Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்லம் பகுதிகளிலிருந்து வந்தால் ரவுடிகளா? அப்போ நான் ரவுடியா? வெளுத்து வாங்கிய பா.ரஞ்சித்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்லம் பகுதிகளிலிருந்து வந்தால் ரவுடிகளா என இயக்குநர்பா.ரஞ்சித் கடும் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற மாணவர்களின் புகைப்படக் கண்காட்சி தொடக்க விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித் கலந்து கொண்டார். புகைப்படங்களைப் பார்த்து மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

Director Pa.Ranjith asks that are people who live in Slum area rowdies?

இதைத் தொடர்ந்து இந்த விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில், நான் அரசுப் பள்ளி, அரசு கல்லூரி மாணவன்தான். அரசுப் பள்ளியில் படிப்பது என்பதையே தாழ்வு மனப்பான்மையாக கருதும் சூழல் இந்த சமூகத்தில் உள்ளது.

நான் படித்த பள்ளியில் ஒருவர் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றாலே பெரிய விஷயம். 12 ஆம் வகுப்பில் ஆங்கில பாடத்தில் நான் ஃபெயில் ஆகியிருந்தேன். படிக்க வேண்டும் என்ற ஆசை என்னிடம் இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் படிக்கும் சூழல் இல்லை. நான் பள்ளியில் படிக்கும் போது படிப்பதைக் காட்டிலும் வரைவதுதான் எனக்கு மிகவும் பிடிக்கும்.

கணக்கு கூட எழுத மாட்டேன். வரைந்து கொண்டே இருப்பேன். அரசு பள்ளியில் ஆசிரியர்கள் நன்றாக பழகுவார்கள், மாணவர்களை ஊக்குவிப்பார்கள். அரசு பள்ளிக் கூடங்களில் படித்தது எனக்கு நம்பிக்கையை கொடுத்தது. நான் படித்து முடித்துவிட்டு என்னவாக ஆக வேண்டும் என்பதை அரசு பள்ளியும் அரசு கல்லூரியுமே முடிவு செய்தன.

என்னுடைய மெட்ராஸ் படத்தின் கதையை பலரிடம் சொல்லும் போது அவர்கள் என்னிடம் டார்க்கா உள்ளது என்றனர். சேரிப்பகுதி கதைகள் என்றாலே டார்க் கதைகள் என்ற மனநிலை அவர்களிடம் உள்ளது. நானும் அங்கேதான் வாழ்ந்திருக்கிறேன். எனது வாழ்க்கை சந்தோஷமாக இருந்திருக்கிறது. வண்ணமயமான வாழ்க்கையாகவே இருந்தது.

ஆனால் அந்த பகுதி தொடர்பான கதைகளை சொல்ல போகும் போது இது சோகமான கதைகள் என்ற ஸ்டீரியோ டைப் எண்ணங்கள் இருக்கின்றன. அந்த எண்ணங்களை உடைப்பதை பெரிய விஷயமாக நான் பார்க்கிறேன். அதனால்தான் மெட்ராஸ் படத்தில் மக்களின் வாழ்வியலை வண்ணமயமாக காட்ட விரும்பினேன்.

படத்தில் எந்த வண்ணங்களும் இருக்காது. அந்த சுவரில் கூடுதலாக பெயிண்ட் கூட இருக்காது. அங்கிருக்கும் மனிதர்களை வைத்து கூடுதலாக எந்த பூச்சும் இல்லாமல் கூடுதல் லைட்டை கூட பயன்படுத்தாமல் இயல்பானதை காட்டினேன். மெட்ராஸ் படத்திற்கு பிறகு அதைப் பார்க்கும் கோணம் மாறியது.

அட்டக்கத்தி படத்தை பார்த்த ஒருவர் ஆரண்ய காண்டம் போல் படம் இருப்பதாக தெரிவித்தார். இரண்டும் வெவ்வேறு கதை அம்சம் கொண்டவை. அப்படியிருந்தாலும் களத்தை வைத்து ஒரே மாதிரி படம்தான் என புரிந்து கொள்கிறார்கள். அந்த கோணத்தை மாற்றுவதுதான் முக்கியம் என கருதுகிறேன். சென்சார் போர்டு, மெட்ராஜ் படம் பார்த்துவிட்டு இதற்கு ஏ பிளஸ் சர்டிபிகேட் தருகிறோம் என்றனர்.

நான் ஏன் என கேட்டேன். அதற்கு அவர்கள் ஸ்லம் மக்களைப் பற்றிதானே படம் எடுத்துள்ளீர்கள். அந்த மக்களுக்கு மட்டும் போட்டுக் காட்டுங்கள். அதற்கான சான்றிதழை தருகிறோம். மேலும் இது ரவுடிக்களுக்கான படம் என்றும் தெரிவித்தனர். இவர்கள் சொல்வதை கேட்டு எனக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.

நீங்கள் எப்படி ஸ்லம் பகுதியில் வாழும் மக்களை ரவுடியாக கருதுவீர்கள். நானும் அங்கிருந்துதான் வந்தேன். அப்போ நான் ரவுடியா என கேட்டு சண்டையிட்டேன். அதன் பின்னர்தான் படமே வெளியானது. இதைத் தொடர்ந்து மெட்ராஸ் படம் புதிய கோணத்தை இந்திய சினிமாவில் உருவாக்கித் தந்தது. மக்களுக்கும் படம் பிடித்து போனது.

ப்ளூ ஸ்டார் படத்தை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த கோணத்தை இங்கிருக்கும் புகைப்படங்களும் மாற்றிக் காட்டியுள்ளன. இந்த புகைப்படங்கள் அழகாக மாறியிருக்கின்றன. இந்த குழந்தைகள் பொது புத்தியின் கோணங்களை உடைக்கும் புகைப்படங்களை எடுத்துள்ளனர். பள்ளிக் கல்வித் துறையின் முன்னெடுப்பு பாராட்டுதலுக்குரியது என தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+