Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லாஸ்ட் சான்ஸ்! “முன்பதிவு தேவையில்லை”.. சென்னையில் இருந்து இன்று இரவு கிளம்பும் 3 சிறப்பு ரயில்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்காக சென்னையில் இருந்து முன்பதிவு இல்லா 3 சிறப்பு ரயில்கள் இன்று இரவு இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து இன்று இரவு கிளம்பும் முன்பதிவு இல்லாத 3 சிறப்பு ரயில்களின் விவரங்களைப் பார்க்கலாம்.

நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. வெளியூர்களில் வசிக்கும் ஏராளமான மக்கள் தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்குச் சென்று வருகின்றனர். இதன் காரணமாக, கடந்த சில நாட்களாகவே பேருந்துகள், ரயில்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. இதற்காக சிறப்பு ரயில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தமிழக அரசு சார்பாக 14 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

chennai train diwali 2024 2024

சென்னையில் இருந்து 3 இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதே போல ரயில்களில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பாகவே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து விட்டது. முன்பதிவில்லா ரயில் பெட்டிகளும் கூடுதலாக இணைக்கப்பட்டு, ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் திருச்சி வரை ரயில் கிடைத்தால் கூட போதும், அதன்பிறகு பேருந்துகளில் போய்க் கொள்ளலாம் என நினைத்துள்ளனர். இந்நிலையில், தீபாவளியை ஒட்டி சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக முழுக்க முழுக்க முன்பதிவு இல்லா 3 சிறப்பு ரயில்கள் இன்று இரவு இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருச்சி வரை 2 ரயில்களும், கோவைக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகிறது.

1. (ரயில் எண்: 06155) எழும்பூரில் இருந்து இரவு 9.10 மணிக்கு விழுப்புரம், சிதம்பரம், தஞ்சை, வழியே திருச்சிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இன்று (அக்.30) இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு நாளை அதிகாலை 5.45 மணிக்கு திருச்சி சென்றடையும்.

தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்துார், திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, கடலுார், பரங்கிபேட்டை, சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், மயிலாடுதுறை, ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர் வழியாக திருச்சி சென்று சேரும்.

மறுமார்க்கத்தில் நாளை பகல் 12 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும் ரயில் இரவு 8.45க்கு தாம்பரம் வந்தடையும்.

2. (ரயில் எண்: 06157) தாம்பரத்தில் இருந்து இரவு 12.30 மணிக்கு விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர் வழியே திருச்சிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

தாம்பரத்தில் இருந்து இன்று நள்ளிரவு 12.35 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம் வழியாக மறுநாள் காலை 6.30 மணிக்கு திருச்சி சென்றடையும்.

மறுமார்க்கமாக தீபாவளி அக்.31 வியாழன் காலை 9.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், நாளை இரவு 8.15 மணியளவில் தாம்பரம் வந்தடையும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

3. (ரயில் எண்: 06159) சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 10.10 மணிக்கு அரக்கோணம், திருப்பத்தூர், திருப்பூர் வழியே கோவை போத்தனூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று இரவு 10.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 7 மணிக்கு போத்தனூர் சென்றடையும்.

நவ.3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.45 மணிக்கு கோவை போத்தனூரில் புறப்படும் சிறப்பு ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், மொரப்பூர், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஆம்பூர், காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர் வழியாக மாலை 4.50 மணிக்கு சென்ட்ரல் வந்து சேரும்.

இந்த ரயில் 18 பெட்டிகளை கொண்டது என்றும், 16 இரண்டாம் வகுப்பு நாற்காலிகள் பெட்டிகள் கொண்டது என்றும், 2 திவ்யாங்ஜன் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+