சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"மச்சக்காரர்".. ஓவர் ஓவர்.. "இது ஓகேவா" எடப்பாடி கேட்டதுமே புருவத்தை சுருக்கிய டெல்லி?.. சுபம் போலயே

எடப்பாடி பழனிசாமி பாஜக ஆதரவை பெறுவதற்கு அடுத்தக்கட்ட முயற்சியில் இறங்கி உள்ளாராம்

Google Oneindia Tamil News

சென்னை: எடப்பாடி பழனிசாமியின் அடுத்த பிளான் என்ன என்பது குறித்து ஒருசில யூகமான தகவல்கள் வட்டமடித்து வருகின்றன..!

அதிமுகவில் உட்கட்சி பூசல் இன்னும் ஒரு முடிவுக்கு வராத நிலையில், அக்கட்சி மீதான அக்கறை பிற கட்சி தலைவர்களுக்கும் சூழ்ந்துள்ளது.. எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பிடிவாதத்தினால் கட்சியை காணாமல் போக செய்து கொண்டிருக்கிறார் என்ற விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.

சில நாட்களுக்கு முன்புவரை, எடப்பாடி தரப்பு பாஜகவையே எதிர்க்க தயாராகிவிட்டது என்று செய்திகள் பரபரத்த நிலையில், அதுவும் புஸ்ஸென்று போய்விட்டது.. ஒட்டுமொத்த அதிமுக தலைமைகளும், பாஜகவிடம் சரண்டர் ஆகிவிட்ட நிலையில், பாஜக இதையும் தங்களுக்கு பிளஸ் ஆக்கி கொண்டு வருகிறது..

நெருங்கும் கிளைமேக்ஸ்! ஓபிஎஸ்? இபிஎஸ்? தேதி குறித்த உச்சநீதிமன்றம்! விடை கொடுக்குமா வெள்ளிக்கிழமை? நெருங்கும் கிளைமேக்ஸ்! ஓபிஎஸ்? இபிஎஸ்? தேதி குறித்த உச்சநீதிமன்றம்! விடை கொடுக்குமா வெள்ளிக்கிழமை?

 ப்ளான் என்ன

ப்ளான் என்ன

அந்தவகையில்தான் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசிவிட்டு வந்தது.. ஆனால், பிரதமர் மோடியை சந்திக்க முடியவில்லை.. எனவே, பிரதமரை சந்திப்பதற்கான முயற்சியையும் வேகப்படுத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.. அமித்ஷாவை சந்தித்துவிட்டு பேசிய நிலையில், பிரதமர் மோடியை எடப்பாடியால் ஏன் சந்திக்க முடியவில்லை.. எதற்காக இந்த சந்திப்பு நடக்காமல் போய்விட்டது? அமித்ஷாவுடனேயே அமுங்கிவிட்ட இந்த சந்திப்பின் பின்னணி என்ன என்பது குறித்த சில தகவல்கள், தற்போது இணையத்தில் கசிந்து வருகின்றன.

 3 டீம் 3 %

3 டீம் 3 %

அதாவது, எடப்பாடி டீமுக்கு வழக்கம்போல் அதே அறிவுரையை சொன்னாராம் அமித்ஷா.. கட்சி ஒற்றுமையாக இருந்தால்தான் அதிமுக வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அள்ள முடியும்.. ஓபிஎஸ் + சசிகலா + டிடிவி 3 பேரையும் அரவணைத்து கட்சிக்குள் அழைத்து கொள்ளுங்கள் என்று சொல்லியும் எடப்பாடி வழக்கம்போல் மறுத்து விட்டாராம். இதற்கு மீண்டும் அமித்ஷா தரப்பில் பொறுமையாக எடுத்து சொல்லப்பட்டுள்ளது.. கடந்த தேர்தலில் வெறும் 3 சதவீத வாக்கு சதவீதத்தில் ஆட்சியை இழந்து நிற்கிறீர்கள்.. தினகரனுக்கு 4 சதவீதம் ஓட்டு வங்கி உள்ளது.. கிருஷ்ணசாமிக்கு ஒரு சதவீதம் உள்ளது.. விஜயகாந்த்துக்கு ஒன்றரை சதவீதம் வாக்கு வங்கி உள்ளது..

 நொறுங்கும் ப்ளான்

நொறுங்கும் ப்ளான்

இதெல்லாம் சேர்த்தாலே 5 சதவீதம் வாக்கு வங்கி கிடைத்திருக்குமே.. நீங்களும் ஆட்சியை தக்க வைத்திருக்கலாமே.. அதனால்தானே அனைவரையும் கூட்டணிக்குள் ஒன்றிணைத்து கொள்ள சொன்னேன்.. அப்போதாவது ஓபிஎஸ் உடன் இருந்தார்.. இன்று கட்சியே இரண்டாகிவிட்ட நிலையில், அதிமுக வாக்கு வங்கி இன்னும் சரியாதா? இது திமுகவுக்குதானே நன்மை? அதனால், ஓபிஎஸ் + சசிகலா + டிடிவி 3 பேரையும் இணைத்து கொள்ளுங்கள்" என்று அறிவுறுத்தப்பட்டதாக தெரிகிறது.

 50% சப்போர்ட்

50% சப்போர்ட்

ஆனால், இதையும் மறுத்து பேசியதாம் எடப்பாடி தரப்பு.. 20 மாவட்டங்களுக்கு மேல் நேரடியாகவே சுற்றுப்பயணம் செய்துவிட்டேன்.. எங்குமே ஓபிஎஸ் அலை வீசவில்லை.. யாருமே அவருடன் இல்லை.. இப்போதைக்கு கட்சி என்னிடம்தான் உள்ளது.. இதுவே 50 சதவீத வெற்றிதான்.. இன்னும் இரட்டை இலை மட்டும் கைக்கு வந்தால் போதும்.. நீங்கள் சொல்லும் அறிவுரையையும் ஏற்கிறேன்.. பாஜகவுக்கு 20 சீட்டுகளைகூட ஒதுக்கி தருகிறோம்..

 இலை & தலை

இலை & தலை

ஓபிஎஸ் + டிடிவி +சசிகலா போன்றோரையும் இணைத்து கொள்கிறேன்.. அவர்களை தேர்தலில் போட்டியிடவும் செய்கிறேன்.. நிச்சயம் அதிமுக தொண்டர்களும் அவர்களுக்கு ஓட்டு போடுவார்கள்.. ஆனால், அவர்கள் 3 பேருக்கும் பாஜக கோட்டாவிலேயே சீட் தந்துடுங்க.. ஆனால், இரட்டை இலைக்குள் மட்டும் வேண்டாம்" என்றாராம். இதை அமைதியாக அமித்ஷா கேட்டுக் கொண்டு எந்த சாதகமான பதிலையும் சொல்லவில்லையாம்.. அதனாலேயே பிரதமர் தரப்பும் இவர்களை சந்திக்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது..

 மேலிட சப்போர்ட்

மேலிட சப்போர்ட்

அதனால், வேறு பிளானை எடப்பாடி டீம் கையில் எடுத்துள்ளதாம்.. அதன்படி, விரைவில் கட்சி பொதுச்செயலாளராக அறிவிக்க வாய்ப்புள்ள நிலையில், கட்சி முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும்.. இலையும் கையில் தானாகவே வந்துவிடும்.. அதற்கு பிறகு வாழ்த்து பெறுவதற்காக டெல்லி செல்லும்போது, கட்சி தன் கட்டுப்பாட்டில் உள்ளதை எடுத்து சொல்லி, மேலிட ஆதரவை பெற்றுவிடலாம் என்று திட்டமிடப்பட்டு வருகிறதாம்.. இதற்கு மோடியின் கிரீன் சிக்னல் கிடைக்குமா? அதிமுகவுக்குள் ஓபிஎஸ் & கோ உள்ளே வருவார்களா? அப்படியே வந்தாலும், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார்களா? என்பதெல்லாம் தெரியவில்லை.. அதைவிட முக்கியம், எடப்பாடியின் இந்த அசுர வளர்ச்சியை, மேலிட பாஜகவே விரும்புமா என்பதும் சந்தேகம்தானாம்..

 பச்சை சிக்னல்

பச்சை சிக்னல்

எனினும், தமிழகத்தில் இந்த முறை எப்படியாவது 10 தாமரைகளை மலர வைத்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக துரிதமாக காய்களை நகர்த்தி கொண்டிருப்பதால், அரசியலில் எதுவும் மாறக்கூடும் என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், எத்தனை நெருக்கடிகள் வந்தாலும், ஒவ்வொன்றையும் அசால்ட் செய்து, ஆளுமையால் எடப்பாடி முன்னேறி வருகிறாரே என்று ஒரு தரப்பில் வியந்து சொல்கிறார்களாம்.. ஆனால், மற்றொரு தரப்பிலோ, "சட்டசிக்கல் இன்னும் நீடிக்கிறது, மேல்முறையீடுகள் உள்ளநிலையில், தேர்தல் ஆணையமும் எந்த முடிவும் தெரிவிக்காத நிலையில், இதெல்லாம் தற்காலிகமே என்கிறார்கள்.. இனி, அடுத்து என்ன நடக்க போகிறதென்று தெரியவில்லை.. பார்ப்போம்..!

English summary
Did Edappadi Palanisamy get a green signal from the BJP and Can he party run without OPS
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X