சென்னை பஸ் பயணிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பு! பேருந்து நிறுத்தங்களில் வருகிறது மிகப்பெரிய மாற்றம்
சென்னை: சென்னையில் உள்ள பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் இனி பஸ் வரும் நேரத்தை அறிந்துகொள்ள வசதியாக டிஜிட்டல் தகவல் பலகை அமைக்கப்படுகிறது என்றும் இதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது என்றும் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மாநகர போக்குவரத்து கழகத்தால் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை நகரம் முழுவதும் தினமும் நுற்றுக்கணக்கான பேருந்துகள் இயங்கி வருகின்றன. இந்த பேருந்துகளின் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்து வருகிறார்கள். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள், அலுவலகம் செல்வோர் என பலரும் பேருந்து சேவையை நம்பியுள்ளனர்.

காலை மற்றும் மாலை போன்ற பீக் நேரங்களில் பேருந்துகள் எப்போது, போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளும் என்றே தெரியாத நிலை இருக்கும். இதனால் பயணிகள் பேருந்து வரும் திசையை நோக்கி பார்த்துக்கொண்டே இருப்பதை பேருந்து நிறுத்தங்களில் தினமும் காண முடியும். நேரம் செல்ல செல்ல பேருந்து எங்கு வருகிறதோ.. சரியான நேரத்தில் வந்துவிடுமா என்றெல்லாம் யோசிக்க தூண்டும்.
"சென்னை பஸ்" செயலி: பஸ் குறிப்பிட்ட நேரத்தில் வந்தால்தானே... அலுவலகத்திற்கு செல்ல முடியும் என பதைபதைப்புடன் செல்போனில் நேரத்தையும் பேருந்தையும் எதிர்பார்த்துக்கொண்டே இருப்பார்கள். பயணிகளின் இந்த பரிதவிப்பை போக்க அண்மையில் 'சென்னை பஸ்' என்ற செயலியை போக்குவரத்து துறை அறிமுகம் செய்தது.
பஸ்கள் எங்கு வருகிறது: இந்த செயலியில் நகரப் பேருந்துகளின் எண்கள் பதிவு செய்தால் அது எந்த இடத்தில் தற்போது வந்து கொண்டிருக்கிறது நீங்கள் நிற்கும் பேருந்து நிலையத்திற்கு வந்து சேர இன்னும் எத்தனை நிமிடங்கள் ஆகும் என்பதை துல்லியமாக அறிந்துகொள்ளலாம். இந்த திட்டம் கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. அரசு விரைவு பேருந்துகள் வரும் இடத்தையும் இந்த செயலி மூலமாக அறிந்து கொள்ளமுடியும்.
இந்த செயலில் பஸ்கள் எங்கு வருகிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும் என்பதால் முன் கூட்டியே திட்டமிட்டு அதற்கேற்றார் போல் கிளம்பி வர முடியும். இந்த செயலியில் அவசர மற்றும் பாதுகாப்பு செய்தியை தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு உடனே ஒரு பொத்தான் (SOS) அழுத்தி தெரிவித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.
டிஜிட்டல் தகவல் பலகை: இந்த செயலி பயணிகளுக்கு பெரும் வசதியாக உள்ள நிலையில், தற்போது பேருந்து நிலையங்களிலும் பஸ் வரும் இடத்தை அறிந்து கொள்ளும் வசதியை கொண்டு வர மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளதாம். அதாவது, பேருந்து நிறுத்தங்களில் அடுத்து வரும் பேருந்து எப்போது வரும் என மக்கள் அறியும் வகையில், டிஜிட்டல் தகவல் பலகைகளை பொருத்த சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
பணிகள் நடைபெற்று வருகிறது: முதல் கட்டமாக 50 பேருந்துகளில் இதற்கான கருவியை பொருத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் சென்னை முழுவதும் அமலுக்கு வரும் என்றும் மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications