விருத்தாசலத்தில் பிரேமலதா, விருதுநகரில் விஜயபிரபாகரன் போட்டி.. தேமுதிக வேட்பாளர்கள் அறிவிப்பு!
சென்னை: திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பாக போட்டியிடும் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த், விருதுநகர் தொகுதியில் விஜயபிரபாகரன், தர்மபுரி தொகுதியில் இளங்கோவன், போளூர் தொகுதியில் சரவணன், திருத்தணி தொகுதியில் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் முதல்முறையாக இடம்பெற்ற தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஏற்கனவே ஒரு ராஜ்ய சபா சீட் அளிக்கப்பட்ட நிலையில், அதில் சுதீஷ் போட்டியிட்டு ராஜ்ய சபா எம்பியாகினார். இதையடுத்து தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

இதன்பின் திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எந்த தொகுதிகள் என்ற அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், தொடர்ந்து 164 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டார். அதன்படி தேமுதிகவுக்கு விருத்தாசலம், விருதுநகர், தருமபுரி, குடியாத்தம், சேலம் மேற்கு, போளூர், பல்லாவரம், திருத்தணி, ஓமலூர் மற்றும் மயிலம் உள்ளிட்ட தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில் தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த், விருதுநகர் தொகுதியில் விஜயபிரபாகரன் போட்டியிடுகின்றனர். அதேபோல் தருமபுரி தொகுதியில் இளங்கோவன், சேலம் மேற்கு தொகுதியில் மோகன்ராஜ், ஓமலூர் தொகுதியில் இளங்கோவன் போட்டியிடுவதக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மயிலம் தொகுதியில் எல்.வெங்கடேசன், பல்லாவரம் தொகுதியில் முருகேசன், திருத்தணி தொகுதியில் கிருஷ்ணமூர்த்தி, குடியாத்தம் தொகுதியில் பிரதாப் மற்றும் போளூர் தொகுதியில் சரவணன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் போளூர் தொகுதியில் அமைச்சர் எவ வேலு மகன் கம்பம் போட்டியிடுவதாக பேசப்பட்டு வந்தது.
ஆனால் கடைசி நேரத்தில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டதாக தெரிகிறது. போளூர் தொகுதியின் பொறுப்பாளராக கம்பன் பணியாற்றி வரும் சூழலில், சிட்டிங் எம்எல்ஏ-வான அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் கலசப்பாக்கம் தொகுதிக்கு மாறி இருக்கிறார். இதனால் போளூர் தொகுதியில் தேமுதிக வெல்வதற்கான வாய்ப்புகள் கூடி இருப்பதாக பார்க்கப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications