பல லட்சம் ஃபாலோவர்ஸ்.. விஜயகாந்த் ட்விட்டர் கணக்கின் பெயர் பிரேமலதா என்று மாற்றம்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும் மறைந்த மூத்த அரசியல் தலைவருமான விஜயகாந்தின் ட்விட்டர் (எக்ஸ்) கணக்கு மாற்றப்பட்டு உள்ளது. அவரின் மனைவி பிரேமலதா பெயருக்கு அந்த கணக்கு மொத்தமாக மாற்றப்பட்டு உள்ளது.

கடந்த மாதம் 28ம் தேதி தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் காலமானார். கடந்த சில வாரங்களுக்கு முன்பே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்போதே அவரின் உடல்நிலை மோசமானதாக செய்திகள் வந்தன.

DMDK Founder Vijayakanth Twitter X account name changed into his wife Premalatha name

அவருக்கு இதயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, ரத்த கொதிப்பு, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அவரின் உடலநிலை மோசமாகி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் அவரின் உடல்நிலை அதன்பின் சரியாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் கூட விஜயகாந்த் கலந்து கொண்டார்.

மரணம் பின்னணி: அவருக்கு ஏற்கனவே இதயம் தொடர்பான, நுரையீரல் தொடர்பான பிரச்சனைகள் இருந்துள்ளன. அதை தொடர்ந்து கொரோனா ஏற்பட்டு உள்ளது. ஆனால் மரணத்தின் பின் அது பாசிட்டிவ் ஆக இல்லை. இதனால் அவரின் மரணத்திற்கு கொரோனா காரணம் என்று கூற முடியாது. மரணத்திற்கு பின் செய்யப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் இல்லை.

விஜயகாந்த் நுரையீரல் அழற்சி (pneumonia) காரணமாகவே மரணம் அடைந்து உள்ளார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிகாலையில் நுரையீரல் அழற்சி தீவிரம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் ஆதரவுடன் சிகிச்சை பெற்றிருந்தார். அவருக்கு சுத்தமாக மூச்சு விடும் திறன் இல்லாமல் போய் உள்ளது. கொரோனா + நாட்பட்ட நுரையீரல் பாதிப்பு + நுரையீரல் அழற்சி மூன்றும் சேர்ந்துதான் அவரின் உடல்நிலையை மோசமாக்கி உள்ளது. இதுவே அவரின் மரணத்திற்கும் காரணம் ஆகி உள்ளது.

மறைவு கணக்கு மாற்றம்: நடிகரும் மறைந்த மூத்த அரசியல் தலைவருமான விஜயகாந்தின் ட்விட்டர் கணக்கு மாற்றப்பட்டு உள்ளது. அவரின் மனைவி பிரேமலதா பெயருக்கு அந்த கணக்கு மொத்தமாக மாற்றப்பட்டு உள்ளது.

அந்த கணக்கிற்கு 2 லட்சத்து 33 ஆயிரத்திற்கு 750 பின்தொடர்பாளர்கள் இருந்தனர். இப்போது அந்த கணக்கை அவரின் மனைவி பயன்படுத்தி வருகிறார். பிரேமலதா என்ற பெயரில் கணக்கை மாற்றி பயன்படுத்தி வருகிறார். யாருடைய முடிவின் பெயரில் கணக்கு மாற்றப்பட்டது என்று விவரம் வெளியாகவில்லை.

DMDK Founder Vijayakanth Twitter X account name changed into his wife Premalatha name

அதே சமயம் அவர் மரணித்து கிட்டத்தட்ட 2 வாரங்களில் இப்படி சமூக வலைதள கணக்கு நீக்கப்பட்டு வேறு பெயருக்கு மாற்றப்பட்டு உள்ளது. நெட்டிசன்கள் இடையே, விஜயகாந்த் அனுதாபிகள் இடையே இது கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.

போராட்டம்; இதற்கு இடையில் திமுகவை கண்டித்து ஜன.20ல் தேமுதிக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

திமுகவை அழிக்கவே விஜயகாந்த் கட்சி தொடங்கினார். விஜயகாந்த்தின் மக்கள் பணிகளை அழிக்கத் துடிக்கும் திமுகவினர் மற்றும் அதற்கு துணைபோகும் அரசு அதிகாரிகளை கண்டித்து ஜன.20ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட தேமுதிக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+