"அச்சாணி" ஆடுது.. டெல்லிக்கே போறாங்களாம்.. "தூக்குங்க அவரை, விடாதீங்க".. ஸ்டாலினுக்கு வந்தது தலைவலி?
சென்னை: செந்தில் பாலாஜி விவகாரத்தில், அடுக்கடுக்கான புகார்களும், அதையொட்டிய சலசலப்புகளும் நடந்தவாறே உள்ளது.. அந்தவகையில், இதோ அடுத்த சிக்கல் கிளம்பி உள்ளது. இதுகுறித்த சில முக்கிய தகவல்களும் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளன.
முதல் முதலாக, அன்று செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கின் வீட்டை சோதனையிட முயன்ற வருமான வரித்துறை அதிகாரிகளை திமுக ஆதரவாளர்கள் சூழ்ந்துகொண்டு அச்சுறுத்தியிருந்தனர்.

வருமானவரித்துறையின் பெண் அதிகாரி என்றும் பாராமல் அவரிடம் அத்துமீறி அவதூறாக நடந்து கொண்டனர். ஒரு சிலர், ஆவணங்களை எடுத்துக்கொண்டு ஓடினர். இந்த விவகாரம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மன்னிப்பு கேள்: "உன்னுடைய ஐடி கார்டு எங்கே காட்டு.. நீ போய் ரெய்டு பண்ணு.. ஆனால், இப்போ அடிச்சதுக்கு மன்னிப்பு கேட்டுட்டு போ.. உங்க வீட்டு ஆம்பிளையை இப்படித்தான் அடிப்பியா?" என்று கேட்டுள்ளனர்.. இந்த வீடியோவும் அப்போது இணையத்தில் வைரலானது.
ஐடி அதிகாரிகளின் கார் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டதுடன், காரை காலால் எட்டி உதைத்து தாக்குதலும் நடத்தியதாக கூறப்பட்டது. இது தொடர்பான வாக்குவாதத்தில், திமுக நிர்வாகியை வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கியதாகவும் சொல்லப்பட்ட நிலையில், இந்த விஷயமெல்லாம் வருமான வரித்துறையின் தலைமை அலுவலகத்தின் கவனத்துக்கும், மேலிடத்துக்கும் சென்றுவிட்டது...
குறைபாடுகள் காரணம்: "தமிழ்நாடு போலீசிடம் தெரிவிக்காமல் வந்ததே பாதுகாப்பு குறைப்பாட்டிற்கு காரணம்" என்று அப்போது திருப்பூர் எஸ்பியும் விளக்கம் தந்திருந்தார் என்றாலும், வருமானவரி துறை அதிகாரிகள் ராணுவ பாதுகாப்பை கோரினார்கள்.. அதிகாரிகளை தாக்கியதாக 19 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், அவர்கள் ஜாமீன் பெற்றதுமே, அதிருப்தி அடைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் மேல்முறையீடு செய்யவும் திட்டமிட்டனர்..
இந்த சம்பவம் நடந்தபோது, வெளிநாட்டில் இருந்தார் நம்முடைய முதல்வர் ஸ்டாலின்.. விஷயத்தை கேள்விப்பட்டதுமே, தலைமை செயலாளரிடமும், டிஜிபியிடமும் உடனடியாக ஆலோசித்துள்ளார். திமுக உள்ளிட்ட யாராக இருந்தாலும், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவும், உத்தரவிட்டிருந்தார்..
செம டோஸ்: அதுமட்டுமல்ல, வருமானவரித்துறையினர் கோரிக்கை வைத்தாலும், வைக்காவிட்டாலும் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.. சட்டம் ஒழுங்குக்கு எந்த குந்தகமும் வந்து விடக்கூடாது என்று சற்று காட்டமாகவே கூறியிருந்தார்..
இதற்கு பிறகு, செந்தில் பாலாஜியை தொடர்புகொண்டு "செம டோஸ்" தந்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. பிறகு, மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ஆர்.எஸ். பாரதியிடமும் ஸ்டாலின் விவாதித்துள்ளார்.. அதற்குபிறகுதான், பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் ஒன்றை தந்திருந்தார் மூத்த தலைவர் ஆர்எஸ் பாரதி..!!
இப்படி ஐடி ரெய்டின் போது அதிகாரிகள் தாக்கப்பட்ட விவகாரம் தேசிய அளவில் பேசுபொருளானது. இப்போதும் இதே விவகாரம்தான் பற்றிக்கொண்டு எரிகிறது.. வருமானவரித்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தும், ரௌடியிசம் பண்ணியதும் தொடர்பான புகாரில் உண்மையான குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்றும், அவர்களை கைது செய்ய எந்த முயற்சியும் தமிழக காவல்துறை எடுக்கவில்லை என்றும் வருமானவரித்துறை கருதுகிறது.
சிபிஐ விசாரணை: அதனால், வருமானவரித்துறை தாக்கப்பட்ட வழக்கில், உண்மையான குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்படாததால், இந்த வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று நீதிமன்றத்தை அணுகவிருக்கிறது வருமானவரித்துறை.
ஒருவேளை சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணைக்கான உத்தரவு கிடைக்காமல் போனால் உச்சநீதிமன்றம் சென்றாவது அந்த உத்தரவை பெற வேண்டும் என்கிற முணைப்பில் வருமானவரித்துறை அதிகாரிகள் இருக்கிறார்களாம்..
மீண்டும் தலைவலி: இதற்கான ஆலோசனை கடந்த வாரம் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திலும் நடந்து முடிந்திருக்கிறது.. அதனால், சிபிஐ விசாரணைக் கேட்டு விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது வருமானவரித்துறை. இதனால், திமுக அரசுக்கு மீண்டும் தலைவலி வந்துள்ளதாக சொல்கிறார்கள்..!!!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications