நாடு முழுக்க வரும் டிஜிட்டல் ரேஷன் விநியோகத் திட்டம்.. மொபைல் வாலட்டில் வரும் பணம்.. முழு விவரம்
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் ரேஷன் அட்டை தாரர்களுக்கு மிகவும் ஏழ்மையான குடும்பங்களுக்கு கீழ் மாதம் 35 கிலோ அரிசிக்கான தொகையாக குடும்பம் ஒன்றுக்கு ரூ.1,559.95-ம், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு கீழ் தலா ஒருவருக்கு மாதாந்திர 5 கிலோ அரிசிக்கான தொகையாக ரூ.222.85-ம் வழங்கப்படுகிறது. ஆனால் இனி பணமாக மக்களுக்கு கிடைக்காது டிஜிட்டல் ரேஷன் விநியோகத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இனிமேல் அந்த பணம் கூப்பன்போல் மத்திய அரசு அனுப்பும். அதனை வைத்து பொருள் மட்டுமே வாங்க முடியாது. வேறு எதற்கும் பயன்படுத்த முடியாது. அந்த திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என புதுச்சேரியில் நடந்த விழாவில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறினார்.
புதுச்சேரி மாநிலத்தில் ரேஷன் அட்டை தாரர்களுக்கு ஏ.ஒய் (மிகவும் ஏழ்மையான குடும்பம்) திட்டத்தின் கீழ் மாதம் 35 கிலோ அரிசிக்கான தொகையாக குடும்பம் ஒன்றுக்கு ரூ.1,559.95-ம், பி.எச்.எச் (வறுமைக்கோட்டுக்கு கீழ்) திட்டத்தின் கீழ் தலா ஒருவருக்கு மாதாந்திர 5 கிலோ அரிசிக்கான தொகையாக ரூ.222.85-ம் மத்திய அரசின் பிரதான் மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா திட்டம் மூலம் வழங்கி வருகிறது.

இந்த நிலையில் மத்திய அரசின் உதவித்தொகையானது உணவுப்பொருள் வாங்காமல் மற்றவைக்கு பயன்படுத்தப்படுவதாக புகார்கள் அதிகரித்தது. இதைத் தடுக்க உணவுப்பொருட்கள் மட்டும் பெறும் வகையில் பயனாளிகளுக்கு டிஜிட்டல் நாணயம் வழங்க முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி இந்த திட்டம் குஜராத் மாநிலத்தில் முதலில் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.
புதுச்சேரியில் விழா
அடுத்தப்படியாக புதுச்சேரி மாநிலத்தில் அமல்படுத்தப்படுகிறது. இதற்காக மத்திய அரசின் நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத்துறை சார்பில் புதுச்சேரியில் டிஜிட்டல் ரேஷன் விநியோகத் திட்டத் தொடக்க விழா கம்பன் கலையரங்கத்தில் நேற்று நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கலந்துகொண்டு டிஜிட்டல் ரேஷன் விநியோகத் திட்டத்தை தொடங்கிவைத்தார்.
மத்திய அமைச்சர் பேச்சு
விழாவில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பேசுகையில், "நமது நாட்டில் டிஜிட்டல் புரட்சியை பிரதமர் மோடி உருவாக்கி உள்ளார். இதில் டிஜிட்டல் ரேஷன் விநியோகத் திட்டம் ஒரு மைல்கல். ஒவ்வொரு ரூபாயும் சரியான பயனாளிகளுக்கு சென்றடைய வேண்டும். வெளிப்படைத்தன்மையான இந்தத் திட்டத்தில் பணத்தை தவறாக பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது. .
குஜராத் புதுச்சேரி
இந்தத் திட்டம் முதன் முதலாக குஜராத்தில் தொடங்கப்பட்டது. அடுத்து புதுச்சேரியிலும் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்து சண்டிகரிலும் செயல்படுத்த உள்ளோம். மொத்தம் 5 இடங்களில் செயல்படுத்தி திட்டத்தை ஆய்வு செய்து, பின்னர் நாடு முழுவதும் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்று கூறினார்.
'e-ரூபாய்'
நாடு முழுவதும் டிஜிட்டல் ரேஷன் விநியோகத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், பயனாளிகளுக்கு நேரடியாகக் கையில் பணமோ அல்லது வங்கி கணக்கில் சாதாரணப் பணமோ வராது. அதற்குப் பதிலாக, 'e-ரூபாய்' எனப்படும் டிஜிட்டல் டோக்கன்கள் உங்கள் மொபைல் வாலட்டிற்கு வரும். மத்திய ரிசர்வ் வங்கி (RBI) மூலம் வழங்கப்படும் இந்த டிஜிட்டல் டோக்கன்கள் ஒரு 'டிஜிட்டல் கூப்பன்' போலச் செயல்படும்.
பொருட்களாகவே பெறலாம்
இந்த டோக்கன்களைக் கொண்டு நீங்கள் ரேஷன் கடையிலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட கடைகளிலோ பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம். நீங்கள் வாங்கிய பொருளுக்கான தொகையை அந்த டோக்கன் மூலம் செலுத்தும்போது, அரசு நேரடியாகக் கடைக்காரருக்குப் பணத்தை அனுப்பிவிடும். இந்தத் திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், அந்த டிஜிட்டல் பணத்தை ரேஷன் பொருட்கள் வாங்க மட்டுமே பயன்படுத்த முடியும். வேறு எதற்கும் (உதாரணமாக மொபைல் ரீசார்ஜ் செய்யவோ அல்லது வேறு செலவுகளுக்கோ) அந்தப் பணத்தைப் பயன்படுத்த முடியாது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications