ப்பை அவர்கள் இழக்கிறார்கள்." என்று கூறியுள்ளார். உண்மையில் யார் வந்தாலும் வரவிட்டாலும் கவலைப்பட வேண்டியது மக்கள் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஏதாவது காரணம் இருக்கும். அது மட்டுமின்றி டார்க்கெட் செய்து விமர்சனம் செய்வது தவறு..












Click it and Unblock the Notifications