சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விஜயகாந்த் பேரை இப்படியா கெடுப்பாங்க... ஒத்த டிவீட்டை போட்டு மொத்தமாக டேமேஜ் செய்த தேமுதிக

Google Oneindia Tamil News

Recommended Video

    ஒத்த டிவீட்டை போட்டு மொத்தமாக டேமேஜ் செய்த தேமுதிக

    சென்னை: கொஞ்சம் கொஞ்சமாக டேமேஜ் பண்ணியது பத்தாமல் ஒரேயடியாக ஒத்த ட்வீட்டை போட்டு மொத்த அதிமுகவுக்கும் அள்ளு தந்துவிட்டது தேமுதிக தரப்பு!

    அதிமுகவுடன் கூட்டணி வைக்க ஒரு அக்கப்போர் நடந்து இறுதியில் சினிமா காட்சி கிளைமாக்ஸ் போல என்னென்னமோ நடந்து கடைசியில் 'சுபம்' என்று முடிந்தது.

    இதையடுத்து பிரச்சாரங்களுக்கு ஆளுக்கு ஒரு பக்கம் கிளம்பி சென்றார்கள். இதில் பெரும்பாலும் அதிமுக, மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களின் பிரச்சாரங்கள் உளறல்களும், சர்ச்சைகளுமாகதான் உள்ளன!

    எங்காச்சும் தனக்குத்தானே ஆரத்தி எடுத்து பொட்டையும் வச்சுப்பாங்களா.. தமிழிசைக்கு நடந்திருக்கே! எங்காச்சும் தனக்குத்தானே ஆரத்தி எடுத்து பொட்டையும் வச்சுப்பாங்களா.. தமிழிசைக்கு நடந்திருக்கே!

    பிரேமலதா

    பிரேமலதா

    அதிமுக மானத்தை வாங்க திண்டுக்கல் சீனிவாசன் என்றால், தேமுதிக மானத்தை வாங்க பிரேமலதா போதும்! செல்லும் இடமெல்லாம் ஏதாவது ஒரு உளறல் பேச்சு! சென்ற முறை தேர்தலில் பிரேமலதாவின் பிரச்சாரம் பிரதமர் மோடியை ஈர்க்கும்படியாக இருந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் இந்த முறை பிரேமலதாவுக்கு என்ன ஆனதோ தெரியவில்லை. ஒரு கட்சியின் பிரச்சார பீரங்கியே இப்படியா பேசுவது என்ற கேள்வி எழுந்துள்ளது!

    ராஜ்நாத் குமார்

    ராஜ்நாத் குமார்

    இதனிடையே விஜயகாந்த் ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் போடப்பட்டுள்ளது. அதில், "தேனி நாடாளுமன்ற தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் திரு.ராஜ்நாத் குமார் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்திற்கு தேனி அல்லிநகரம் பகுதியில்,தேமுதிக பொருளாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் வாக்கு சேகரித்தார். அப்போது எடுத்த படங்கள்" என்று பதிவிடப்பட்டுள்ளது.

    ஓபிஎஸ் மகன்

    ஓபிஎஸ் மகன்

    சத்தியமாக இந்த ட்வீட்டை விஜயகாந்த் போட்டிருக்கவே முடியாது.. அப்படியானால் அவர் பெயரில் இதை பதிவிட்டது அவரது குடும்ப உறவுகளாகத்தான் இருக்கும்! துணை முதல்வர் மகன் பெயர் ரவீந்திரநாத் குமார்! ஆனால் குறிப்பிட்டுள்ளதோ ராஜ்நாத்குமார்! முக்கியமான தொகுதியான தேனியில், அதுவும் ஓபிஎஸ் மகனின் பெயர்கூட தெரியாமல் இருப்பது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது!

    போட்டோக்கள்

    போட்டோக்கள்

    எப்பவுமே பெயர்களை நினைவில் வைத்து கொள்வது அவசியம் இல்லைதான் என்றாலும், அந்த தொகுதிக்குள் நுழைந்து வாய்கிழிய பேசிவிட்டு அதற்கு பிறகுதான் ட்விட்டரில் அந்த போட்டோக்களை ஷேர் செய்கிறார்கள். அப்படிக்கூட வேட்பாளர் பெயர் தெரியாமல் போனதுதான் அதைவிட விசித்திரமாக உள்ளது!

    கேப்டன் பெயர்

    கேப்டன் பெயர்

    இப்படி தப்பு தப்பாய் வேட்பாளரை பெயரை பதிவிடுவது அதிமுகவுக்கு எரிச்சலை தருவதற்கா? அல்லது வேண்டுமேன்றே இப்படி செய்யப்பட்டதா என்று தெரியவில்லை. ஆனால் இதை ஏன் கேப்டனின் பெயரில் உள்ள ட்விட்டரில் போட வேண்டும் என்பதுதான் பிரதான கேள்வியே.

    கெட்ட பெயர்

    ஏற்கனவே அவர் கஷ்டப்பட்டு சேர்த்து சம்பாதித்து வைத்த பெயரை ஒட்டுமொத்தமாக டேமேஜ் செய்து விட்டார்கள். இதில் அவரது பெயரில் தப்பு தப்பாக ட்வீட் போட்டு இன்னும் எதற்காக அவரை சீண்ட வேண்டும்? எதற்காக அவருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆதங்கம் எழுந்துள்ளது!

    ப்ளீஸ்.. வேண்டாம்!

    ப்ளீஸ்.. வேண்டாம்!

    சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் சரி.. தங்களது அரைகுறைகளை கேப்டன் மீது தயவு செய்து திணிக்க வேண்டாம் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது!

    English summary
    The DMDK has wrongly commented the name of the Theni ADMK Candidate Rajnath Kumar instead of Raveendra nath
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X