வர்றது ஸ்டாலினா.. "வணக்கம்" வைத்தபடியே "தெருவில்" நுழைந்த முதல்வர்.. யார் அது மேம்பாலத்தில்? அடிதூள்
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் நேற்றைய தின போட்டோக்கள், இணையத்தை கலக்கி கொண்டிருக்கின்றன.. இதை பார்த்து திமுக தொண்டர்கள் பூரித்துள்ளனர்.. என்ன காரணம்?
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மேம்பாலங்கள் அழகுபடுத்துதல், புதிய மேம்பாலங்கள் அமைத்தல், பூங்காக்களை சீரமைத்தல், நீரூற்றுகள் நிறுவுதல் உள்ளிட்ட பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில்தான், சென்னையின் மிகப்பெரிய வர்த்தக பகுதியான தியாகராய நகரில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் 3 வருடங்களுக்கு முன்பு ரூ.28 கோடியே 45 லட்சம் செலவில் ஆகாய நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
ஆகாய மேம்பாலம்: தியாகராய நகருக்கு வரும் ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக மாம்பலம் ரெயில் நிலையத்தில் இருந்து தியாகராய நகர் மேட்லி சாலை சந்திப்பு வரை ஆகாய மார்க்கமாக நடந்து செல்லும் வகையில், இந்த ஆகாய நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.. மஞ்சள் நிறத்தில் வண்ணம் பூசப்பட்ட இந்த பாலம் வழியாக பொது மக்கள் நெரிசலில் சிக்காமல் மாம்பலம் ரெயில் நிலையத்தில் இருந்து தி.நகர் மேட்லி சாலையை அடைய முடியும்.
இந்த பாலம் 570 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டது. தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஓவியங்களும், படிக்கட்டுகளில் வர்ணங்களும் பூசப்பட்டுள்ளது. ஆகாய நடை மேம்பாலத்தின் அருகில் உள்ள மரங்களில் வண்ணப் பறவைகளின் உருவங்களும் வரையப்பட்டுள்ளது.. இந்த பாலத்தில் மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி செல்லும் வகையில் சக்கர நாற்காலி வசதியும் செய்யப்பட்டு உள்ளது. தியாகராய நகர் பஸ் ஸ்டாண்டை ஒட்டிய பகுதியில் நகரும் படிக்கட்டும் அமைக்கப்பட்டுள்ளது.
மின்விளக்குகள்: மின் விளக்குகளும், கண்காணிப்பு கேமரா வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மாம்பலம் போலீஸ் நிலையத்தில் இருந்து இந்த கண்காணிப்பு கேமராக்களை கண்காணிக்க முடியும். தியாகராய நகரில் இனி கூட்ட நெரிசலை குறைக்கப்போகும் இந்த பாலத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்..
தியாகராய நகர் பேருந்து நிலையத்தில் இருந்து ஆகாய நடை மேம்பாலத்தை திறந்து வைத்த முதல்வர், பிறகு, இந்த நடை மேம்பாலத்திலேயே நடந்து சென்றார்... ஸ்டாலின் மேம்பாலத்தில் நடந்து வருவதை பார்த்து, அந்த பகுதி மக்கள் தங்களின் வீட்டின் மாடியில் இருந்தப்படியே கைகளை ஆர்வத்துடன் அசைத்தனர்.. முதல்வர் வாழ்க என்று மாடிகளில் நின்றுகொண்டே முழக்கமிட்டனர்.. இதனை பார்த்த முதல்வர் ஸ்டாலின், பதிலுக்கு அவர்களுக்கு கையசைத்து வணக்கம் வைத்தார்.
கலக்கல் ஸ்டாலின்: அதற்கு பிறகு, முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என பலருடன் சேர்ந்து, செல்பி எடுத்து கொண்டார்.. சிலரது செல்பிக்கு சிரித்தப்படியே போஸ் கொடுத்தார்.. பெண்கள் பலரிடமும், "திமுக ஆட்சி எப்படி இருக்கிறது" என்று கேட்டும் தெரிந்து கொண்டார்... ஆகாய நடைமேம்பாலத்தில் நடந்து வந்த முதல்வர், பிறகு ரங்கநாதன் தெருவுக்குள்ளும் நடந்து வந்தார்..
திடீரென ஸ்டாலினை பார்த்ததுமே, வியாபாரிகளும், பொதுமக்களும் திக்குமுக்காடிவிட்டனர்.. அனைவரிடமும் சென்று கைக்குலுக்கினார் முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின்.. தங்களுக்கு, முதல்வர் கை குலுக்கியதை பார்த்து, பொதுமக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.. சிலர் வாயடைத்து போனார்கள்.. அருகில் வந்து நிற்கும் முதல்வரிடம் என்ன பேசுவதென்றே தெரியாமல் சிலர் பூரிப்பில் திணறிவிட்டனர்.. இப்படி, யாருமே எதிர்பாராத வகையில், தி.நகர். ஷாப்பிங் வந்தவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து கலக்கிவிட்டார் முதல்வர் ஸ்டாலின்..!!
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications