அமல்படுத்திய டொனால்ட் டிரம்ப்.. அமெரிக்கா பிரஷருக்கு அடிபணிந்த மோடி? பாயிண்டை பிடித்த காங்கிரஸ்
சென்னை: அமெரிக்க அதிபர் டிரம்ப் கொடுத்த அழுத்தம் காரணமாக மோடி அடிபணிந்து விட்டார் என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக புகார் வைத்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் வைத்துள்ள குற்றச்சாட்டில், இந்தியா மிக மோசமாக வரி விதிக்கிறது. மிக மிக மோசமாக வரி விதிக்கிறது. அப்படிப்பட்ட இந்தியாவில் நீங்கள் எதையும் விற்க முடியாது. இந்தியாவில் ஒரு பொருளை விற்க ஏகப்பட்ட அளவில் நீங்கள் வரி கட்ட வேண்டும்.

அதற்கு விற்காமல் இருக்கலாம். ஆனால் இப்போது இந்தியா இறங்கி வந்துள்ளது. எங்களின் கோரிக்கைக்கு அவர்கள் அடிபணிந்து உள்ளனர். எங்களின் கோரிக்கையை அவர்கள் ஏற்ற வரிகளை குறைக்க முடிவு செய்துள்ளனர். மிக அதிக அளவில் வரிகளை குறைக்க முடிவு செய்துள்ளனர். நாங்கள் அவர்களை அம்பலப்படுத்திவிட்டோம்.. இந்தியாவை அம்பலப்படுத்தியதால் வேறு வழி இன்றி அவர்கள் வரியை குறைத்துவிட்டனர், என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டி உள்ளார்.
இந்தியா மீது வரி
இது போக Reciprocal tariffs என்று அழைக்கப்படும் பரஸ்பர கட்டணங்கள் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். இதன் மூலம் இந்தியா நேரடியாக பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கையில், நாங்கள் விரைவில் பரஸ்பர கட்டணங்களை அறிவிப்போம். ஏனென்றால் அவர்கள் எங்களிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள், நாங்கள் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறோம். அவ்வளவுதான்.. விஷயம் மிகவும் எளிமையானது. இந்தியா அல்லது சீனா அல்லது வேறு எந்த நாடாக இருந்தாலும் சரி.. நாடு எதுவாக இருந்தாலும், அவர்கள் என்ன கட்டணம் வசூலித்தாலும், நாங்கள் நியாயமாக இருக்க விரும்புகிறோம்.. நாங்களும் அதே கட்டணம் வசூலிப்போம்.. அவர்கள் எங்களிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள், நாங்கள் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறோம் அவ்வளவுதான் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியா வரி குறைப்பு
டிரம்ப்பின் இந்த எச்சரிக்கைக்கு இந்தியா பதிலடி தரவில்லை. இதுவரை இந்தியா எந்த விதமான எதிர் கருத்தும் சொல்லவில்லை. சில அமெரிக்கா பொருட்களுக்கு இந்த வரியை குறைத்தது. போர்பன் விஸ்கி மீதான வரியை இந்தியா 150%ல் இருந்து 100% ஆக குறைத்துள்ளது. இந்த வரி குறைப்பு Suntory's Jim Beam போன்ற பிரபல அமெரிக்க பிராண்டுகளின் இறக்குமதிக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கப் பொருட்களுக்கு, குறிப்பாக மதுபானத் துறையில் இந்தியாவின் நியாயமற்ற வரிகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்த ஒரு நாளுக்குப் பிறகு இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
போர்பன் விஸ்கியின் அடிப்படை சுங்க வரி இப்போது 50% ஆகவும், கூடுதலாக 50% வரியுடன் மொத்தம் 100% ஆகவும் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கு முன்பு, இந்த இறக்குமதிகளுக்கு 150% வரி விதிக்கப்பட்டது. ஆனால், இந்த வரி குறைப்பு போர்பனுக்கு மட்டுமே பொருந்தும், மற்ற மதுபான பொருட்களுக்கான கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை. அவற்றிற்கு தொடர்ந்து 150% வரி விதிக்கப்படும். ஆனால் டிரம்ப்பின் இந்த எச்சரிக்கைக்கு இந்தியா பதிலடி தரவில்லை.
காங்கிரஸ் கண்டனம்
அமெரிக்க அதிபர் டிரம்ப் கொடுத்த அழுத்தம் காரணமாக மோடி அடிபணிந்து விட்டார் என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக புகார் வைத்துள்ளது. 140 கோடி இந்தியர்கள் அமெரிக்க அதிபர் டிரம்ப் மூலம் நமது சொந்த அரசின் வர்த்தகக் கொள்கையை அறிந்து கொள்ள வேண்டிய கொடுமை உள்ளது. இதை இந்தியாதான் சொல்ல வேண்டும். ஆனால் அமெரிக்கா சொல்லி நாம் தெரிந்து கொள்ள வேண்டி உள்ளது.
பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான டொனால்ட் டிரம்பின் அழுத்தத்தின் பேரில் இந்தியா கட்டணங்களை குறைக்க முடிவு எடுத்ததா? வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா சென்றுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இப்படி முடிவெடுக்க என்ன காரணம். அழுத்தத்தின் கீழ் சிக்கி, வேறு வழி இல்லாமல் அமெரிக்கா காட்டிய இடத்தில் மோடி கையெழுத்திட்டாரா? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications